என் மலர்
கிரிக்கெட் (Cricket)

3 இந்தியர்களுக்கே இடம்.. இந்தியா- இங்கிலாந்து வீரர்கள் இணைந்த ஆடும் லெவனை அறிவித்த பட்லர்
- இந்தியா- இங்கிலாந்து இணைந்த ஆடும் லெவனில் 8 இங்கிலாந்து வீரர்களை பட்லர் தேர்வு செய்துள்ளார்.
- பேட்டர்களில் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகிய இருவருக்கு மட்டுமே இடம் அளித்துள்ளார்.
லீட்ஸ்:
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நாளை (20-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை நேற்று இங்கிலாந்து அணி அறிவித்தது. இதில் வோக்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். ஆனால் இதுவரை இந்திய அணி தனது ஆடும் லெவனை தற்போது வரை அறிவிக்காமல் உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து இந்தியா அணிகள் இணைந்த ஆடும் லெவனை இங்கிலாந்து அணி வீரர் பட்லர் அறிவித்துள்ளார். இதில் 3 இந்திய வீரர்களுக்கே இடம் அளித்துள்ளார். அதன்படி பேட்டர்களாக தொடக்க வீரராக ஜெய்ஸ்வாலும் 3-வது வரிசையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகிய இருவருக்கு மட்டுமே இடம் அளித்துள்ளார். மேலும் பந்துவீச்சாளர்களில் பும்ரா மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
பட்லர் வெளியிட்ட இங்கிலாந்து- இந்தியா இணைந்த ஆடும் லெவன்:-
ஜெய்ஸ்வால், பென் டக்கெட், சாய் சுதர்சன், ஜோரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பும்ரா, பிரைடன் கார்ஸ், ஷோயிப் பஷீர்.






