என் மலர்
விளையாட்டு
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு செய்தது.
- அதன்படி முதலில் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.
டர்பன்:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. அபிஷேக் சர்மா 7 ரன்னில் வெளியேறினார்.
சஞ்சு சாம்சனுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். இந்த ஜோடி 66 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் 21 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய திலக் வர்மாவும் அதிரடியாக ஆடி 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 50 பந்தில் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் கோட்சி 3 விக்கெட் வீழ்த்தினார்.
- நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு செய்தது.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு செய்தது.
இந்த தொடர் ஏற்கனவே திட்டமிட்டது அல்ல. சமீபத்தில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பேச்சுவார்த்தை நடத்தி இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்தன. சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது.
எனினும், அந்த தொடரில் ஆடிய வீரர்கள் யாரும் இந்த தொடரில் விளையாடவில்லை. இதனால் அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்காது. இந்த தொடரில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப்சிங் போன்ற அனுபவ வீரர்கள் அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.
- ஆஸ்திரேலிய டூரின்போது விராட் என்னிடம் ஒரு திட்டத்தை கூறினார்.
- பெங்களூரு எனது வாழ்க்கையில் முக்கியமான ஆட்டங்களை விளையாட என்னை அனுமதித்தது
ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருபவர் ஆஸ்திரேலிய கிரிக்ட்டர் கிளென் மேக்ஸ்வெல். இவர் தனது வாழ்க்கை குறித்து சுயசரிதை பாணியில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணியில் விளையாடும் மேக்ஸ்வெல், விராட் கோலி மற்றும் ஆர்சிபி அணி குறித்து தனது புத்தகத்தில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய டூரின்போது விராட் என்னிடம் ஒரு திட்டத்தை கூறினார். 2021 இல் ஆர்சிபியில் விராட், நான் மற்றும் ஏபி டெல்விலியர்ஸ் மிடில் ஆர்டரில் விளையாடுவோம் என்று அவர்கூறிய திட்டம் எனக்கு பிடித்திருந்தது. சச்சின், ரிக்கிக்கு இணையான வீரர்களுடன் விளையாடுவது அற்புதமானது. அதன்பின் ஏலங்கள் நடந்தன. ஆர்சிபி என்னை தேர்ந்தெடுத்து அழைத்தபோது, உலகிலேயே மகிழ்ச்சியான கிரிக்கெட்டராக என்னை உணர்ந்தேன்.

பெங்களூரில் ஒரு பிளேயராக எனது இரண்டாவது ஆட்டத்தை தொடங்கினேன். பெங்களூரு எனது வாழ்க்கையில் முக்கியமான ஆட்டங்களை விளையாட என்னை அனுமதித்தது. 2023 மூன்றாவது சீசனின்போது ஆர்சிபியை நான் எனது வீடாக உணரத் தொடங்கினேன். உரிமையாளர்கள் மிகவும் பக்கபலமாக இருந்தனர் என்று தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
- இந்தியா ஏ அணி 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான இரண்டாவது அன்-அஃபிஷியல் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று (நவம்பர் 7) துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதனால் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா ஏ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய அபிமன்யூ ஈஸ்வரன் ரன் ஏதும் எடுக்காமலும், கே.எல். ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அடுத்து வந்த சாய் சுதர்சனும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
அடுத்து வந்தவர்களில் தேவ்தத் படிக்கல் 26 ரன்களும், துருவ் ஜூரெல் 80 ரன்களும் அடித்ததால் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா ஏ சார்பில் சிறப்பாக பந்துவீசிய மைக்கல் நாசர் 4 விக்கெட்டுகளையும், வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் மற்றும் கோரெ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், இந்தியா ஏ அணி 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா ஏ அணி தடுமாற அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இந்த இன்னிங்ஸில் கே.எல். ராகுல் அவுட் ஆன விதம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. கேரெ வீசிய ஓவரை எதிர்கொண்ட கே.எல். ராகுல் குறிப்பிட்ட பந்தை விளையாட மனமின்றி அதனை தவிர்க்க ஸ்டம்ப்களை விட்டு நகர ஆயத்தமானார். அப்போது பந்தின் திசை மாறியது. இதனால் பந்து ஸ்டம்ப்களை கடந்து சென்றுவிடும் என்று கே.எல். ராகுல் எதிர்பார்த்தார்.
ஆனால், பந்து அவரின் கால்களுக்கு இடையில் கடந்து சென்று ஸ்டம்ப்களை தகர்க்க கே.எல். ராகுல் களத்தில் இருந்து வெளியேறினார். கே.எல். ராகுல் அவுட் ஆன விதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
- இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலைடில் நடைபெற்றது.
- பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலைடில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 35 ரன்களை அடித்தார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 35 ஓவர்களில் 163 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரௌஃப் ஐந்து விக்கெட்டுகளையும், ஷாகீன் ஷா அப்ரிடி மூன்று விக்கெட்டுகளையும், நசீம் ஷா மற்றும் முகமது ஹஸ்னைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான சயிம் ஆயுப் மற்றும் அப்துல்லா ஷஃபிக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சயிம் ஆயுப் 82 ரன்களில் ஆட்டமிழக்க இவருடன் களமிறங்கிய அப்துல்லா 64 ரன்களை எடுத்தார். பாபர் அசாம் 15 ரன்களை அடிக்க பாகிஸ்தான் அணி 26.3 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 169 ரன்களை எடுத்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் சமன் செய்துள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
- பாகிஸ்தான் செல்லுமா என்பது கேள்வி குறியாகவே இருந்து வந்தது.
- அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் நடைபெறாமல் இருந்தது.
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்த தொடருக்காக இந்தியா அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது கேள்வி குறியாகவே இருந்து வந்தது.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008 கடைசியாக பாகிஸ்தானில் விளையாடியது. 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. இரு அணிகளுக்கு இடையிலான நேரடி தொடர் அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் நடைபெறாமல் இருந்தது.
ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடுவதற்காக ஹைப்ரிட் முறை பின்பற்றப்பட இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. சார்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது.
இது குறித்து பி.சி.சி.ஐ. வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் கூறும் போது, "இது தான் எங்கள் முடிவு, அதில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் எங்களது அனைத்து போட்டிகளையும் துபாய்க்கு மாற்ற அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்," என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறும் என்றும் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.
- முதல் இன்னிங்சில் இந்திய ஏ அணி 161 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
மெல்போர்ன்:
இந்தியா 'ஏ'-ஆஸ்திரேலியா 'ஏ'அணிகள் இடையே 4 நாள் போட்டிக் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய 'ஏ' அணி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. ஜூரெலின் அரை சதத்தின் மூலம் இந்திய அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் நேசர் 4 விக்கெட்டும் வெப்ஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது. முதல் இன்னிங்சை போலவே 2-வது இன்னிங்சிலும் இந்திய அணி தடுமாறியது. அபிமன்யூ 17, கேஎல் ராகுல் 10, சாய் சுதர்சன் 3, கேப்டன் ருதுராஜ் 11, படிக்கல் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 31 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் எடுத்துள்ளது.
பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்னோட்டமாக நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணி கேப்டன் ருதுராஜ் சொதப்பி உள்ளார். அவர் 4 இன்னிங்ஸிலும் சேர்த்து 20 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பார்டர்- கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் இடம்பெறாத நிலையில் இந்த தொடரில் சிறப்பாக ஆடினால் தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது
- இந்திய அணி சமீபத்தில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் விளையாடியது.
- இந்த டெஸ்ட் போட்டிகள் புனே, மும்பை, கான்பூர், சென்னை, பெங்களூரு ஆகிய மைதாங்களில் நடைபெற்றது.
இந்திய அணி சமீபத்தில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த 2 டெஸ்ட் தொடர்களும் இந்தியாவில் நடைபெற்றது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் கீரின் பார்க் கான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. அதேபோல நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே, வான்கடே மைதானம், மும்பை, எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு ஆகிய மைதாங்களில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த 5 மைதானங்களில் எந்த மைதானம் சிறந்தது என்ற மதிப்பீட்டை ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சிறந்த பிட்ச் மற்றும் சிறந்த அவுட் பீல்ட் மதிப்பீட்டை ஐ.சி.சி வழங்கியுள்ளது.
சின்னசாமி, புனே, வான்கடே மைதானங்களுக்கு திருப்திகரமானது எனவும், கான்பூர் மைதானத்திற்கு திருப்தியே இல்லையெனவும் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
- ஒரு அணி ரூ.15 கோடி வரை செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
- அதிகபட்சமாக குஜராத் ஜெயன்ட்ஸ் அணியிடம் ரூ.4.4 கோடி இருப்புத்தொகை உள்ளது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் 3-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி இந்த போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீராங்கனைகளின் விவரத்தை நேற்று வெளியிட்டது.
நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ரிச்சா கோஷ், சோபி டிவைன், எலிஸ் பெர்ரி உள்பட 13 வீராங்கனைகள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். டேனி வியாட் வர்த்தக பரிமாற்ற முறையில் உ.பி. வாரியர்ஸ் அணியில் இருந்து இழுக்கப்பட்டுள்ளார். ஹீதர் நைட் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.
முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், அமெலியா கெர், ஹெய்லி மேத்யூஸ், நாட் சிவெர் உள்பட 14 வீராங்கனைகள் நீடிக்கின்றனர். இசி வோங் உள்ளிட்ட 4 பேர் கழற்றி விடப்பட்டுள்ளனர். கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, அனபெல் சுதர்லேண்ட் உள்பட 14 வீராங்கனைகளை தக்கவைத்திருக்கிறது. பூனம் யாதவ் உள்ளிட்ட 4 பேரை வெளியேற்றியுள்ளது.
உ.பி. வாரியர்ஸ் அலிசா ஹீலி, சமாரி அட்டப்பட்டு, தீப்தி ஷர்மா உள்பட 15 பேரை தன்வசமாக்கி இருக்கிறது. 4 வீராங்கனைகளை கழற்றிவிட்டுள்ளது. குஜராத் ஜெயன்ட்ஸ் அணி பெத் மூனி, லாரா வோல்வார்ட், லிட்ச்பீல்டு உள்பட 14 வீராங்கனைகளை தக்கவைத்தது. சினே ராணா உள்பட 7 பேருக்கு கல்தா கொடுத்தது.
5 அணிகளும் மொத்தம் 71 வீராங்கனைகளை தக்கவைத்துள்ளன. விடுவிக்கப்பட்ட வீராங்கனைகள் ஏலத்திற்கு வருவார்கள். ஒரு அணி ரூ.15 கோடி வரை செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது. தக்க வைத்துள்ள வீராங்கனைகளுக்கான ஊதியம் போக மீதமுள்ள தொகை வைத்து அணிக்கு தேவையான எஞ்சிய வீராங்கனைகளை எடுக்கலாம். அதிகபட்சமாக குஜராத் ஜெயன்ட்ஸ் அணியிடம் ரூ.4.4 கோடி இருப்புத்தொகை உள்ளது.
- பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
- அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் இரு அணிகளும் நேரடி தொடரில் மோதுவதில்லை.
ராவல்பிண்டி:
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்த தொடருக்காக இந்தியா அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது இன்னும் வரை கேள்வி குறியாகவே உள்ளது.
கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ல் பாகிஸ்தானில் விளையாடி இருந்தது. அதன் பிறகு அங்கு சென்று விளையாடவில்லை. இரு அணிகளுக்கு இடையிலான நேரடி தொடர் அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் நடைபெறுவதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடுவதற்காக ஹைபிரிட் மாடல் நடைமுறைப்படுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஜார்ஜா அல்லது சவுதி அரேபியாவில் நடைபெறும் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
- நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் (2,831 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார்.
- 3-வது சுற்றில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி 39-வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்து வருகிறது. 7 சுற்று கொண்ட இந்த போட்டியில் நேற்று 3-வது சுற்று நடந்தது.
இதன் மாஸ்டர்ஸ் பிரிவில், கருப்பு நிற காய்களுடன் ஆடிய இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி 39-வது காய் நகர்த்தலில் அலெக்சி சாரனாவை (செர்பியா) தோற்கடித்தார். இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம்- விதித் குஜராத்தி இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
மற்ற ஆட்டங்களில் ஈரானின் அமீன் தபதாபேயி, பிரான்சின் மேக்சிம் வாச்சியர் லாக்ரேவையும், அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன், ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூவையும் 'செக்' வைத்து மடக்கினர். 3-வது சுற்று முடிவில் அர்ஜூன் எரிகைசி, தபதாபேயி தலா 2½ புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். இன்று 4-வது சுற்று நடைபெறும்.
இதற்கிடையே 3-வது சுற்றில் கிடைத்த வெற்றியின் மூலம் அர்ஜூன் எரிகைசி, லைவ் ரேட்டிங் தரவரிசையில் (2,805.8 புள்ளி) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் (2,831 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் இந்திய வீரர் பிரனேஷ் 46-வது நகர்த்தலில் தமிழக வீராங்கனை வைஷாலியையும், தமிழக வீரர் பிரணவ் 69-வது காய் நகர்த்தலில் கார்த்திகேயன் முரளியையும் வீழ்த்தினர். சத்வானி- லியோன் மென்டோன்கோ, ஹரிகா- அபிமன்யு ஆகியோர் இடையிலான மோதல்கள் 'டிரா' ஆனது. இந்த பிரிவில் 3 புள்ளிகளுடன் பிரணவ் முதலிடத்தில் உள்ளார்.
- மைதானத்தை பொறுத்தவரை டர்பன் இந்தியாவுக்கு ராசியானது.
- இங்கு ஆடியுள்ள 4 ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்த கிரிக்கெட் தொடர் ஏற்கனவே திட்டமிட்டது அல்ல. சமீபத்தில் இவ்விரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பேச்சுவார்த்தை நடத்தி இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளன. டர்பன் (நவ.8), கெபேஹா (நவ.10), செஞ்சூரியன் (நவ.13), ஜோகன்னஸ்பர்க் (நவ.15) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
உலகக் கோப்பையையும் சேர்த்து கடைசி ஐந்து 20 ஓவர் தொடர்களில் கோப்பையை வென்றுள்ள இந்திய அணி அந்த ஆதிக்கத்தை நீட்டிக்க முனைப்பு காட்டுகிறது. சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்த போதிலும், அந்த தொடரில் ஆடிய வீரர்கள் யாரும் 20 ஓவர் போட்டிக்கு வரவில்லை. அதனால் அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்காது. கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப்சிங் போன்ற அனுபவ வீரர்கள் அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.
அதிரடி இடக்கை பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 47 பந்தில் சதம் விளாசினார். அதன் பிறகு ஆடிய தனது கடைசி 6 சர்வதேச இன்னிங்சில் 20 ரன்னை கூட தொடவில்லை. மீண்டும் பார்முக்கு திரும்ப இந்த தொடரை அவர் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார். அவரும், சஞ்சு சாம்சனும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்குவார்கள். மிடில் வரிசையில் சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா, ரிங்கு சிங் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், ஆவேஷ்கான், அக்ஷர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி கட்டுக்கோப்பாக பந்து வீசினால் தொடரை வெற்றியோடு தொடங்கலாம்.
எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா உள்நாட்டில் வலுவானது. ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ரீஜா ஹென்ரிக்ஸ் போன்ற அதிரடி சூரர்கள் இருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவிடம் 7 ரன் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு பழிதீர்ப்பதை எதிர்நோக்கி இருப்பார்கள். அத்துடன் ஐ.பி.எல். ஏலத்தில் பதிவு செய்துள்ள வீரர்கள் இந்த தொடரில் அசத்தினால் அவர்களது 'மதிப்பு' ஏலத்தில் எகிற வாய்ப்பு உண்டு. அந்த வகையிலும் வீரர்களுக்கு இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 15-ல் இந்தியாவும், 11-ல் தென்ஆப்பரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
மைதானத்தை பொறுத்தவரை டர்பன் இந்தியாவுக்கு ராசியானது. இங்கு ஆடியுள்ள 4 ஆட்டங்களிலும் (பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) இந்தியா வெற்றி கண்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி கடந்த ஆண்டு இங்கு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 2007-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக கென்யா 73 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும். 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில், இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர் நொறுக்கியது இந்த மைதானத்தின் தனிச்சிறப்பாகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ரமன்தீப்சிங், அக்ஷர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், ஆவேஷ்கான்.
தென்ஆப்பிரிக்கா: ரீஜா ஹென்ரிக்ஸ், ரியான் ரிக்கெல்டன், மார்க்ரம் (கேப்டன்), டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், மார்கோ யான்சென் அல்லது ஜெரால்டு கோட்ஜீ, கேஷவ் மகராஜ், ஒட்னில் பார்ட்மன், பேட்ரிக் குருகர், அன்டில் சிம்லேன் அல்லது இன்கபா பீட்டர்.
இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.
இந்த ஆட்டத்தின் போது மழை குறுக்கிடலாம். அங்கு இன்று மழை பெய்வதற்கு 40 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.






