என் மலர்
கிரிக்கெட் (Cricket)

TNPL: கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் த்ரில் வெற்றி
- டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- ராஜ்குமார் அதிரடியாக ஆடி 18 பந்தில் அரை சதம் கடந்தார்.
டி.என்.பி.எல். தொடரின் 15-வது லீக் போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய திருச்சி அணி தொடக்க ஆட்டக்காரர் வசீம் அகமது 32 ரன்னில் அவுட்டானார். ஜகதீஷ் கவுசிக் 5 ரன்னில் வெளியேறினார். சுஜய் சிவசங்கரன் 25 ரன்னும், ஜாபர் ஜமால் 6 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சஞ்சய் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார். ராஜ்குமார் அதிரடியாக ஆடி 18 பந்தில் அரை சதம் கடந்தார்.
இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அணி 14 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைத்தது.
கோவை அணியில் ஜிஜேந்திர குமார் (7), லோகேஸ்வர் (11), கேப்டன் ஷாருக் கான் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். சச்சின் 38 ரன்களும், ஆண்ட்ரே சித்தார்த் 39 ரன்களும் எடுத்தனர். முடிவில், கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.
திருச்சி அணியின் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டுகளும், ராஜ்குமார் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர்.






