என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சுவரேவ், ஜாஸ்மின் பாலினி  வெற்றி
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சுவரேவ், ஜாஸ்மின் பாலினி வெற்றி

    • உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் உள்ளார்
    • அர்ஜென்டினாவை சேர்ந்த 18-வது நிலை வீரர் பிரான்சிஸ்கோ வெற்றி பெற்றார்.

    ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது.

    உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் தொடக்க சுற்றில் கனடாவை சேர்ந்த கேப்ரியல் டியாலோவை எதிர் கொண்டார். இதில் சுவரேவ் 6-7 (1-7), 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 43 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினாவை சேர்ந்த 18-வது நிலை வீரர் பிரான்சிஸ்கோ வெற்றி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 7-வது வரிசையில் உள்ள ஜாஸ்மின் பாலினி 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தகுதி சுற்று வீராங்கனையான சான் நோவிச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு எளிதில் முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் மரியா சகாரி (கிரீஸ்) வெற்றி பெற்றார்.

    Next Story
    ×