என் மலர்
விளையாட்டு
- உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் உள்ளார்
- அர்ஜென்டினாவை சேர்ந்த 18-வது நிலை வீரர் பிரான்சிஸ்கோ வெற்றி பெற்றார்.
ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது.
உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் தொடக்க சுற்றில் கனடாவை சேர்ந்த கேப்ரியல் டியாலோவை எதிர் கொண்டார். இதில் சுவரேவ் 6-7 (1-7), 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 43 நிமிட நேரம் தேவைப்பட்டது.
மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினாவை சேர்ந்த 18-வது நிலை வீரர் பிரான்சிஸ்கோ வெற்றி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 7-வது வரிசையில் உள்ள ஜாஸ்மின் பாலினி 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தகுதி சுற்று வீராங்கனையான சான் நோவிச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு எளிதில் முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் மரியா சகாரி (கிரீஸ்) வெற்றி பெற்றார்.
- வீரர்களின் பாதுகாப்பு காரணத்தால் இந்தியா வர வங்கதேசம் அச்சம் தெரிவித்துள்ளது.
- ஐசிசி குழு வங்கதேச கிரிக்கெட் போர்டு உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் கொழும்பில் நடைபெற இருக்கிறது. "சி" பிரிவில் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி, இங்கிலாந்து, நேபாளம் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த பிரிவில் உள்ள அணிகள் கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாடுகின்றன.
குரூப் "பி"-யில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஓமன், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த அணிகள் மோதும் போட்டிகள் கொழும்பு மற்றும் பல்லேகலேயில் நடைபெற இருக்கின்றன.
வங்கதேசத்தில் மைனாரிட்டி இந்துக்கள் தாக்கப்படுவதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த காரணத்தை முன்னிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த முஸ்தபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து வங்கதேச அணி இந்தியா வந்து விளையாட ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் வந்துதான் விளையாட வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐசிசி குழு வங்கதேசம் சென்றுள்ளது. அப்போது, ஐசிசி குழுவிடம் எங்களை சி பிரிவில் இருந்து பி பிரிவுக்கு மாற்றி விடுங்கள். "பி" பிரிவில் விளையாடும் போட்டிகள் அனைத்தும் கொழும்பு மற்றம் பல்லேகலேயில் நடைபெற இருக்கிறது. இதனால் நாங்கள் இந்தியாவில் விளையாட வேண்டியிருக்காது என வங்கேச கிரிக்கெட் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் அயர்லாந்து அணி குரூப் மாற்றி, இந்தியா சென்று விளையாடமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படிதான் விளையாடுவோம் எனத் தெரிவித்துள்ளது. இதனால் வங்கதேச அணி இந்தியாவில் வந்து விளையாட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
- டி20 உலக கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
- முதல் முறையாக இடி20 உலக கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இத்தாலி அணி விளையாடவுள்ளது
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
முதல் முறையாக இந்த போட்டியில் விளையாட இருக்கும் இத்தாலி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தென் ஆப்பிரிக்க சர்வதேச வீரர் ஜே.ஜே. ஸ்மட்ஸ் இடம்பெற்றுள்ள 15 பேர் கொண்ட அணிக்கு வெய்ன் மேட்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். இத்தாலி அணி வீரர்கள் விவரம்:-
வெய்ன் மேட்சன் (கேப்டன்), ஜைன் அலி, மார்கஸ் காம்போபியானோ, அலி ஹசன், கிரிஷன் கலுகமகே, ஹாரி மானென்டி, ஜியான் பியோரோ, அந்தோனி மோஸ்கா, ஜஸ்டின் மோஸ்கா, சையத் நக்வி, பெஞ்சமின் மானென்டி, ஜஸ்பிரீத் சிங், ஜே.ஜே. ஸ்மட்ஸ், கிரான்ட் ஸ்டூவர்ட், தாமஸ் டிராகா.
இதுவரை 15 அணிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் இன்னும் அணிகளை தேர்வு செய்ய வேண்டும்.
- முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது
- 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற உள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
- 4-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 ஆட்டத்திலும் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.
நேற்றுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தன. இன்று ஓய்வு நாளாகும்.
நாளை முதல் 2-வது மற்றும் இறுதிகட்ட ஆட்டங்கள் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெறுகிறது.
11 போட்டிகள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 ஆட்டத்திலும் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் (5 போட்டி), குஜராத் ஜெய்ன்ட்ஸ் (4), உ.பி. வாரியர்ஸ் (5) தலா 4 புள்ளிகளுடனும், டெல்லிகேப்பிடல்ஸ் 2 புள்ளியுடனும் (4) உள்ளன.
நாளை நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன.
- குடிநீரைக் குடித்தவர்களுக்கு கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
- சுமார் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது.
இந்தப்போட்டியை விட மாசடைந்த குடிநீர் பிரச்சனை பேசுபொருளாகியுள்ளது. இந்தூரில் உள்ள பகீரதபுரத்தில் நர்மதா ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும். குடிநீரைக் குடித்தவர்களுக்கு கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சுமார் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் விளையாட இந்தூருக்கு வந்து இருக்கும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தனது ஓட்டல் அறையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குடிநீரை தூய்மை செய்யும் எந்திரத்தை எடுத்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யும் குடிநீரை பல ஆண்டுகளாக குடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
ஆண்கள், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர், கலப்பு இரட்டையர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், இந்தத் தொடரில் அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (45), 5 ஆண்டுக்குப் பிறகு களமிறங்க உள்ளார்.
வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் செர்பியாவின் ஓல்கா டேனிலோவிச்சை சந்திக்கிறார்.
7 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான இவர் வைல்ட் கார்டு மூலம் விளையாடுகிறார் என்பதால் இவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் போட்டியிடும் மிக வயதான பெண் வீரர் என வரலாறு படைப்பார்.
- முதல் அரையிறுதியில் விதர்பா அணி நடப்பு சாம்பியன் கர்நாடகாவை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.
- 2வது அரையிறுதியில் சவுராஷ்டிரா அணி பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
பெங்களூரு:
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரில் நடந்து வந்தது.
லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த கர்நாடகம், மத்திய பிரதேசம், பி பிரிவில் உத்தர பிரதேசம், விதர்பாவும், சி பிரிவில் பஞ்சாப், மும்பையும், டி பிரிவில் டெல்லி, சவுராஷ்டிரா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்றன.
காலிறுதி முடிவில் கர்நாடகா, சவுராஷ்டிரா, பஞ்சாப், விதர்பா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. முதல் அரையிறுதியில் விதர்பாவும், 2வது அரையிறுதியில் சவுராஷ்டிரா அணியும் வென்றன.
இந்நிலையில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மைய மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.
இதில் ஹர்விக் தேசாய் தலைமையிலான சவுராஷ்டிரா அணியும், ஹர்ஷ் துபே தலைமையிலான விதர்பா அணியும் மோதுகின்றன.
சவுராஷ்டிரா அணி அரையிறுதியில் பஞ்சாப்பை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதேபோல்,
விதர்பா அணி அரையிறுதியில் நடப்பு சாம்பியன் கர்நாடகாவுக்கு அதிர்ச்சி அளித்து தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
சவுராஷ்டிரா அணியில் பேட்டிங்கில் ஹர்விக் தேசாய் (561 ரன்), விஸ்வராஜ் ஜடேஜா (536), சம்மார் காஜரும், பந்துவீச்சில் அன்குர் பன்வார், சேத்தன் சகாரியாவும் பலம் சேர்க்கின்றனர்.
விதர்பா அணியில் பேட்டிங்கில் அமன் மொகாதே (781 ரன்), துருவ் ஷோரேய் (515), ரவிக்குமார் சமர்த், பந்து வீச்சில் நாசிகெட் புத், யாஷ் தாக்குர், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
சவுராஷ்டிரா அணி 3-வது முறையாக கோப்பையை வெல்ல முயற்சிக்கும். அதேநேரம், விதர்பா அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்ற போராடும்.
சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவு இருக்காது.
- வதோதராவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
- ராஜ்கோட்டில் நடந்த 2வது போட்டியில், நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தூர்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற உள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது.
சீனியர் வீரரான விராட் கோலி பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். சர்வதேச போட் டியில் விராட் கோலி தொடர்ந்து 5 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்து முத்திரை பதித்தார். இன்றைய ஆட்டத்திலும் விராட் கோலி மீதான எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதேபோல ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், கேப்டன் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் அந்த அணி தொடரை இழந்து விடும்.
ஒருநாள் போட்டிகளில் இதுவரை இந்தியா, நியூசிலாந்து அணிகள் 122 போட்டிகளில் நேருக்கு நேர் மோதின. இதில் 63ல் இந்தியாவும், 51ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது. 7 போட்டி கைவிடப்பட்டது.
இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால், வெற்றியுடன் கோப்பையை வெல்ல போவது யார்? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
- அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது.
- இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை வெற்றி பெற்றார்.
அடிலெய்டு:
அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ரஷிய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரிவா, கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று மிர்ரா ஆண்ட்ரிவா சாம்பியன் பட்டம் வென்றார்.
- முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 166 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பெங்களூரு அணி 169maha ரன்கள் எடுத்து வென்றது
நவி மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு- டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார்.
பெங்களூரு அணியின் லாரன் பெல், சயாலி சத்கரே ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பிரேமா ராவத் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அதிரடியாக ஆடி சதத்தை நழுவவிட்டார். அவர் 96 ரன்னில் அட்டாகினர். ஜார்ஜியா ஒலி 52 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18.2 ஓவரில் 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி 4வது வெற்றியைப் பதிவுசெய்தது.
- முதலில் பேட் செய்த இந்திய அணி 48.4 ஓவரில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அபிக்யான் 80 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 72 ரன்னும் எடுத்தனர்.
ஜார்ஜியா:
19 வயதுக்கு உட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 7-ம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக 49 ஓவராக குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 48.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிக்யான் 80 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 72 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேச அணி சார்பில் அல் பஹத் 5 விக்கெட்டும், இக்பால் எமான், ஹக்கிம் தமிம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. மழை மீண்டும் குறுக்கிட்டதால் வங்கதேச அணி 29 ஓவரில் 165 இலக்கு என நிர்ணயிக்கப்பட்டது.
ஹக்கிம் தமிம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். ரிபாத் பெக் 37 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், வங்கதேச அணி 28.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் விஹான் மல்கோத்ரா 4 விக்கெட்டும், கிலான் படேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகி விருதை விஹான் மல்கோத்ரா வென்றார்.






