என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது.
    • முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

    சேலம்:

    8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.

    இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி மாலை தொடங்கும் முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

    இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

    • நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • பரோடா, ராஜ்கோட், இந்தூர், ஆகிய இடங்களில் ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது. 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு இந்த தொடர் நடைபெற்றது. ஜனவரி 11-ந்தேதி இந்த போட்டி தொடர் தொடருகிறது.

    இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து மோதும் போட்டிகளுக்கான இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது. பரோடா, ராஜ்கோட், இந்தூர், ஆகிய இடங்களில் ஒருநாள் போட்டிகளும், நாக்பூர், ராய்ப்பூர் கவுகாத்தி, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 20 ஓவர் ஆட்டங்களும் நடைபெறும்.

    • பவுமா 2023-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்றார்.
    • டெஸ்ட் போட்டியில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

    லண்டன்:

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் பெற்றது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னும், தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 207 ரன் எடுத்தது.

    இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன் இலக்காக இருந்தது. தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டை இழந்து இந்த ரன்னை எடுத்தது. தொடக்க வீரர் மர்க்ராம் 136 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். 27 ஆண்டுகளுக்க பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு ஐ.சி.சி. கோப்பை கிடைத்துள்ளது. கடைசியாக 1998-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்று இருந்தது. அதற்கு பிறகு தற்போது தான் அந்த அணி ஐ.சி.சி. பட்டத்தை வென்றுள்ளது.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா புதிய வரலாறு படைத்தார். அதோடு அவர் கேப்டன் பதவியிலும் புதிய சாதனை நிகழ்த்தினார்.

    பவுமா 2023-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்றார். அவர் தலைமையில் 10 டெஸ்டில் விளையாடி 9-ல் வெற்றி கிடைத்தது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. ஒரு டெஸ்டில் கூட தோற்கவில்லை. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

    அவர் 104 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். 1920-21 ஆண்டுகளில் தோல்வியை தழுவாமல் 8 டெஸ்டில் வெற்றி பெற்றார். பவுமா தோல்வியை சந்திக்காமல் 9 டெஸ்டில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.

    • ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பை வென்றது.
    • ஆர்சிபி வீரர்களுக்கு பெங்களூருவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பை வென்றது. இதனை ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் கொண்டாடினர்.

    ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதற்காக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டுகளிப்பதற்காக அங்கு மக்கள் ஏராளமானோர் கூடினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் நடந்த நெரிசலைப் போல எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கு 3 பேர் கொண்ட குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது.

    பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தலைமையில், பொருளாளர் பிரப்தேஜ் சிங் பாட்டியா, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் குழுவில் உள்ளனர்

    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்
    • ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர்

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    சாம்பியன் பட்டம் வென்ற பின்பு பேசிய கேப்டன் பவுமா, "ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர். சில நாட்களுக்கு முன்பு, நான் ICC HALL OF FAME அறிமுக விழாவில் கலந்து கொண்டேன். இன்னும் சில ஆண்டுகளில் ரபடா அதில் இணைந்துவிடுவார்" என்று புகாலாராம் சூட்டினார்.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாபர் அசாம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார்.
    • 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார்.

    லாகூர்:

    பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியில் பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    பாபர் அசாம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார். அதேபோல் 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார்.

    பாபர் அசாம் ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்களில் ஆடி வருகிறார்.

    இதுதொடர்பாக, பாபர் அசாம் கூறுகையில், சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் இணைவதில் பெருமை கொள்கிறேன். உலகின் சிறந்த டி20 அணிகளில் ஒன்றான சிட்னி சிக்சர்ஸ் உடன் இணைவது உற்சாகம் அளிக்கிறது. அணியின் வெற்றிக்குப் பங்களிப்பதை எதிர்நோக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய மதுரை அணி 20 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.

    சேலம்:

    டிஎன்பிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அதிக் உர் ரகுமார் அரை சதம் அடித்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். பாலசந்தர் அனிருத் 31 ரன்கள் எடுத்தார்.

    திண்டுக்கல் அணி சார்பில் பெரியசாமி, சந்திரசேகர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி பொறுப்புடன் ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் 49 ரன்னில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    ஷிவம் சிங் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 12.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

    • மார்கிரம் சதத்தால் 282 இலக்கை 5 விக்கெட் இழப்பில் எட்டியது.
    • 1998-க்குப் பிறகு ஐசிசி டிராபியை வென்று சாதனைப் படைத்துள்ளது.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயித்து. முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன மார்கிரம், 2ஆவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி 136 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

    தென்ஆப்பிரிக்கா அணி 1998-க்குப் பிறகு முதன்முறையாக ஐசிசி டிராபியை வென்று சாதனைப்படைத்துள்ளது. அந்த அணிக்கு 3.6 மில்லியன் டாலர் (31.05) கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 2ஆவது இடம் பிடித்த ஆஸ்திரேலியாவுக்கு 2.1 மில்லியன் டாலர் (18.63 கோடி ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது.

    • பவர்பிளேயில் 55 ரன்கள் குவித்தது.
    • ஆதீக் உர் ரஹ்மான் அரைசதம் விளாசினார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டி சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சியாசெம் மதுரை பாந்தர்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மதுரை பாந்தர்ஸ் அணியின் ராம் அரவிந்த், பாலச்சந்தர் அனிருத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அரவிந்த் 11 பந்தில் 8 ரன்களும், அனிருத் 24 பந்தில் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனால் பவர்பிளேயில் மதுரை 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் அடித்திருந்தது. அடுத்து வந்த கேப்டன் சதுர்வேத் 22 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    4ஆவது வீரராக களம் இறங்கிய ஆதீக் உர் ரஹ்மான் ஒரு பக்கம் நிற்க, மறுபக்கம் அடுத்தடுத்து விக்கெட் விழத் தொடங்கியது. இதனால் மதுரை அணியின் ரன் குவிப்பில் தொய்வு ஏற்பட்டது.

    கணேஷ் (0), சரத் குமார் (3), முருகன் அஸ்வின் (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 18 ஓவர் முடிவில் மதுரை 6 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.

    19 ஓவரில் 8 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரின் 2ஆவது பந்தை சிக்சருக்கு தூக்கி ஆதீக் உர் ரஹ்மான் அரைசதம் அடித்தார். 41 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 19 ரன்கள் அடிக்க மதுரை பாந்தர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது.

    • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
    • தென் ஆப்பிரிக்கா அணியில் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என இ டஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    இதுவரை டெம்பா தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தென் ஆப்பிரிக்கா அணியில் 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு, அந்த அணியில் 6 வீரர்கள் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என ஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிமுறையின்படி தான் ரபடா , கேப்டன் பவுமா, லுங்கி இங்கிடி போன்ற கறுப்பின வீரர்கள் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    பவுமா தலைமையில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.

    இதனையடுத்து, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு இருப்பதால்தான் அந்த அணியால் ஐசிசி கோப்பையை வெற்றி பெற முடியவில்லை என்று பலரும் பவுமாவை விமர்சித்தனர்.

    குறிப்பாக நிறம், உயரம் உள்ளிட்டவற்றால் பவுமா இணையத்தில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார்.

    இந்நிலையில், டெம்பா பவுமாவை விமர்சித்தவர்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று அவர் பதிலடி கொடுத்துள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    முன்னதாக தனது பெயர் குறித்து பேசிய பவுமா, "என்னுடைய பாட்டி எனக்கு டெம்பா என்று பெயர் வைத்தார். அதற்கு நம்பிக்கை என்று அர்த்தம்" என கூறினார். அந்த நம்பிக்கை தான் தென் ஆப்பிரிக்கா அணியின் 27 ஆண்டு கால ஏக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளது. 

    • பாபா அபராஜித் 26 பந்தில் 48 ரன்கள் விளாசினார்.
    • விஜய் சங்கர் 19 பந்தில் 34 ரன்கள் அடித்தார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 10ஆவது போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் 144 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களம் இறங்கியது. கே. ஆஷிக், மோகித் ஹரிகரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆஷிக் 22 பந்தில் 35 ரன்களும், ஹரிகரன் 24 பந்தில் 21 ரன்களும் சேர்த்தனர்.

    அதன்பின் 3ஆவது விக்கெட்டுக்கு பாபா அபராஜித் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபா அபராஜித் 26 பந்தில் 48 ரன்களும், விஜய் சங்கர் 19 பந்தில் 34 ரன்களும் விளாசி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 15.1 ஓவரிலேயே 146 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 போட்டியில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. சேலம் அணியும் 3 வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் 2ஆவது இடத்தில் உள்ளது.

    கோவை அணி இதுவரை விளையாடி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

    • 1998ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தது.
    • அதன்பின் பிறகு தற்போதுதான் ஐசிசி நடத்தும் தொடரில் சாம்பியனாகியுள்ளது.

    உலக கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளில் ஒன்று தென்ஆப்பிரிக்கா. ஐசிசி டிராபியில் சிறப்பாக விளையாடி வரும். ஆனால் கடைசி கட்ட சொதப்பல் அல்லது மழை போன்ற காரணத்தால் தோல்வியை தழுவி ஏமாற்றம் அடையும்.

    இதனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. கடந்த 1998-ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. சாம்பியன்ஸ் டிராபியில் குறிப்பிட்ட அணிகள் மட்டுமே விளையாடுவதால், அது மிகப்பெரிய அளவில் எடுத்துக் கொள்ளுவதில்லை.

    இதனால் தென்ஆப்பிரிக்கா ஐசிசி டிராபியை வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்த நிலையில்தான் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    டெம்பா தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி தோல்வி அடையாமல் இந்த சாதனையைப் படைத்துள்ளது.

    ×