என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல் 2025: கோவை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழத்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
- பாபா அபராஜித் 26 பந்தில் 48 ரன்கள் விளாசினார்.
- விஜய் சங்கர் 19 பந்தில் 34 ரன்கள் அடித்தார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 10ஆவது போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் 144 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களம் இறங்கியது. கே. ஆஷிக், மோகித் ஹரிகரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆஷிக் 22 பந்தில் 35 ரன்களும், ஹரிகரன் 24 பந்தில் 21 ரன்களும் சேர்த்தனர்.
அதன்பின் 3ஆவது விக்கெட்டுக்கு பாபா அபராஜித் உடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபா அபராஜித் 26 பந்தில் 48 ரன்களும், விஜய் சங்கர் 19 பந்தில் 34 ரன்களும் விளாசி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 15.1 ஓவரிலேயே 146 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 போட்டியில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. சேலம் அணியும் 3 வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் 2ஆவது இடத்தில் உள்ளது.
கோவை அணி இதுவரை விளையாடி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.