என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- சுப்மன் கில் இதனை செய்ய வேண்டும், அதனை செய்ய வேண்டும் என பல்வேறு கருத்துகள் வரகிறது.
- இந்த விஷயங்கள் அனைத்தும் சுப்மன் கில்லின் கவனத்தை சிதறடிக்க வாய்ப்பிருக்கிறது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது.
இந்நிலையில் சுப்மன் கில் வெளியில் இருந்து வரும் கருத்துகள் குறித்து சிந்திக்காமல், ஆட்டம் குறித்தும் அணியின் திட்டங்கள் குறித்தும் மட்டுமே சிந்திக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சச்சின் டெண்டுல்கர் பேசியதாவது: சுப்மன் கில்லுக்கு நேரம் வழங்க வேண்டும் என நினைக்கிறேன். அவருக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும். சுப்மன் கில் இதனை செய்ய வேண்டும், அதனை செய்ய வேண்டும் என பல்வேறு கருத்துகள் வரப்போவதை என்னால் உணர முடிகிறது.
இந்த விஷயங்கள் அனைத்தும் சுப்மன் கில்லின் கவனத்தை சிதறடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், சுப்மன் கில் வெளியில் இருந்து வரும் கருத்துகள் குறித்து சிந்திக்காமல், ஆட்டம் குறித்தும் அணியின் திட்டங்கள் குறித்தும் மட்டுமே சிந்திக்க வேண்டும். அணியின் நலனை கருத்தில் கொண்டு சுப்மன் கில் அவரது முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
என்று சச்சின் கூறினார்.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
- சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 3 ஆட்டத்தில் வெற்றியும் ஒரு ஆட்டத்தில் தோல்வியும் அடைந்துள்ளது.
சேலம்:
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. 11-ந்தேதியுடன் அங்கு 7 போட்டிகள் முடிவடைந்தன. 13-ந்தேதி முதல் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 17- வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 3 ஆட்டத்தில் (மதுரை, திருச்சி, திருப்பூர்) வெற்றி பெற்றது. நெல்லையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
- விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்திய கிரிக்கெட்டிற்காக அபாரனமான விசயங்களை செய்துள்ளனர்.
- அவர்களுக்குப் பதிலாக புதிதாக களம் இறங்கும் வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது அல்லது பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும் என்பது அர்த்தம் அல்ல.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை லீட்ஸில் தொடங்குகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோர் ஓய்வு அறிவித்த நிலையில், இளம் வீரர்களை கொண்ட அணி முதன்முறையாக களம் இறங்குகிறது.
நட்சத்திர வீரர்கள் இருந்தபோதே, இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி திணறியது. தற்போது இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை இங்கிலாந்து எளிதாக வீழ்த்தும் என கருதப்படுகிறது.
இந்த நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் இல்லாதது இங்கிலாந்துக்கு எளிதானது என்று அர்த்தம் அல்ல என்று இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:-
விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்திய கிரிக்கெட்டிற்காக அபாரனமான விசயங்களை செய்துள்ளனர். அவர்களுக்குப் பதிலாக புதிதாக களம் இறங்கும் வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது அல்லது பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும் என்பது அர்த்தம் அல்ல. இந்தியாவில் திறமையுள்ள ஏராளமான வீரர்கள் உள்ளனர்.
ஐபிஎல் தொடரின்போது ஏராளமான நேரங்களை இந்தியாவில் செலவிட்டுள்ளோம். ஆகவே, அவர்கள் பற்றி எங்களுக்கு அதிக அளவில் தெரியும். இதனால் மூன்று பேர் வெளியேறுவதால் எங்களுக்கு எளிதாக இருக்கப்போவதில்லை.
பும்ரா இந்திய பந்து வீச்சில் தலைமை வகிப்பார். அவர் அற்புதமான பந்து வீச்சாளர். இருந்துபோதிலும், இந்திய அணியில் 11 பேர் உள்ளனர். அது அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். இருந்தபோதிலும், பும்ரா உலகின் சிறந்த வீரர் என்பது எங்களுக்கு தெரியும். அவர் எங்கே சென்றாலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதை அவரது சாதனை தெரிவிக்கிறது.
பும்ரா மிரட்டலாக இருக்கப் போகிறார் என்பது தெரியும். அதேவேளையில் இந்தியாவின் மற்ற பந்து வீச்சாளர்களும் அச்சுறுத்தலாக இருக்கப் போகிறார்கள்.
இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
- இந்தியா- இங்கிலாந்து இணைந்த ஆடும் லெவனில் 8 இங்கிலாந்து வீரர்களை பட்லர் தேர்வு செய்துள்ளார்.
- பேட்டர்களில் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகிய இருவருக்கு மட்டுமே இடம் அளித்துள்ளார்.
லீட்ஸ்:
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நாளை (20-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை நேற்று இங்கிலாந்து அணி அறிவித்தது. இதில் வோக்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். ஆனால் இதுவரை இந்திய அணி தனது ஆடும் லெவனை தற்போது வரை அறிவிக்காமல் உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து இந்தியா அணிகள் இணைந்த ஆடும் லெவனை இங்கிலாந்து அணி வீரர் பட்லர் அறிவித்துள்ளார். இதில் 3 இந்திய வீரர்களுக்கே இடம் அளித்துள்ளார். அதன்படி பேட்டர்களாக தொடக்க வீரராக ஜெய்ஸ்வாலும் 3-வது வரிசையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகிய இருவருக்கு மட்டுமே இடம் அளித்துள்ளார். மேலும் பந்துவீச்சாளர்களில் பும்ரா மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
பட்லர் வெளியிட்ட இங்கிலாந்து- இந்தியா இணைந்த ஆடும் லெவன்:-
ஜெய்ஸ்வால், பென் டக்கெட், சாய் சுதர்சன், ஜோரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பும்ரா, பிரைடன் கார்ஸ், ஷோயிப் பஷீர்.
- இங்கிலாந்து- இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
- பயிற்சியின் போது பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் கருண் நாயருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது.
லீட்ஸ்:
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நாளை ( 20-ந்தேதி ) தொடங்குகிறது.
விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இளம் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த போட்டிக்காக லீட்சில் மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி ஈடுப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பயிற்சியின் போது கருண் நாயருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தை எதிர் கொண்ட போது பந்து கருண் நாயரின் இடுப்பை தாக்கியது.
இதனால் கருண் நாயர் வலியால் துடித்தார். பிறகு ஒன்று இல்லை என்பது போல மீண்டும் பேட்டிங் செய்தார். பிறகு பேட்டிங்கை முடித்து விட்டு இடுப்பை தடவி கொண்டே வெளியே வந்தார். டிசர்ட்டை எடுத்து பார்த்த போது இடுப்பில் பந்து தடம் அப்படியே பதிந்திருந்தது. அதனை சக வீரர்களிடம் சிரித்தபடி இதோ பார்த்துக்கோ என்பது போல காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கருண் நாயர் கண்டிப்பாக ஆடும் லெவனில் இருப்பார் என எதிர்பார்க்கபடும் நிலையில் இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது பெரிதும் பாதிப்பு இருக்காது என கூறப்படுகிறது.
- முதலில் விளையாடிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.
- 19-வது ஓவரில் 5 பந்துகளை வீசிய சூர்யா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
சேலம்:
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன.
இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய நெல்லை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் நெல்லை அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
எளிதாக வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்த நெல்லை அணியின் வெற்றியை ஒரே ஓவரில் மதுரை அணியின் வீரர் சூர்யா ஆனந்த பறித்து விட்டார். 12 பந்தில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி விளையாடியது. 19-வது ஓவரை சூர்யா ஆனந்த வீசினார்.
அந்த ஓவரில் முதல் பந்தில் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த சோனு யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த பந்து ரன் ஏதும் கொடுக்கவில்லை. அடுத்த 3 பந்தில் 3 விக்கெட்டை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டை சூர்யா பதிவு செய்தார். இதன்மூலம் நடப்பு சீசனில் 2-வது ஹட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சூர்யா ஆனந்த பதிவு செய்துள்ளார்.
நடப்பு சீசனில் இதற்கு முன்பு நெல்லை அணியை சேர்ந்த சோனு யாதவ், திருச்சி அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நாயகன் விருது பெற்ற சூர்யா ஆனந்த் கூறும் போது, 'ஹாட்ரிக் சாதனை படைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கேப்டனும், பயிற்சியாளர்க ளும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தது சந்தோசமாக இருந்தது' என்றார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான ஆயுஷ் மாத்ரே சிறப்பாக விளையாடினார்.
- இங்கிலாந்துக்கு எதிரான U19 ஒருநாள் தொடரில் ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு ரோகித் சர்மா தான் கையொப்பமிட்ட பேட்டை பரிசாக கொடுத்தார்.
இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆயுஷ் மாத்ரே பகிர்ந்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான ஆயுஷ் மாத்ரே சிறப்பாக விளையாடினார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான U19 ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2011 ஆம் ஆண்டு ஜெயவர்தனே தலைமையில் கொச்சி டஸ்கர்ஸ் கேரள அணியை உருவாக்கியது.
- 2012 ஆம் ஆண்டில் BCCI நிர்வாகம் கொச்சி டஸ்கர்ஸ் அணியை நீக்கியது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI), கொச்சி டஸ்கர்ஸ் கேரள அணிக்கு ரூ.538 கோடி இழப்பீடு வழங்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
RSW நிறுவனம், 2011 ஆம் ஆண்டு ஜெயவர்தனே தலைமையில் கொச்சி டஸ்கர்ஸ் கேரள அணியை உருவாக்கியது. ஆனால், ஒப்பந்தத்தின்படி வங்கி உத்தரவாதம் அளிக்காததால், 2012 ஆம் ஆண்டில் BCCI நிர்வாகம் கொச்சி டஸ்கர்ஸ் அணியை நீக்கியது.
இதற்கு எதிராக RSW நிறுவனம் நடுவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் ரூ.555 கோடி இழப்பீடு கோரப்பட்டது. தற்போது, இந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு ரூ.538 கோடி வழங்க BCCI-க்கு உத்தரவிட்டுள்ளது.
இழப்பீடு வழங்கப்போகிறதா அல்லது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யபோகிறதா என பிசிசிஐ தரப்பு இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.
- டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து மதுரை 168 ரன்கள் எடுத்தது.
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங் இறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராம் அரவிந்த் 9 ரன்களில், கேப்டன் சதுர்வேத் 1 ரன்னில் அவுட் ஆகினர்.
பாலசந்தர் அனிருத் நிதானமாக ஆடி 48 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து அதீக் அர் ரகுமான் 36 ரன்களும், சங்கர் கணேஷ் 11 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து மதுரை 168 ரன்கள் எடுத்தது.
நெல்லை அணி தரப்பில் அதிகபட்சமாக சோனு யாதவ் 3 விக்கெட்டுகளும், ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
169 ரன்கள் இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் சார்பில் இறங்கிய அஜிதேஷ், சந்தோஷ் குமார், ஹரிஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.
கேப்டன் அருண் கார்த்திக் அதிரடியாக ஆடி 67 ரன்கள் குவித்தார். ரித்திக் ஈஸ்வரன் (25), சோனு யாதவ் (32) ஆகியோரும் ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். ஆனால், மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. மதுரை பாந்தர்ஸ் சார்பில் அதிகபட்சமாக சூர்யா ஆனந்த் 4 விக்கெட்டுகளும், சரவணன், குர்ஜப்நீத் சிங் மற்றும் ராஜலிங்கம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
- பொறுப்புடன் விளையாடிய பாலசந்தர் அனிருத் நிதானமாக ஆடி 48 ரன்கள் எடுத்தார்.
- நெல்லை அணி தரப்பில் அதிகபட்சமாக சோனு யாதவ் 3 விக்கெட்டுகளும், ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
சேலம்:
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மதுரை பாந்தர்ஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராம் அரவிந்த் மற்றும் பாலசந்தர் அனிருத் களமிறங்கினர். இதில் ராம் அரவிந்த் 9 ரன்களில் அவுட் ஆன நிலையில், அடுத்து வந்த கேப்டன் சதுர்வேத் 1 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பொறுப்புடன் விளையாடிய பாலசந்தர் அனிருத் நிதானமாக ஆடி 48 ரன்கள் எடுத்தார். அதனை தொடர்ந்து அதீக் அர் ரகுமான் 36 ரன்களும், சங்கர் கணேஷ் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.
நெல்லை அணி தரப்பில் அதிகபட்சமாக சோனு யாதவ் 3 விக்கெட்டுகளும், ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
- சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 3 ஆட்டத்தில் (மதுரை, திருச்சி, திருப்பூர்) வெற்றி பெற்றது.
சேலம்:
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. 11-ந்தேதியுடன் அங்கு 7 போட்டிகள் முடிவடைந்தன.
13-ந்தேதி முதல் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
நேற்றுடன் 15 ஆட்டங்கள் முடிந்துள்ளன. 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 8 புள்ளி களுடன் முதல் இடத்தில் உள்ளது.சேலம் ஸ்பார் டன்ஸ் (6 புள்ளி) 2-வது இடத்தில் இருக்கிறது. திருப் பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் தலா 4 புள்ளி களுடனும், திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் தலா 2 புள்ளிகளுடனும் உள்ளன. கோவை கிங்ஸ் தான் மோதிய 4 போட்டி களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.
நாளை இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 17- வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. திருப்பூரை 8 விக்கெட் வித்தியாசத்திலும். நெல்லையை 41 ரன்கள் வித்தியாசத்திலும், கோவை யை 8 விக்கெட் வித்தியா சத்திலும், திண்டுக்கல் டிராகன்சை 8 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சேலத்தை வீழ்த்தி 5-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் பாபா அபராஜித் (222 ரன்), விஜய்சங்கர் (148 ரன், 4 விக்கெட்) ஆஷிக் ( 103 ரன்), அபிஷேக் தன்வர் ( 11 விக்கெட் ) , லோகேஷ் ராஜ் (7 விக்கெட்) சிலம்பரசன் ( 4 விக்கெட்) , ஸ்வப்னில் சிங் போன்ற சிறந்த வீரர் கள் உள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது.
அபிஷேக் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 3 ஆட்டத்தில் (மதுரை, திருச்சி, திருப்பூர்) வெற்றி பெற்றது. நெல்லையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
அந்த அணியில் ராஜ கோபால் (149 ரன்), ஹரி நிஷாந்த் எம்.முகமது (8 விக்கெட்) பொய்யாமொழி (5 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும். 16-வது ஆட்டத்தில் நெல்லை-மதுரை அணிகள் மோதுகின்றன. நெல்லை அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. மதுரை அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
- இங்கிலாந்து பந்து வீச்சை பொறுத்தவரை ஆண்டர்சன் மற்றும் பிராட் இல்லாதது நன்றாக இருக்கிறது.
- தற்போதைய பந்துவீச்சு தாக்குதலை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மாவின் ஓய்வு அணியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் பேட்டிங் ஆர்டரில் விராட் கோலியின் இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் சுப்மன் கில்லும் 5-வது இடத்திலும் தானும் களமிறங்கவுள்ளதாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
3 வரிசையில் யார் விளையாட போகிறார் என்பது குறித்து விவாதம் நடந்து கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் 4 மற்றும் 5-வது வரிசைக்கான இடங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 4-வது இடத்தில் சுப்மன் கில்லும் 5-வது இடத்தில் நானும் களமிறங்க உள்ளோம்.
இங்கிலாந்து பந்து வீச்சை பொறுத்தவரை (ஆண்டர்சன் மற்றும் பிராட்) இருவரும் இல்லாதது நன்றாக இருக்கிறது. ஆனால் தற்போதைய பந்துவீச்சு தாக்குதலை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களிடம் போதுமான ஃபயர்பவர் உள்ளது. நாம் அவர்களை மதிக்க வேண்டும்.
என்று ரிஷப் பண்ட் கூறினார்.






