என் மலர்
கிரிக்கெட் (Cricket)

யு19 உலகக் கோப்பை: 18 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா
- முதலில் பேட் செய்த இந்திய அணி 48.4 ஓவரில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அபிக்யான் 80 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 72 ரன்னும் எடுத்தனர்.
ஜார்ஜியா:
19 வயதுக்கு உட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 7-ம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக 49 ஓவராக குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 48.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிக்யான் 80 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 72 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேச அணி சார்பில் அல் பஹத் 5 விக்கெட்டும், இக்பால் எமான், ஹக்கிம் தமிம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. மழை மீண்டும் குறுக்கிட்டதால் வங்கதேச அணி 29 ஓவரில் 165 இலக்கு என நிர்ணயிக்கப்பட்டது.
ஹக்கிம் தமிம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். ரிபாத் பெக் 37 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், வங்கதேச அணி 28.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் விஹான் மல்கோத்ரா 4 விக்கெட்டும், கிலான் படேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகி விருதை விஹான் மல்கோத்ரா வென்றார்.






