என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சதத்தை தவறவிட்ட லிட்டன் தாஸ்: 2-ம் நாள் முடிவில் வங்கதேசம் 484 ரன்கள் குவிப்பு
    X

    சதத்தை தவறவிட்ட லிட்டன் தாஸ்: 2-ம் நாள் முடிவில் வங்கதேசம் 484 ரன்கள் குவிப்பு

    • முதல் நாள் முடிவில் வங்கதேச அணி 292 ரன்கள் குவித்தது.
    • வங்கதேச அணி தரப்பில் லிட்டன் தாஸ் 90 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றனர்.

    இதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 292 ரன்கள் எடுத்தது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ 136 ரன்களுடனும் முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சாண்டோ 148 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்பிகுர் 163 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அதனை தொடர்ந்து விளையாடிய லிட்டன் தாஸ் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் 2-ம் நாள் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்து 484 ரன்கள் எடுத்தது.

    இலங்கை அணி தரப்பில் அசிதா பெர்னாண்டோ, மிலன் பிரியநாத் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    Next Story
    ×