என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • வீரர்களின் பாதுகாப்பு காரணத்தால் இந்தியா வர வங்கதேசம் அச்சம் தெரிவித்துள்ளது.
    • ஐசிசி குழு வங்கதேச கிரிக்கெட் போர்டு உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் கொழும்பில் நடைபெற இருக்கிறது. "சி" பிரிவில் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி, இங்கிலாந்து, நேபாளம் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த பிரிவில் உள்ள அணிகள் கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாடுகின்றன.

    குரூப் "பி"-யில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஓமன், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த அணிகள் மோதும் போட்டிகள் கொழும்பு மற்றும் பல்லேகலேயில் நடைபெற இருக்கின்றன.

    வங்கதேசத்தில் மைனாரிட்டி இந்துக்கள் தாக்கப்படுவதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த காரணத்தை முன்னிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த முஸ்தபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    இதனால் பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து வங்கதேச அணி இந்தியா வந்து விளையாட ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் வந்துதான் விளையாட வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தி வருகிறது.

    இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐசிசி குழு வங்கதேசம் சென்றுள்ளது. அப்போது, ஐசிசி குழுவிடம் எங்களை சி பிரிவில் இருந்து பி பிரிவுக்கு மாற்றி விடுங்கள். "பி" பிரிவில் விளையாடும் போட்டிகள் அனைத்தும் கொழும்பு மற்றம் பல்லேகலேயில் நடைபெற இருக்கிறது. இதனால் நாங்கள் இந்தியாவில் விளையாட வேண்டியிருக்காது என வங்கேச கிரிக்கெட் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.

    • ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் பலி.
    • கூட்ட நெரிசல், ரசிகர்கள் பாதுகாப்பு அச்சம் தொடர்பாக சின்னசாமி மைதானத்தில் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB). இந்த அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.

    கடந்த வருடம் முதன்முறையாக ஆர்.சி.பி. அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வருடம் ஆர்சிபி அணிக்கு சின்னசாமி மைதானம் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் ரசிகர்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக மைதானத்தில் 300 முதல் 350 ஏஐ கேமராக்கள் பொருத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஆர்சிபி அணி முறையாக பரிந்துரை செய்துள்ளது. இதற்கான செலவு 4.5 கோடி ரூபாயை தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

    ஆனால் போக்குவரத்து நெரிசல், ரசிகர்கள் பாதுகாப்பு ஆகிவற்றின் காரணமாக இந்த முறை போட்டியை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்குமா? என்பது கேள்விக்குறியாக இருந்தது.

    இந்த நிலையில் 2026 ஐ.பி.எல். கிரிக்கெட் பேட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், கர்நாடக மாநில அரசிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சர்வதேச போட்டிகளை நடத்தவும் அனுமதி பெற்றுள்ளது.

    • உ.பி. வாரியர்ஸ் அணி கேப்டன் மெக் லேனிங் 70 ரன்கள் விளாசினார்.
    • லிட்ச்பீல்டு 37 பந்தில் 61 ரன்கள் சேர்த்தார்.

    பெண்களுக்கான பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம் நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையான கேப்டன் மெக் லேனிங் 45 பந்தில் 70 ரன்கள் விளாசினார். லிட்ச்பீல்டு 37 பந்தில் 61 ரன்கள் சேர்த்தார்.

    பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது. மும்பை வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

    6-வது வீரராக களம் இறங்கிய அமெலியா கெர், அதன்பின் வந்த அமான்ஜோத் கவுர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். என்றாலும் கவுர் 24 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கெர் ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 49 ரன்கள் எடுத்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணியால் 165 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    இதனால் உ.பி. வாரியர்ஸ் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 70 ரன்கள் விளாசிய மெக் லேனிங் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றார். தற்போது மும்பை 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. உ.பி. வாரியர்ஸ் அணியும் 5-ல் 2-ல் வெற்றி பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    • ஜடேஜா முதல் போட்டியில் 44 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.
    • 2-வது போட்டியில் 56 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ஜடேஜா இடம் பிடித்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் முதல் இரண்டு போட்டிகள் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

    முதல் ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் 56 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்த நிலையில் ஜடேஜாவின் ஃபார்ம் கவலை அளிக்கவில்லை என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.

    இது குறித்து முகமது சிராஜ் கூறியதாவது:-

    ஜடேஜா ஃபார்ம் குறித்து இந்திய அணியில் எந்த ஒரு கவலையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒரு விக்கெட் வீழ்த்துவதுதான் விசயம். அவர் ஒரு விக்கெட் வீழ்த்திவிட்டால், பின்னர் அவரை வேறொரு வீரராக பார்ப்பீர்கள்.

    இவ்வாறு முகமது சிராஜ் தெரிவித்தார்.

    ஜடேஜா சமீப காலமாக 2900 ரன்கள் விட்டுக்கொடுத்து 32 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக ஒரு நாள் போட்டியில் 209 போட்டிகளில் 232 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

    இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

    • கடைசி போட்டிக்காக இந்திய அணி இந்தூர் சென்றுள்ளார்.
    • உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி விளையாடி வருகிறார்.

    கடந்த 14-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதனையடுத்து மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற இருக்கிறது.

    இதற்காக இந்தூர் சென்ற இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை இந்திய அணி வீரரான விராட் கோலி உஜ்ஜைனில் உள்ள பிரசித்தி பெற்ற மகாகாலேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்கள் அடித்த விராட் கோலி, இரண்டாவது போட்டியில் 23 ரன்னில் ஆட்டம் இழந்தார். நாளை வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

    • இந்தியாவில் விளையாடாவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று எச்சரித்தது.
    • இலங்கையில்தான் தாங்கள் விளையாடுவோம் என்று 2-வது முறையாக வங்காளதேசம் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது.

    வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் கிரிக்கெட்டிலும் எதிரொலித்து வருகிறது.

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.

    இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்தது. இந்தியாவில் விளையாடாவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று எச்சரித்தது. ஆனாலும் இலங்கையில்தான் தாங்கள் விளையாடுவோம் என்று 2-வது முறையாக வங்காளதேசம் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. தங்களது முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தது.

    இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக ஐ.சி.சி. குழு இன்று வங்காளதேசம் செல்கிறது. 2 பேர் கொண்ட குழு வங்காளதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.

    இது தொடர்பாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறும்போது,

    'ஐ.சி.சி. குழு வருவது உண்மைதான். அனைத்துவித சூழல் குறித்து விவாதிக்கப்படும். வங்காளதேச அரசின் சார்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 2 ஆண்டுகளாகவே அல்காரசும், சின்னரும் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
    • நம்பர் ஒன் வீரரான அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் வேட்கையில் உள்ளார்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஒபன், விம்பிள்டன், அமெரிக்க ஒபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.

    ஆண்டின் முதல் கிராண்ட் சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை (18-ந்தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 1-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    உலகின் முதல் நிலை வீரரான அல்காரஸ் (ஸ்பெயின்), நடப்பு சாம்பியனும், 2-வது வரிசையில் உள்ள வருமான ஜானிக் சின்னர் (இத்தாலி), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), ஜோகோவிச் (செர்பியா) போன்ற முன்னணி வீரர்களும், நம்பர் ஒன் இடத்தில் உள்ள சபலென்கா (பெலா ரஸ்) இகாஸ்வியாடெக் (போலந்து) கோகோ கவுப், நடப்பு சாம்பியன் மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) போன்ற முன்னணி வீராங்கனைகளும் பங்கேற்கிறார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளாகவே அல்காரசும், சின்னரும் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அல்காரஸ் 2024-ம் ஆண்டில் பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் பட்டத்தையும், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார்.

    சின்னர் 2024-ல் ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபனையும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் பட்டத்தையும் வென்றார்.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளார். அதே நேரத்தில் நம்பர் ஒன் வீரரான அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் வேட்கையில் உள்ளார்.

    24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரான ஜோகோவிச் கடந்த 2 ஆண்டாக எந்த கிராண்ட் சிலாம் பட்டமும் பெற்றதில்லை. அவர் தற்போது தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ளார்.

    • அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • இதில் நேற்று நடந்த அரையிறுதியில் ரஷிய வீராங்கனை வெற்றி பெற்றார்.

    அடிலெய்டு:

    அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ரஷிய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரிவா, ரஷியாவின் டயானா ஷ்னெய்டர் உடன் மோதினார்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று மிர்ரா ஆண்ட்ரிவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.
    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளது.

    முதல் ஒருநாள் போட்டியின்போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதற்கிடையே, காயம் குணம் அடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார்.

    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

    • முதலில் பேட் செய்த சிட்னி தண்டர்ஸ் அணி 20 ஓவரில் 189 ரன்கள் குவித்தது.
    • அணியின் கேப்டன் டேவிட் வார்னர் சதமடித்து 110 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார்.

    சிட்னி:

    பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ், சிட்னி தண்டர் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சிட்னி தண்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 65 பந்தில் 110 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் பிக்பாஷ் லீக் தொடரில் அதிக சதமடித்தவர் என்ற சாதனையை சமன் செய்தார்.

    அடுத்து ஆடிய சிட்னி சிக்சர்ஸ் அணி 17.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் 42 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

    இந்நிலையில், பிக்பாஷ் லீக் தொடரில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார் ஸ்டீவன் ஸ்மித். ஸ்மித் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார்.

    டேவிட் வார்னர் 3 சதங்கள் அடித்து தனது சாதனையை சமன் செய்தவருக்கு மாலையில் ஸ்மித் சதமடித்து அந்த சாதனையை மீண்டும் தன்வசமாக்கினார்.

    பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகிய இருவரும் தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 182 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய குஜராத் அணி 150 ரன்களில் ஆல் அவுட்டானது.

    நவி மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 9-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு- குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது.

    ராதா யாதவ் 66 ரன்னும், ரிச்சா கோஷ் 44 ரன்னும் எடுத்தனர்.

    குஜராத் அணியின் சோபி டிவைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    இறுதியில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 18.5 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.

    பெங்களுரு அணியின் ஷ்ரேயங்கா பாட்டீல் 5 விக்கெட்டும், லாரன் பெல் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

    • இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
    • காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் லின் சூ யீ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் முதல் செட்டை 21-17 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட தைவான் வீரர் அடுத்த இரு செட்களை 21-13, 21-18 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.

    ×