என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது.
    • வேகப்பந்து வீச்சாளர் வோக்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது.

    இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத அவரது தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அதன்படி வேகப்பந்து வீச்சாளர் வோக்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி:-

    ஜக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், ஷோயப் பஷீர்.

    • நெல்லை அணி 3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4-வது இடத்தில் உள்ளது.
    • மதுரை அணி 3 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 7-வது இடத்தில் உள்ளது.

    சேலம்:

    8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன.

    இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி 3 ஆட்டங்களில் ஆடி (2 வெற்றி, 1 தோல்வி 4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் மதுரை அணி 3 ஆட்டங்களில் ஆடி (1 வெற்றி, 2 தோல்வி 2 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.  

    • முதல் நாள் முடிவில் வங்கதேச அணி 292 ரன்கள் குவித்தது.
    • வங்கதேச அணி தரப்பில் லிட்டன் தாஸ் 90 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றனர்.

    இதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 292 ரன்கள் எடுத்தது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ 136 ரன்களுடனும் முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சாண்டோ 148 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்பிகுர் 163 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அதனை தொடர்ந்து விளையாடிய லிட்டன் தாஸ் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் 2-ம் நாள் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து 484 ரன்கள் எடுத்தது.

    இலங்கை அணி தரப்பில் அசிதா பெர்னாண்டோ, மிலன் பிரியநாத் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • விராட் கோலியை பார்த்து வியந்துள்ளேன்.
    • சிலரின் ஓய்வு சிலருக்கு வாய்ப்புகளை கொடுக்கும்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்தார். அவரை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு அறிவித்தார்.

    இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த தொடருக்கான முதல் டெஸ்ட் நாளை மறுநாள் (20-ந்தேதி) லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விராட் கோலியை போட்டியாளராக நினைத்ததில்லை என இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:

    விராட் கோலியை நான் எப்போதுமே போட்டியாளராக நினைத்ததில்லை. அவரை பார்த்து வியந்துள்ளேன். களத்தில் எங்களுக்கு இடையே இருக்கும் சண்டையை நான் எப்போதுமே மிஸ் செய்வேன். ஆனால் சிலரின் ஓய்வு சிலருக்கு வாய்ப்புகளை கொடுக்கும்.

    என ஜோ ரூட் கூறினார். 

    • இலங்கை- வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
    • முதல் நாள் முடிவில் வங்கதேசம் அணி 292 ரன்கள் குவித்தனர்.

    வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றனர்.

    இதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 292 ரன்கள் எடுத்தது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ 136 ரன்களுடனும் முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நஜ்முல் 148 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்பிகுர் 150 ரன்கள் விளாசி அசத்தினார். மறுமுனையில் லிட்டன் தாஸ் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்து கூட வீசாமல் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணியின் கில்கிறிஸ்ட் சாதனையை முஷ்பிகுர் ரஹீம் முறியடித்துள்ளார்.

    ரஹீம் 15509 ரன்களுடன் முதல் இடத்திலும் கில்கிறிஸ்ட் 15461 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் 3 முதல் 5 இடங்கள் முறையே டிகாக் (12654), ஜோஸ் பட்லர் (11,881) ஜானி பேர்ஸ்டோவ் (11,581) ஆகியோர் உள்ளனர்.

    • இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து- இலங்கை அணிகள் ஜுன் 12-ந் தேதி மோதுகிறது.
    • இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் ஜூன் 14-ந் தேதி மோதுகிறது.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 26-ந் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 12 அணிகள் பங்கேற்கின்றனர்.

    இந்த தொடரில் அணிகள் இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளுடன் 2 குவிலிபையர் அணிகள் இடம் பெற்றுள்ளனர்.

    பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை ஆகிய 4 அணிகளுடன் 2 குவாலிபையர் அணிகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து- இலங்கை அணிகள் ஜுன் 12-ந் தேதி மோதுகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் ஜூன் 14-ந் தேதி மோதுகிறது.

    2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் முழு அட்டவணை:-

    வெள்ளிக்கிழமை ஜூன் 12: இங்கிலாந்து vs இலங்கை, எட்ஜ்பாஸ்டன்

    சனிக்கிழமை ஜூன் 13: தகுதிச் சுற்று vs தகுதிச் சுற்று, ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானம்

    சனிக்கிழமை ஜூன் 13: ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா, ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானம் 14:30 BST

    சனிக்கிழமை ஜூன் 13: மேற்கிந்திய தீவுகள் vs நியூசிலாந்து, ஹாம்ப்ஷயர் பவுல்

    ஞாயிற்றுக்கிழமை ஜூன் 14: தகுதிச் சுற்று vs தகுதிச் சுற்று, எட்ஜ்பாஸ்டன்

    ஞாயிற்றுக்கிழமை ஜூன் 14: இந்தியா vs பாகிஸ்தான், எட்ஜ்பாஸ்டன்

    செவ்வாய் ஜூன் 16: நியூசிலாந்து vs இலங்கை, ஹாம்ப்ஷயர் பவுல்

    செவ்வாய் ஜூன் 16: இங்கிலாந்து vs தகுதிச் சுற்று, ஹாம்ப்ஷயர் பவுல்

    புதன்கிழமை ஜூன் 17: ஆஸ்திரேலியா vs தகுதிச் சுற்று, ஹெடிங்லி

    புதன் ஜூன் 17: இந்தியா vs தகுதிச் சுற்று, ஹெடிங்லி

    புதன் ஜூன் 17: தென்னாப்பிரிக்கா vs பாகிஸ்தான், எட்ஜ்பாஸ்டன்

    வியாழன் ஜூன் 18: மேற்கிந்திய தீவுகள் vs தகுதிச் சுற்று, ஹெடிங்லி

    வெள்ளி ஜூன் 19: நியூசிலாந்து vs தகுதிச் சுற்று, ஹாம்ப்ஷயர் பவுல்

    சனிக்கிழமை ஜூன் 20: ஆஸ்திரேலியா vs தகுதிச் சுற்று, ஹாம்ப்ஷயர் பவுல்

    சனிக்கிழமை ஜூன் 20: பாகிஸ்தான் vs தகுதிச் சுற்று, ஹாம்ப்ஷயர் பவுல்

    சனிக்கிழமை ஜூன் 20: இங்கிலாந்து vs தகுதிச் சுற்று, ஹெடிங்லி

    ஞாயிற்றுக்கிழமை ஜூன் 21: மேற்கிந்திய தீவுகள் vs இலங்கை, பிரிஸ்டல் கவுண்டி மைதானம்

    ஞாயிற்றுக்கிழமை ஜூன் 21: தென்னாப்பிரிக்கா vs இந்தியா, ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானம்

    செவ்வாய் ஜூன் 23: நியூசிலாந்து vs தகுதிச் சுற்று, பிரிஸ்டல் கவுண்டி மைதானம்

    செவ்வாய் ஜூன் 23: இலங்கை vs தகுதிச் சுற்று, பிரிஸ்டல் கவுண்டி மைதானம்

    செவ்வாய் ஜூன் 23: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், ஹெடிங்லி

    புதன் ஜூன் 24: இங்கிலாந்து vs மேற்கிந்திய தீவுகள், லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்

    வியாழன் ஜூன் 25: இந்தியா vs தகுதிச் சுற்று, ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானம்

    வியாழன் ஜூன் 25: தென்னாப்பிரிக்கா vs தகுதிச் சுற்று, பிரிஸ்டல் கவுண்டி மைதானம்

    வெள்ளி ஜூன் 26: இலங்கை vs தகுதிச் சுற்று, ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானம்

    சனிக்கிழமை ஜூன் 27: பாகிஸ்தான் vs தகுதிச் சுற்று, பிரிஸ்டல் கவுண்டி மைதானம்

    சனிக்கிழமை ஜூன் 27: மேற்கிந்திய தீவுகள் vs தகுதிச் சுற்று, பிரிஸ்டல் கவுண்டி மைதானம்

    சனிக்கிழமை ஜூன் 27: இங்கிலாந்து vs புதியது ஜீலாந்து, ஓவல்

    ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை: தென்னாப்பிரிக்கா vs தகுதிச் சுற்று, லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்

    ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை: ஆஸ்திரேலியா vs இந்தியா, லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்

    செவ்வாய் ஜூன் 30: TBC vs TBC (அரையிறுதி 1), தி ஓவல்

    ஜூலை 2 வியாழக்கிழமை: TBC vs TBC (அரையிறுதி 2), தி ஓவல்

    ஜூலை 5 ஞாயிற்றுக்கிழமை: TBC vs TBC (இறுதி), லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்

    • இங்கிலாந்து ஆடுகளங்கள் வித்தியாசமான சவால்களை கொண்டது.
    • இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம்பெற்று உள்ளார்கள்.

    லண்டன்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் நாளை மறுநாள் (20-ந்தேதி) லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம் என்று வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து ஆடுகளங்கள் வித்தியாசமான சவால்களை கொண்டது. இங்கு விளையாட இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இங்கிலாந்தில் நிலவும் வானிலையை முதலாவதாகக் கூறுவேன். சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சில நேரங்களில் சூரியன் பிரகாசமாக உள்ள நாளாக இருக்கும். வானிலை எப்படி இருப்பினும், வீரர்கள் அதற்கு ஏற்ப தங்களை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டியது இருக்கும்.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம்பெற்று உள்ளார்கள். அணியில் திறமையான வீரர்கள் இடம்பெறுவது எப்போதும் உற்சாகம் அளிப்பதாக இருக்கும். இங்கிலாந்து அணியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய யுக்தியை பின்பற்றி விளையாடி வருகிறார்கள்.

    வெளிநாடுகளில் தொடர்களை கைப்பற்றுவது எப்போதும் சிறப்பானதாக இருக்கும். இங்கிலாந்தில் நாங்கள் தொடரை வென்றால் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் மிகப்பெரிய விஷயமாக இருக்கும். இங்கிலாந்தில் தொடரை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஷ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப்படமாக சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது
    • அஷ்வினின் ஆவணப்படம் நாளை சிஎஸ்கே யூடியூப் சேனலில் வெளியாகிறது.

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் சிஎஸ்கே வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப்படமாக சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது

    இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    நாளை சிஎஸ்கே யூடியூப் சேனலில் இந்த ஆவணப்படம் வெளியாகும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று IPL, TNPL போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறிய அணிகளுக்கான டெஸ்டை 4 நாட்களாக குறைப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.
    • டெஸ்ட் போட்டியை நடத்த சிறிய நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன் சில்) 2019-ம் ஆண்டு அறி முகம் செய்தது. இதுவரை 3 தொடர் முடிந்துள்ளது. நியூசிலாந்து (2019-21), ஆஸ்திரேலியா (2021-23), தென் ஆப்பிரிக்கா (2023-25) ஆகிய நாடுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளன.

    இந்த நிலையில் 2027-29ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறிய நாடுகளுக்கான டெஸ்ட்களை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி. தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதேநேரத்தில் , இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் மாற்றமின்றி வழக்கமான 5 நாட்களுக்கு விளையாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிய நாடுகள் விளையாடும் டெஸ்ட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றுக்கான செலவுகளை குறைக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

    லண்டனின் லாா்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின்போது, 2027-29 டெஸ்ட் தொடரில் சிறிய அணிகளுக்கான டெஸ்டை 4 நாட்களாக குறைப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, ஐ.சி.சி தலைவா் ஜெய் ஷா இந்த முடிவுக்கு தனது ஆதரவை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    தங்களுக்கான அட்ட வணையில் அதிக நாட்களை எடுத்துக் கொள்வதாலும், செலவும் அதிகமாவதாலும் டெஸ்டை நடத்த சிறிய நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.

    ஒரு டெஸ்ட்டுக்கான நாட்களை 5-க்கு பதிலாக 4-ஆக குறைக்கும்போது, 3 போட்டி கொண்ட தொடரை 3 வாரங்களுக்கு உள்ளாக முடிக்க இயலும். இது, அந்த நாடுகள் டெஸ்டை நடத்த உந்துதல் அளிக்கும். குறைக்கப்படும் ஒருநாளின் ஆட்டநேரத்தை சமன் செய்ய ஒரு நாளுக்குள் வீசப்படும் ஓவர்களின் எண்ணிக்கையை 90-ல் இருந்து 98 ஆக அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ரிஷப் பண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை தான் நான் அதிகம் நேசிக்கிறேன்.

    இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ரிஷப் பண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பும்ராவிற்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் நியமிக்க பி.சி.சி.ஐ. அணுகியதாகவும் ஆனால் தான் அதை வேண்டாம் என்று நிராகரித்து விட்டதாக பும்ரா தெரிவித்துள்ளார்.

    ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் உடனான உரையாடலின் போது, பும்ரா இவ்வாறு தெரிவித்தார்.

    அந்த பேட்டியில் பேசிய அவர், "ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்த தன்னை கேப்டன் பதவியில் நியமிக்க பி.சி.சி.ஐ. அணுகியது. இருப்பினும் பணிச்சுமை மற்றும் அடிக்கடி காயம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு அந்த வாய்ப்பை தான் நிராகரித்தேன்.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுவதும் என்னால் விளையாட முடியுமா என்ற சந்தேகம் இருக்கும்போது, நான் எப்படி கேப்டன்சி செய்ய முடியும்? 3 போட்டிகளுக்கு ஒருவர் கேப்டனாகவும் 2 போட்டிகளுக்கு மற்றொருவர் கேப்டனாகவும் இருப்பது சரியல்ல. அணிக்கு எது முக்கியமோ அதைதான் நான் செய்தேன்

    இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்துவது மிகப்பெரிய மரியாதை. ஆனால் கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை தான் நான் அதிகம் நேசிக்கிறேன். அதனால் ஒரு வீரராக இந்திய அணிக்கும் அதிக பங்களிப்பை வழங்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். 

    • டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • ராஜ்குமார் அதிரடியாக ஆடி 18 பந்தில் அரை சதம் கடந்தார்.

    டி.என்.பி.எல். தொடரின் 15-வது லீக் போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் களமிறங்கிய திருச்சி அணி தொடக்க ஆட்டக்காரர் வசீம் அகமது 32 ரன்னில் அவுட்டானார். ஜகதீஷ் கவுசிக் 5 ரன்னில் வெளியேறினார். சுஜய் சிவசங்கரன் 25 ரன்னும், ஜாபர் ஜமால் 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சஞ்சய் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார். ராஜ்குமார் அதிரடியாக ஆடி 18 பந்தில் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அணி 14 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைத்தது.

    கோவை அணியில் ஜிஜேந்திர குமார் (7), லோகேஸ்வர் (11), கேப்டன் ஷாருக் கான் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். சச்சின் 38 ரன்களும், ஆண்ட்ரே சித்தார்த் 39 ரன்களும் எடுத்தனர். முடிவில், கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    திருச்சி அணியின் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டுகளும், ராஜ்குமார் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர்.

    • மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
    • டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    சேலம்:

    டி.என்.பி.எல். தொடரின் 15-வது லீக் போட்டி சேலத்தில் நடைபெறுகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, திருச்சி அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வசீம் அகமது 32 ரன்னில் அவுட்டானார். ஜகதீஷ் கவுசிக் 5 ரன்னில் வெளியேறினார். சுஜய் சிவசங்கரன் 25 ரன்னும், ஜாபர் ஜமால் 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சஞ்சய் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய ராஜ்குமார் அதிரடியாக ஆடி 18 பந்தில் அரை சதம் கடந்தார். 17வது ஓவரில் 21 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. ராஜ்குமார் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் அணி களமிறங்குகிறது.

    ×