என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம்- வேகப்பந்து வீரர் ஷர்துல் தாக்கூர் நம்பிக்கை
    X

    இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம்- வேகப்பந்து வீரர் ஷர்துல் தாக்கூர் நம்பிக்கை

    • இங்கிலாந்து ஆடுகளங்கள் வித்தியாசமான சவால்களை கொண்டது.
    • இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம்பெற்று உள்ளார்கள்.

    லண்டன்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் நாளை மறுநாள் (20-ந்தேதி) லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம் என்று வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து ஆடுகளங்கள் வித்தியாசமான சவால்களை கொண்டது. இங்கு விளையாட இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இங்கிலாந்தில் நிலவும் வானிலையை முதலாவதாகக் கூறுவேன். சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சில நேரங்களில் சூரியன் பிரகாசமாக உள்ள நாளாக இருக்கும். வானிலை எப்படி இருப்பினும், வீரர்கள் அதற்கு ஏற்ப தங்களை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டியது இருக்கும்.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் இடம்பெற்று உள்ளார்கள். அணியில் திறமையான வீரர்கள் இடம்பெறுவது எப்போதும் உற்சாகம் அளிப்பதாக இருக்கும். இங்கிலாந்து அணியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய யுக்தியை பின்பற்றி விளையாடி வருகிறார்கள்.

    வெளிநாடுகளில் தொடர்களை கைப்பற்றுவது எப்போதும் சிறப்பானதாக இருக்கும். இங்கிலாந்தில் நாங்கள் தொடரை வென்றால் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் மிகப்பெரிய விஷயமாக இருக்கும். இங்கிலாந்தில் தொடரை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×