என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
    • டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    சேலம்:

    டி.என்.பி.எல். தொடரின் 15-வது லீக் போட்டி சேலத்தில் நடைபெறுகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, திருச்சி அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வசீம் அகமது 32 ரன்னில் அவுட்டானார். ஜகதீஷ் கவுசிக் 5 ரன்னில் வெளியேறினார். சுஜய் சிவசங்கரன் 25 ரன்னும், ஜாபர் ஜமால் 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சஞ்சய் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய ராஜ்குமார் அதிரடியாக ஆடி 18 பந்தில் அரை சதம் கடந்தார். 17வது ஓவரில் 21 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. ராஜ்குமார் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

    • இரு அணிகளும் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை.
    • தோல்வியடையும் அணி பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 15ஆவது போட்டி சேலத்தில் நடைபெறுகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் லைகா கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இரண்டு அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியடைந்துள்ளது. இதில் தோல்வி பெறும் அணி பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.

    • இலங்கை- வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
    • நஜ்முல் ஹொசைன் சாண்டோ 136 ரன்களுடனும் முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றனர்.

    இதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக ஷாத்மான் இஸ்லாம்- அனமுல் ஹக் ஆகியோர் களமிறங்கினர். இதில் அனமுல் ஹக் டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ஷாத்மான் இஸ்லாம் 14 ரன்னிலும் மோமினுல் ஹக் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ- முஷ்பிகுர் ரஹீம் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசி அசத்தினர்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 292 ரன்கள் எடுத்தது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ 136 ரன்களுடனும் முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    • லீட்சில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற வேண்டும்.
    • ஆடுகளத்தின் தன்மை மாறினால், குல்தீப் யாதவ் , ஜடேஜா இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள்.

    புதுடெல்லி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ந்தேதி லண்டன் லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்தப் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் இடம்பெற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    லீட்சில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற வேண்டும். அவருடன் கண்டிப்பாக ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெற வேண்டும். 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 வேகப் பந்துவீச்சாளர்களு டன் இந்திய அணி களம் இறங்க வேண்டும்.

    ஆடுகளத்தின் தன்மை மாறினால், குல்தீப் யாதவ் , ஜடேஜா இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள். ஆடுகளத்தின் தன்மையில் மாற்றம் இல்லாவிட்டாலும், விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை அவர்களுக்கு உள்ளது. எந்த ஒரு ஆடுகளத்திலும் அவர்களால் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.
    • இந்தத் தொடருக்கு பிறகு நியூசிலாந்து கேப்டன் ஓய்வுபெற உள்ளதாக தெரிவித்தார்.

    வெல்லிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை சோபி டிவைன். இவர் நியூசிலாந்து அணிக்காக 151 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3,990 ரன்னும், 107 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். மேலும், 146 டி20 போட்டிகளில் ஆடி 3,432 ரன்னும், 119 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார்.

    16 வயதில் நியூசிலாந்து அணிக்காக அறிமுகமான சோபி டிவைன் சுமார் 20 ஆண்டுக்கு மேலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில், சோபி டிவைன் இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஓய்வு குறித்து சோபி டிவைன் கூறுகையில், நியூசிலாந்து அணியில் விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன். அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளிப்பேன். டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என தெரிவித்தார்.

    13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

    • முத்தரப்பு தொடரின் இறுதி ஆட்டம் மந்தனாவின் முதலிடத்தை மீண்டும் பெற உதவியது
    • டி20 தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 4வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2019-க்குப் பிறகு முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.

    சமீபத்தில் நடந்த இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்புத் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக விளையாடியது முதலிடத்தை மீண்டும் பெற உதவியது

    தென் ஆப்பிரிக்காவின் லாரா வால்வார்ட், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் எடுத்த 27 மற்றும் 28 ரன்கள் உட்பட 19 மதிப்பீட்டு புள்ளிகளை இழந்தது ஸ்மிருதி மந்தனா முன்னிலை பெற உதவியது.

    இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர்-பிரண்ட் இரண்டாவது இடமும், தென் ஆப்பிரிக்காவின் வால்வார்ட் 3-வது இடமும் பிடித்துள்ளனர்.

    ஒருநாள் தரவரிசை பட்டியலில் மந்தனா தொடர்ந்து முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், டி20 தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 4-வது இடத்தில் உள்ளார்.

    • இந்திய அணியின் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார்.
    • இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி தொடங்குகிறது.

    லண்டன்:

    இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். ஆனாலும், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாட இருக்கிறார்.

    ஓய்வுபெற்ற போதிலும் இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் நடவடிக்கைகளை விராட் கோலி கண்காணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், லீட்சில் தொடக்க ஆட்டத்திற்கு சில நாட்களுக்கு முன் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ரிஷப் பண்ட், சிராஜ் மற்றும் சிலரை லண்டனில் உள்ள தனது வீட்டிற்கு விராட் கோலி அழைத்துள்ளார்.

    கென்ட்டில் நடந்த அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்ததைத் தொடர்ந்து திங்கட்கிழமை இந்தியாவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே வீரர்கள் கோஹ்லியுடனான சந்திப்பிற்கு தயாராக இருந்தனர். இந்தச் சந்திப்பில் வரவிருக்கும் தொடர் பற்றிய பேச்சுவார்த்தைகள் முதல் கில் மற்றும் பண்ட் இளம் அணியை எவ்வாறு அணிதிரட்ட முடியும் என்பது வரை விவாதம் நடைபெற்றது என்றும், இந்த விவாதம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது எனவும் தெரிகிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேத்யூஸ் 16 சதங்களுடன் 8,167 ரன்கள் விளாசியுள்ளார்.
    • பேட்டிங் மட்டுமில்லாமல் பந்து வீச்சிலும் மேத்யூஸ் 120 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இன்று நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ்க்கு சக வீரர்கள் Guard of honour கொடுத்து மரியாதை செலுத்தினர்.

    இவர் 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி (சராசரி: 45), 16 சதங்களுடன் 8,167 ரன்கள் விளாசியுள்ளார். 226 ஒருநாள் போட்டிகள், 5,916 ரன்கள் (சராசரி: 40), 3 சதங்கள் விளாசினார். பந்து வீச்சில் 120 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் 90 டி20 போட்டிகளில் 1,416 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும்.

    இவர் இலங்கை அணிக்காக பல சாதனைகளை புரிந்துள்ளார். அதன்படி, 2014 டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    மேலும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் 2009, 2012 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் இலங்கை அணியின் வீரராக மேத்யூஸ் இருந்தார்.

    2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் லசித் மாலிங்காவுடன் இணைந்து 9-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 132 ரன்கள் என்ற உலக சாதனையை படைத்தார்.

    2014 ஆசியக் கோப்பையை இலங்கை அணி மேத்யூஸ் தலைமையில் கைப்பற்றியது.

    2023 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக "டைம்டு அவுட்" முறையில் ஆட்டமிழந்தவர் என்ற சாதனையயும் மேத்யூஸ் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 போட்டியில் எப்போதாவது ஒருமுறை தான் சூப்பர் ஓவர் வரை ஆட்டம் வரும்.
    • டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட போட்டியாக இப்போட்டி அமைந்தது.

    டி20 போட்டியில் போட்டி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். எப்போதாவது ஒருமுறை தான் சூப்பர் ஓவர் வரை ஆட்டம் வரும். ஆனால் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதிய டி20 போட்டியில் ஒன்றல்ல, இரண்டல்ல, 3 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட போட்டியாக இப்போட்டி அமைந்தது.

    நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதிய டி20 போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை அடித்தது. இதனையடுத்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை அடித்தது. ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

    முதல் சூப்பர் ஓவரில் 2 அணிகளும் தலா 19 ரன்கள் அடிக்க இரண்டாவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அந்த சூப்பர் ஓவரில் இரு அணிகளும் 17 ரன்களை அடித்தது.

    இதனால் 3 ஆவது சூப்பர் ஒவ்வரு நடத்தப்பட்டது. அதில் நேபாளம் அணி முதல் 4 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றது.

    • பாபா அபரஜித் 56 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஸ்வப்னில் சிங் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • களமிறங்கிய திண்டுக்கல் அணி 181 இலக்கை துரத்தியது.

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்றது.

    இன்றைய 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடின.

    இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    சேப்பாக் தொடக்க வீரர்கள் ஆஷிக் 12 ரன்னிலும் மோகித் 4 ரன்னிலும் அடுத்து வந்த ஜெகதீசன் 11 ரன்னிலும் வெளியேறினார்.

    இதனையடுத்து சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் பாபா அபரஜித் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 26 ரன்னில் வெளியேறினார்.

    பாபா அபரஜித் 56 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஸ்வப்னில் சிங் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இம்பேக்ட் பிளேயராக வந்த சுனில் கிருஷ்ணா 18 பந்தில் 32 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 180 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    தொடர்ந்து களமிறங்கிய திண்டுக்கல் அணி 181 இலக்கை துரத்தியது.  தொடக்க ஆட்டக்காரர் சிவம் சிங் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

    எனினும், அடுத்து களமிறங்கிய பாபா இந்திரஜித்துடன் இணைந்த அஸ்வின், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரைசதம் கடந்து அணியை வெற்றிப்பாதைக்கு அருகில் அழைத்துச் சென்றனர். அஸ்வின் 67 ரன்களிலும், பாபா இந்திரஜித் 73 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அஸ்வின் மற்றும் பாபா இந்திரஜித் ஆட்டமிழந்த பிறகு, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி திண்டுக்கல் அணிக்கு அதிர்ச்சியளித்தனர். இதனால், ஒரு கட்டத்தில் எளிதில் வெற்றிபெறும் நிலையில் இருந்த திண்டுக்கல் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில், லோகேஷ் ஒரு ஓவர் மட்டுமே வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது பந்துவீச்சு திண்டுக்கல் அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    • சேப்பாக் அணி தரப்பில் பாபா அபரஜித் 56 ரன்கள் எடுத்தார்.
    • திண்டுக்கல் அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    சேலம்:

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக ஆஷிக் - மோகித் களமிறங்கினர். இதில் ஆஷிக் 12 ரன்னிலும் மோகித் 4 ரன்னிலும் அடுத்து வந்த ஜெகதீசன் 11 ரன்னிலும் வெளியேறினார்.

    இதனையடுத்து விஜய் சங்கர் மற்றும் பாபா அபரஜித் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 26 ரன்னிலும் வெளியேறினார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா அபரஜித் அரை சதம் விளாசி அசத்தினார். அவர் 56 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ஸ்வப்னில் சிங் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து இம்பேக்ட் பிளேயராக வந்த சுனில் கிருஷ்ணா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 18 பந்தில் 32 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 180 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • ஐபிஎல் 2025-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக திக்வேஷ் ரதி அறிமுகமானார்.
    • நோட் புக் கொண்டாட்டத்தின் மூலம் பலமுறை அபராதம் வாங்கினார்.

    நடந்து முடிந்த ஐபிஎல் 2025-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்காக லெக் ஸ்பின்னர் திக்வேஷ் ரதி அறிமுகமானார். இவர் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் மிகவும் பிரபலமானவர். குறிப்பாக அவர் நோட் புக் கொண்டாட்டத்தின் மூலம் பலமுறை அபராதம் வாங்கினார்.

    இந்நிலையில் உள்ளூர் டி20 லீக்கில் ஒரு ஓவரில் 5 பந்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    முன்னதாக, சஹகல் கிரிக்கெட் கிளப் (SCC) முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிவம் சவுத்ரி 42 பந்துகளில் 98 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்கள் விளாசினார்.

    இதனை தொடர்ந்து விளையாடிய ஏபி ரைசிங் அணி 151 ரன்கள் மட்டுமே எடுத்து 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. குறிப்பாக 151 ரன்களுக்கு 5 விக்கெட்டை மட்டும் இழந்த அந்த அணி, 151 ரன்னிலே ஆல் அவுட்டும் ஆனது குறிப்பிடத்தக்கது.

    ×