என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    RCB வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் பலி - 3 பேர் கொண்ட குழுவை அமைத்த BCCI
    X

    RCB வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் பலி - 3 பேர் கொண்ட குழுவை அமைத்த BCCI

    • ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பை வென்றது.
    • ஆர்சிபி வீரர்களுக்கு பெங்களூருவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பை வென்றது. இதனை ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் கொண்டாடினர்.

    ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதற்காக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டுகளிப்பதற்காக அங்கு மக்கள் ஏராளமானோர் கூடினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் நடந்த நெரிசலைப் போல எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கு 3 பேர் கொண்ட குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது.

    பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தலைமையில், பொருளாளர் பிரப்தேஜ் சிங் பாட்டியா, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் குழுவில் உள்ளனர்

    Next Story
    ×