என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி 84 ரன்கள் எடுத்தார்.
    • வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிசுர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஷார்ஜா:

    ஆப்கானிஸ்தான்- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி 84 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிசுர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    தொடர்ந்து 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேச அணியினர் ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதன் மூலம் 92 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷாண்டோ 47 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அல்லா கசன்ஃபர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என ஆப்கானிஸ்தான் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது.

    • பர்பிள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜாங் கின்வென்- ஜாஸ்மின் பாவ்லினி மோதினர்.
    • ஜாங் கின்வென் 6-1, 6-1 என்ற நேர்செட்டில் ஜாஸ்மின் பாவ்லினியை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

    ரியாத்:

    உலகின் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.

    இதில் 'பர்பிள்' பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான ஜாங் கின்வென் (சீனா) 6-1, 6-1 என்ற நேர்செட்டில் 4-ம் நிலை வீராங்கனையான ஜாஸ்மின் பாவ்லினியை (இத்தாலி) விரட்டியடித்து 2-வது வெற்றியை சுவைத்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

    ஒரு வெற்றி, 2 தோல்வியை சந்தித்த ஜாஸ்மின் பாவ்லினி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார். 

    • கீசி கார்டி, கிங் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.
    • கீசி கார்டி 128 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    பார்படாஸ்:

    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட்ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளின் முடிவில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பார்படாசில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து 24 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். கடைசி கட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடியாக ஆடி 17 பந்தில் 38 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மேத்யூ போடு 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், ரூதர்போர்ட்தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிராண்டன் கிங், எவின் லூயிஸ் களமிறங்கினர். லீவிஸ் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கீசி கார்டி, கிங்குடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினர்.

    வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 18 ரன்கள் இருந்த போது கிங் அவுட் ஆனார். 102 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 267 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    • 2007-ம் ஆண்டு யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசியது என்னை வெகுவாக கவர்ந்தது.
    • இந்த மைதானத்திற்கு வந்ததும், எந்த முனையில் இருந்து அவர் 6 சிக்சரை விரட்டினார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்தேன்.

    டர்பன்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நாளை இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.

    இந்த போட்டிக்கு தயாராகும் இந்திய தொடக்க ஆட்டக்காரான பஞ்சாப்பை சேர்ந்த அபிஷேக் ஷர்மா, இதே டர்பன் மைதானத்தில் 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் போது இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். 24 வயதான அபிஷேக் ஷர்மாவுக்கு, யுவராஜ்சிங் ஆலோசகராக உள்ளார்.

    அபிஷேக் ஷர்மா கூறுகையில், 'டர்பன் மைதானத்தை இதற்கு முன்பு டி.வி.யில் தான் பார்த்துள்ளேன். அதே மைதானத்தில் இப்போது நான் இருப்பது கனவு நனவானது போல் உள்ளது. 2007-ம் ஆண்டு யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசியது என்னை வெகுவாக கவர்ந்தது. முதல் நாள் இந்த மைதானத்திற்கு வந்ததும், எந்த முனையில் இருந்து அவர் 6 சிக்சரை விரட்டினார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்தேன். அவர் மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களை தெறிக்க விட்டது மறக்க முடியாத ஒன்று.

    அந்த ஆட்டத்தை நான் எனது குடும்பத்தினருடன் டி.வி.யில் பார்த்ததும், வெற்றி பெற்றதும் வீட்டுக்கு வெளியில் வந்து கொண்டாடியதும் இன்னும் நினைவில் உள்ளது. இப்போது அதே இடத்தில் நான் விளையாட இருப்பதை நிச்சயம் யுவராஜ்சிங் பார்ப்பார். அவருக்கு சொல்ல விரும்பும் தகவல், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அவரை பெருமையடையச் செய்வேன்' என்றார்.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை பெகுலா திடீரென விலகினார்.

    ரியாத்:

    உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற இருந்த போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா மோதுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகுவதாக ஜெசிகா பெகுலா அறிவித்துள்ளார். இவருக்கு பதிலாக கசட்கினா மாற்று வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து 263 ரன்கள் எடுத்துள்ளது.

    பார்படாஸ்:

    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட்ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு போட்டிகளின் முடிவில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பார்படாசில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து தொடக்கத்தில் ரன்கள் சேர்க்க திணறியது. 24 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 5வது மற்றும் 6வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தார்.

    பிலிப்ஸ் சால்ட் 74 ரன்னும், டான் மூஸ்லி 57 ரன்னும் எடுத்தனர். சாம் கர்ரன் 40 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடியாக ஆடி 17 பந்தில் 38 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மேத்யூ போடு 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், ரூதர்போர்ட்தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா தோல்வி அடைந்தார்.

    ரியாத்:

    உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.

    ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உடன் மோதினார்.

    இதில் ரிபாகினா 6-4 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டை 6-3 என சபலென்கா வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை6-1 என வென்றார்.

    மற்றொரு போட்டியில் சீனாவின் குயின்வென் ஜெங், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை 6-1, 6-1 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • தெலுங்கு டைட்டன்ஸ் அணி நான்காவது வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.

    இறுதியில், 35-34 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. இது தெலுங்கு டைட்டன்ஸ் அணி பெற்ற நான்காவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

    • யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் சரிந்து 4-வது இடம் பிடித்துள்ளார்.
    • இந்திய வீரர் ரிஷப் பண்ட் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.

    இந்த பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திலும், நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் ஹாரி புரூக் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் சரிந்து 4-வது இடம் பிடித்துள்ளார்.

    இந்திய வீரர் ரிஷப் பண்ட் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடியதால், 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    நட்சத்திர வீரரான விராட் கோலி 22-வது இடமும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா 26-வது இடமும் பிடித்துள்ளனர்.

    • ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
    • முகமது ஷமி இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இழந்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    அதோடு இந்த தொடரின் மோசமான தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 அல்லது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும்.

    இந்நிலையில், 'பார்டர் கவாஸ்கர்' டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றக் கூடும் என அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய ரிக்கி பாண்டிங், "பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் எதாவது ஒரு போட்டியில் இந்தியா வெற்றி பெரும் என்று நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் தோற்கடிப்பது சவாலான விஷயம். எனவே 3-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும் என்று கருதுகிறேன். இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். முகமது ஷமி இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாகும்" என்று தெரிவித்தார்.

    முகமது ஷமி இல்லாத நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் மற்றும் இளம் வீரர்கள் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் இந்தியா விளையாடிய தனது கடைசி இரண்டு பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர்களையும் இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இப்படத்தில் சூர்யா இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ளனர். கங்குவா படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    திரைப்படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடப்பெற்றது.

    இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 'கங்குவா' பட போஸ்டரை இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐபிஎல் மெகா ஏலம் இம்மாத 24, 25 தேதிகளில் நடைபெறுகிறது.
    • ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் அணிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத 24, 25 தேதிகளில் நடைபெறம் என பிசிசிஐ நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

    இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகின்றனர்

    இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் அணிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    ஆர்சிபி அணி நிர்வாகம் எனக்கு போன் செய்து, தக்க வைப்பது குறித்து பேசினார்கள். நாங்கள் அரை மணி நேரம் பேசினோம். ஒவ்வொரு அணியும் இவ்வாறு செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். இது அணிக்கும் வீரர்களுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்தும். நான் மீண்டும் ஆர்சிபிக்கு வந்தால் எனக்கு சந்தோஷம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×