என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விராட், ரோகித், அஸ்வின் இல்லாதது இங்கிலாந்துக்கு எளிதானது என்று அர்த்தம் அல்ல: பென் ஸ்டோக்ஸ்
    X

    விராட், ரோகித், அஸ்வின் இல்லாதது இங்கிலாந்துக்கு எளிதானது என்று அர்த்தம் அல்ல: பென் ஸ்டோக்ஸ்

    • விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்திய கிரிக்கெட்டிற்காக அபாரனமான விசயங்களை செய்துள்ளனர்.
    • அவர்களுக்குப் பதிலாக புதிதாக களம் இறங்கும் வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது அல்லது பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும் என்பது அர்த்தம் அல்ல.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை லீட்ஸில் தொடங்குகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோர் ஓய்வு அறிவித்த நிலையில், இளம் வீரர்களை கொண்ட அணி முதன்முறையாக களம் இறங்குகிறது.

    நட்சத்திர வீரர்கள் இருந்தபோதே, இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி திணறியது. தற்போது இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை இங்கிலாந்து எளிதாக வீழ்த்தும் என கருதப்படுகிறது.

    இந்த நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் இல்லாதது இங்கிலாந்துக்கு எளிதானது என்று அர்த்தம் அல்ல என்று இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:-

    விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்திய கிரிக்கெட்டிற்காக அபாரனமான விசயங்களை செய்துள்ளனர். அவர்களுக்குப் பதிலாக புதிதாக களம் இறங்கும் வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது அல்லது பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும் என்பது அர்த்தம் அல்ல. இந்தியாவில் திறமையுள்ள ஏராளமான வீரர்கள் உள்ளனர்.

    ஐபிஎல் தொடரின்போது ஏராளமான நேரங்களை இந்தியாவில் செலவிட்டுள்ளோம். ஆகவே, அவர்கள் பற்றி எங்களுக்கு அதிக அளவில் தெரியும். இதனால் மூன்று பேர் வெளியேறுவதால் எங்களுக்கு எளிதாக இருக்கப்போவதில்லை.

    பும்ரா இந்திய பந்து வீச்சில் தலைமை வகிப்பார். அவர் அற்புதமான பந்து வீச்சாளர். இருந்துபோதிலும், இந்திய அணியில் 11 பேர் உள்ளனர். அது அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். இருந்தபோதிலும், பும்ரா உலகின் சிறந்த வீரர் என்பது எங்களுக்கு தெரியும். அவர் எங்கே சென்றாலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதை அவரது சாதனை தெரிவிக்கிறது.

    பும்ரா மிரட்டலாக இருக்கப் போகிறார் என்பது தெரியும். அதேவேளையில் இந்தியாவின் மற்ற பந்து வீச்சாளர்களும் அச்சுறுத்தலாக இருக்கப் போகிறார்கள்.

    இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×