என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: ஷ்ரேயாஸ், ரவி பிஷ்னோய் சேர்ப்பு
- காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளது.
முதல் ஒருநாள் போட்டியின்போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதற்கிடையே, காயம் குணம் அடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.
Next Story






