என் மலர்
கிரிக்கெட் (Cricket)

போட்டியை மாற்றிய லோகேஷ் ராஜ் - திண்டுக்கலை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
- பாபா அபரஜித் 56 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஸ்வப்னில் சிங் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- களமிறங்கிய திண்டுக்கல் அணி 181 இலக்கை துரத்தியது.
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்றது.
இன்றைய 14-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
சேப்பாக் தொடக்க வீரர்கள் ஆஷிக் 12 ரன்னிலும் மோகித் 4 ரன்னிலும் அடுத்து வந்த ஜெகதீசன் 11 ரன்னிலும் வெளியேறினார்.
இதனையடுத்து சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் பாபா அபரஜித் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 26 ரன்னில் வெளியேறினார்.
பாபா அபரஜித் 56 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஸ்வப்னில் சிங் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இம்பேக்ட் பிளேயராக வந்த சுனில் கிருஷ்ணா 18 பந்தில் 32 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 180 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து களமிறங்கிய திண்டுக்கல் அணி 181 இலக்கை துரத்தியது. தொடக்க ஆட்டக்காரர் சிவம் சிங் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
எனினும், அடுத்து களமிறங்கிய பாபா இந்திரஜித்துடன் இணைந்த அஸ்வின், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரைசதம் கடந்து அணியை வெற்றிப்பாதைக்கு அருகில் அழைத்துச் சென்றனர். அஸ்வின் 67 ரன்களிலும், பாபா இந்திரஜித் 73 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அஸ்வின் மற்றும் பாபா இந்திரஜித் ஆட்டமிழந்த பிறகு, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி திண்டுக்கல் அணிக்கு அதிர்ச்சியளித்தனர். இதனால், ஒரு கட்டத்தில் எளிதில் வெற்றிபெறும் நிலையில் இருந்த திண்டுக்கல் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில், லோகேஷ் ஒரு ஓவர் மட்டுமே வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது பந்துவீச்சு திண்டுக்கல் அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.






