என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எங்களை பி குரூப்பிற்கு மாற்றி இலங்கையில் விளையாட வையுங்கள்: ஐசிசி-க்கு வங்கதேசம் வேண்டுகோள்
    X

    எங்களை "பி" குரூப்பிற்கு மாற்றி இலங்கையில் விளையாட வையுங்கள்: ஐசிசி-க்கு வங்கதேசம் வேண்டுகோள்

    • வீரர்களின் பாதுகாப்பு காரணத்தால் இந்தியா வர வங்கதேசம் அச்சம் தெரிவித்துள்ளது.
    • ஐசிசி குழு வங்கதேச கிரிக்கெட் போர்டு உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் கொழும்பில் நடைபெற இருக்கிறது. "சி" பிரிவில் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி, இங்கிலாந்து, நேபாளம் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த பிரிவில் உள்ள அணிகள் கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாடுகின்றன.

    குரூப் "பி"-யில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஓமன், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த அணிகள் மோதும் போட்டிகள் கொழும்பு மற்றும் பல்லேகலேயில் நடைபெற இருக்கின்றன.

    வங்கதேசத்தில் மைனாரிட்டி இந்துக்கள் தாக்கப்படுவதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த காரணத்தை முன்னிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த முஸ்தபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    இதனால் பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து வங்கதேச அணி இந்தியா வந்து விளையாட ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் வந்துதான் விளையாட வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தி வருகிறது.

    இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐசிசி குழு வங்கதேசம் சென்றுள்ளது. அப்போது, ஐசிசி குழுவிடம் எங்களை சி பிரிவில் இருந்து பி பிரிவுக்கு மாற்றி விடுங்கள். "பி" பிரிவில் விளையாடும் போட்டிகள் அனைத்தும் கொழும்பு மற்றம் பல்லேகலேயில் நடைபெற இருக்கிறது. இதனால் நாங்கள் இந்தியாவில் விளையாட வேண்டியிருக்காது என வங்கேச கிரிக்கெட் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.

    Next Story
    ×