என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3, 4, 5-வது வரிசையில் களமிறங்கும் வீரர்கள் யார்? உண்மையை உடைத்த ரிஷப் பண்ட்
    X

    3, 4, 5-வது வரிசையில் களமிறங்கும் வீரர்கள் யார்? உண்மையை உடைத்த ரிஷப் பண்ட்

    • இங்கிலாந்து பந்து வீச்சை பொறுத்தவரை ஆண்டர்சன் மற்றும் பிராட் இல்லாதது நன்றாக இருக்கிறது.
    • தற்போதைய பந்துவீச்சு தாக்குதலை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மாவின் ஓய்வு அணியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

    இதனால் பேட்டிங் ஆர்டரில் விராட் கோலியின் இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில், விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் சுப்மன் கில்லும் 5-வது இடத்திலும் தானும் களமிறங்கவுள்ளதாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    3 வரிசையில் யார் விளையாட போகிறார் என்பது குறித்து விவாதம் நடந்து கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் 4 மற்றும் 5-வது வரிசைக்கான இடங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 4-வது இடத்தில் சுப்மன் கில்லும் 5-வது இடத்தில் நானும் களமிறங்க உள்ளோம்.

    இங்கிலாந்து பந்து வீச்சை பொறுத்தவரை (ஆண்டர்சன் மற்றும் பிராட்) இருவரும் இல்லாதது நன்றாக இருக்கிறது. ஆனால் தற்போதைய பந்துவீச்சு தாக்குதலை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களிடம் போதுமான ஃபயர்பவர் உள்ளது. நாம் அவர்களை மதிக்க வேண்டும்.

    என்று ரிஷப் பண்ட் கூறினார்.

    Next Story
    ×