என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் நடைபெறுகிறது.
    • இதில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    சியோல்:

    தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சீன தைபே வீரர் சி.யு.ஜென் மோதினர்.

    முதல் செட்டை 21-17 என கைப்பற்றிய கிரண் ஜார்ஜ், இரண்டாவது செட்டை 19-21 என போராடி இழந்தார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இவர் 21-17 என தன்வசப்படுத்தினார்.

    இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடம் நீடித்தது.

    இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்குள் நுழைந்த கிரண் ஜார்ஜ் ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதுகிறார்.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ரியாத்:

    உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது. ஒற்றையர் பிரிவில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா மோதுகிறார்.

    இரவு 9.45 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவுடன், அமெரிக்காவின் கோகோ காப் மோதுகிறார்.

    நாளை இறுதிப்போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 602 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் ஷ்ரேயஸ் அய்யர் இரட்டை சதமடித்து அசத்தினார்.

    மும்பை:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    இதில் நடப்பு சாம்பியன் மும்பை- ஒடிசா (ஏ பிரிவு) இடையிலான ஆட்டம் மும்பையில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஒடிசா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 123.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 233 ரன்களும், சித்தேஷ் லாத் 169 ரன்களும் குவித்தனர். ரகுவன்ஷி 92 ரன்னும், சூர்யன்ஷ் ஷெட்கே 79 ரன்னும் எடுத்துள்ளனர்.

    அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஒடிசா அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 49 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. சந்தீப் பட்நாயக் 73 ரன்னும், தேபரதா பிரதான் 7 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 2 வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    ரியாத்:

    உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.

    ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் நம்பர் 2 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் டேரியா கசட்கினா உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-1, 6-0 என எளிதில் வென்றார்.

    மற்றொரு போட்டியில் செக் வீராங்கனை கிரெஜ்சிகோவா அமெரிக்காவின் கோகோ காப்பை 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • தபாங் டெல்லி அணி மூன்றாவது வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின.

    விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 33-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    தபாங் டெல்லி அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.

    தொடர்ந்து நடந்த 2வது ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 35-22 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

    • ஆர்.சி.பி. அணி வாங்க வேண்டிய நான்கு வீரர்களை அறிவித்துள்ளார்.
    • பந்துவீச்சாளர்களை உருவாக்க கவனம் செலுத்த வேண்டும்.

    தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை அவர்களது ஹோம் கிரவுண்ட்- எம் சின்னசாமி மைதானத்தை புரிந்து கொண்டு விளையாடும் அணியை உருவாக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதோடு ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஆர்.சி.பி. அணி வாங்க வேண்டிய நான்கு வீரர்களை அறிவித்துள்ளார்.

    முன்னாள் ஆர்.சி.பி. வீரரான ஏபி டி வில்லியர்ஸ் அந்த அணி யுஸ்வேந்திர சாஹலை மீண்டும் அணியில் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். ஆர்.சி.பி. அணி ஹோம் கிரவுண்டில் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்ட உறுதியான மற்றும் அனுபம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை உருவாக்க கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

    இவர்கள் தவிர போட்டியை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய மிகவும் அனுபவம் வாய்ந்த நான்கு வீரர்களை வாங்குவதற்கு ஆர்.சி.பி. அணி மீதித் தொகையை செலவிட வேண்டும். இதைத் தொடர்ந்து ஆர்.சி.பி. அணி வாங்க வேண்டிய நான்கு வீரர்கள் பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸ்- சாஹல், அஸ்வின், ககிசோ ரபாடா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த நான்கு வீரர்களுக்கு அதிக தொகையை செலவிடலாம் என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், "நல்ல விஷயம் என்னவென்றால், நம்மிடம் விராட் இருக்கிறார். வீரர்களை தக்கவைப்பதில் நாம் அதிக தொகையை செலவிடவில்லை. இன்னும் செலவிட அதிக தொகை இருப்பது நல்ல விஷயம்," என்று தெரிவித்தார். 

    • பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வெளிப்படும் என்று தெரிவித்துள்ளார்.
    • விராட் கோலி இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார்?

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி இந்திய அணியில் 2027 ஆம் ஆண்டு வரை நிச்சயம் விளையாடுவார் என்று ஜோதிடர் ஒருவர் கணிப்பு தெரிவித்துள்ளார். மேலும், விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் இம்மாத இறுதியில் துவங்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வெளிப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    தனியார் செய்தி நிறுவனம் நடத்திய கிரிக்கெட் மற்றும் ஜோதிடம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லபோ, "என்னிடம் சமீப காலங்களில் அதிகளவு முன்வைக்கப்படும் கேள்வி, விராட் கோலி இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார்? என்பது தான்."

    "இந்த கேள்வி அன்பும், ஆர்வத்தின் காரணமாகவே வெளிப்படுகிறது. மக்கள் விராட் கோலி இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார், அவர் விளையாடுவதை இன்னும் எவ்வளவு காலம் கண்டுகளிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள விரும்புகின்றனர்."

    "இதனால் விராட் கோலி ரசிகர்கள் அனைவருக்கும், நான் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். உங்களுக்கு இதை மட்டும் உறுதியாக கூறுகிறேன். விராட் கோலி 2027 ஆம் ஆண்டு வரை நிச்சயம் விளையாடுவார். விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் இனிதான் வெளிப்பட போகிறது," என்று தெரிவித்தார்.

    • உத்தரபிரதேச அணி பெற்ற 2-வது வெற்றியாகும்.
    • டெல்லி அணி முதல் தோல்வியை தழுவியது.

    சென்னை:

    தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், தமிழ்நாடு,டெல்லி, கேரளா உள்பட 30 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு தகுதி பெறும்.

    போட்டியின் 4-வது நாளான இன்று காலை நடந்த முதல் ஆட்டத்தில் 'எப்' பிரிவில் உள்ள உத்தர பிரதேசம்-டெல்லி அணிகள் மோதின. இதில் உத்தர பிரதேசம் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    உத்தரபிரதேச அணியில் சந்தன் சிங் (4-வது நிமிடம்), அருண் விகாரி (19), மனிஷ் விகாரி (20) பரால் முகமது (26) கோல் அடித்தனர். டெல்லி அணி தரப்பில் கோவிந்த் சிங் 17-வது நிமிடத்தில் கோலை பதிவு செய்தார்.

    உத்தரபிரதேச அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே கேரளாவை 6-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. டெல்லி அணி முதல் தோல்வியை தழுவியது.

    'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி இன்று மாலை 3.45 மணிக்கு அந்தமான் நிகோபாரை சந்திக்கிறது. தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் ஆந்திராவை 7-0 என்ற கணக்கில் வென்றது. 2-வது ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' செய்தது. கால் இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் தமிழக அணி அந்தமான் நிக்கோபாரை அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.

    • கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த டோனியை டிரம்ப் கோல்ப் விளையாட அழைத்தார்.
    • டிரம்புடன் இணைந்து டோனி சிறிது நேரம் கோல்ப் விளையாடினார்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்ற நிலையில், டோனி- டிரம்ப் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. டோனி கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது டோனியை கோல்ப் விளையாட வருமாறு முன்னாள் அதிபர் டிரம்ப் அழைத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று பெட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள டிரம்ப் நேஷனல் கோல்ப் கிளப்புக்கு டோனி சென்றார்.

    அப்போது டிரம்புடன் இணைந்து டோனி சிறிது நேரம் கோல்ப் விளையாடினார். அப்போது இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படத்தை தற்போது மீண்டும் டோனியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    மேலும் டோனியின் ஜெர்சி எண்-7 உடன் டிரம்பின் வெற்றியை இணைத்து மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், தேர்தல் நடைபெற்ற நாள் 6-11-2024. 6+1+1+2+2+4= 16, 1+6=7. இந்த காரணத்திற்காக தல என பதிவிட்டுள்ளார்.

    • அல்ஜாரி ஜோசப், கோபத்தில் வெளியேறியதால் 10 வீரர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் செய்தது.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    பார்படாஸ்:

    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட்ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளின் முடிவில் தலா ஒரு வெற்றியுடன் தொடர் சமனில் இருந்தது.

    இந்நிலையில், தொடரை வெல்லும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் இன்று பார்படாசில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 267 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

    முன்னதாக, இங்கிலாந்து பேட்டிங் செய்த போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் மற்றும் கேப்டன் ஹோப் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. அல்ஜாரி ஜோசப் பந்து வீசும் போது அவருக்கு தேவையான இடத்தில் பீல்டரை வைக்குமாறு கூறினார். இதற்கு கேப்டன் ஹோப் மறுப்பு தெரிவித்தார்.

    அந்த ஓவரின் கடைசி பந்தில் ஜோசப்புக்கு விக்கெட் கிடைத்தது. ஆனால் அதை கொண்டாடமல் கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து ஜோசப் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி 10 வீரர்களுடன் பீல்டிங் செய்தனர். சிறிது நேரம் கழித்து ஜோசப் மைதானதிற்குள் நுழைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • அபிமன்யூ, சாய் சுதர்சன் ஆகியோர் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
    • ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் நேசர் 4 விக்கெட்டும் வெப்ஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    மெல்போர்ன்:

    இந்தியா 'ஏ'-ஆஸ்திரேலியா 'ஏ'அணிகள் இடையே 4 நாள் போட்டிக் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய 'ஏ' அணியின் தொடக்க வீரர்களாக அபிமன்யூ- கேஎல் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே அபிமன்யூ டக் அவுட் ஆனார். அடுத்து வந்த சாய் சுதர்சன் கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 2-வது ஓவரில் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து கேப்டன் 4 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

    இதனால் இந்திய அணி 11 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து படிக்கல் மற்றும் ஜூரெல் நிதானமாக விளையாடி விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். ஆனால் ரொம்ப நேரம் அது தொடரவில்லை. படிக்கல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த வீரர்கள் நிதிஷ் ரெட்டி 16, தனுஷ் கோட்யான் 0, கலீல் அகமது 1, பிரசித் கிருஷ்ணா 14 என விக்கெடுகளை பறிகொடுத்தனர். ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜூரெல் அரை சதம் அடித்ததுடன் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இந்திய ஏ அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் நேசர் 4 விக்கெட்டும் வெப்ஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    • ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தும் 30-வது வீரராக இங்கிலிஸ் களமிறங்க உள்ளார்.
    • டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் 14-வது கேப்டனாக இங்கிலிஸ் களமிறங்க உள்ளார்.

    பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா போராடி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பேட் கம்மின்ஸ் கேப்டனாகவும் 3-வது ஒருநாள் மற்றும் டி20 தொடரில் முழுவதும் ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக ஜோஸ் இங்கிலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தும் 30-வது வீரராகவும், டி20 வடிவத்தில் 14-வது வீரராகவும் இங்கிலிஸ் திகழ்வார்.

    ஆஸ்திரேலிய அணியின் சீனியர் வீரர்களான கம்மின்ஸ், ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்னஸ் லாபுஷக்னே ஆகியோர் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளதால் அதற்கு தயாராகும் வகையில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

    ×