என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியனான தென்ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
- மார்கிரம் சதத்தால் 282 இலக்கை 5 விக்கெட் இழப்பில் எட்டியது.
- 1998-க்குப் பிறகு ஐசிசி டிராபியை வென்று சாதனைப் படைத்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயித்து. முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன மார்கிரம், 2ஆவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி 136 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
தென்ஆப்பிரிக்கா அணி 1998-க்குப் பிறகு முதன்முறையாக ஐசிசி டிராபியை வென்று சாதனைப்படைத்துள்ளது. அந்த அணிக்கு 3.6 மில்லியன் டாலர் (31.05) கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 2ஆவது இடம் பிடித்த ஆஸ்திரேலியாவுக்கு 2.1 மில்லியன் டாலர் (18.63 கோடி ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது.
Next Story






