என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நடுத்தர வயது பெண் ஒருவர் விராட் கோலியின் கையைப் பற்றி இழுத்தார்
    • மும்பையில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கோலி ரசிகர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் செல்பி மற்றும் ஆட்டோகிராப்களை கொடுப்பவர். ஆனால் அவரே ரசிகர் ஒருவரின் செயலால் அசௌகர்யமாக உணர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், நடுத்தர வயது பெண் ஒருவர் விராட் கோலியின் கையைப் பற்றி இழுத்து செல்பிக்கு நிற்கவிக்கிறார். தான் உள்ளே செல்ல வேண்டும் என்ற அவசரப்பட்ட விராட் கோலியின் கையைப் பிடித்து எதிர் திசையில் இழுத்து அந்த பெண்மணி செல்பி எடுத்துள்ளார்.

    இதனால் அசௌகர்யமாக உணர்ந்தாலும், எதிர்ப்பு தெரிவிக்காமல் விராட் அந்த பெண்மணியின் செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த சம்பவமானது சமீபத்தில் மும்பையில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கோலி கலந்துகொண்டபோது நடந்ததாகத் தெரிகிறது.

    • ரோகித் சர்மா, கம்பீர் ஆகியோர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்து கடுமையான கேள்விகளை எழுப்பியது.
    • மும்பை டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளித்தது குறித்து பி.சி.சி.ஐ. கடுமையாக பாய்ந்தது.

    நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் இழந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. 92 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது.

    இந்த தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் நியூசிலாந்து ஒயிட்வாஷ் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) 6 மணி நேரம் ஆய்வு நடத்தியது. பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கம்பீர், தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். கம்பீர் காணொலி வாயிலாக பங்கேற்றார்.

    இந்த கூட்டத்தில் ரோகித் சர்மா, கம்பீர் ஆகியோர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்து கடுமையான கேள்விகளை எழுப்பியது. மும்பை டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளித்தது குறித்து பி.சி.சி.ஐ. கடுமையாக பாய்ந்தது. நியூசிலாந்து தொடர் முழுவதும் அணி நிர்வாகம் எடுத்த சில முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பியது. கம்பீரின் பயிற்சி அணுகுமுறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி செயல்படும் விதம் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

    • முதல் டெஸ்ட போட்டி பெர்த் மைதானத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.
    • ஜனவரி 7-ந்தேதி கடைசி டெஸ்ட் சிட்னியில் தொடங்குகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் கொண்ட ஆலன் பார்டர்- கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. ஜனவரி 7-ந் சிட்னியில் தொடங்கும் டெஸ்ட் உடன் தொடர் முடிகிறது.

    இந்திய அணி 2 கட்டமாக ஆஸ்திரேலியாவுக்கு பயணமாகிறது. முதல் குழு நாளை புறப்படுகிறது. நாளை மறுநாள் 2-வது குழு ஆஸ்திரேலியா செல்கிறது.

    இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றினால்தான் ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தொடருக்கான இந்திய அணி விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. பும்ரா (துணைக்கேப்டன்), 3. ஜெய்ஸ்வல், 4. அபிமன்யூ ஈஸ்வரன், 5. சுப்மன் கில், 6. விராட் கோலி, 7. கே.எல். ராகுல், 8. ரிஷப் பண்ட் (வி.கீப்பர்), 9. சர்பராஸ் கான், 10. துருவ் ஜூரெல் (வி.கீப்பர்), 11. அஸ்வின், 12. ஜடேஜா, 13. முகமது சிராஜ், 14. ஆகாஷ் தீப், 15. பிரசித் கிருஷ்ணா, 16. ஹர்ஷித் ராணா, 17. நிதிஷ் குமார் ரெட்டி, 18. வாஷிங்டன் சுந்தர்.

    ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த இரண்டு தொடர்களையும் இந்தியா தொடர்ச்சியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புரோ கபடி ‘லீக்’போட்டியில் நேற்றுடன் 43 ஆட்டங்கள் முடிந்துள்ளன.
    • புனே அணி 5 வெற்றி, 1 தோல்வி, 1 டையுடன் 29 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    ஐதராபாத்தில் இன்றுடன் போட்டிகள் முடிகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் நடப்பு சாம்பியன் புனேரி பல்தான் அணிகளும், 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பெங்ளூரு புல்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகளும் மோதுகின்றன.

    நாளை முதல் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் போட்டி நடக்கிறது. நாளைய ஆட்டத்தில் உ.பி.- மும்பை, குஜராத்- அரியானா அணிகள் மோதுகின்றன.

    புரோ கபடி 'லீக்' போட்டியில் நேற்றுடன் 43 ஆட்டங்கள் முடிந்துள்ளன. புனே அணி 5 வெற்றி, 1 தோல்வி, 1 டையுடன் 29 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

    மும்பை, டெல்லி தலா 24 புள்ளிகளுடனும், பாட்னா 22 புள்ளிகளுடனும் அரியானா, தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் தலா 21 புள்ளியுடனும் உள்ளன. ஜெய்ப்பூர் (20), உ.பி. (19), பெங்கால் (18), பெங்களூரு (12), குஜராத் (7) அதற்கு அடுத்த நிலையில் உள்ளன.

    • நிறைய யோசித்தால் உணர்ச்சிவசப்படுவேன்.
    • நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுடனும், ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருக்கிறேன்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று டர்பனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 202 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 50 பந்தில் 7 பவுண்டரி, 10 சிக்சருடன் 107 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 141 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகள் விருதை வென்றார். ஆட்ட நாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன் கூறுகையில் "நிறைய யோசித்தால் உணர்ச்சிவசப்படுவேன். இந்த தருணத்திற்காக நான் 10 ஆண்டுகளாக காத்திருந்தேன். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுடனும், ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருக்கிறேன். ஆனால் நான் என் கால்களை தரையில் வைக்க விரும்புகிறேன், இந்த தருணத்தில் அதில் இருக்க விரும்புகிறேன்.

    ஆடுகளத்தில் என்னுடைய நேரத்தை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்தேன். ஆக்ரோசமாக விளையாடி அணியை நீங்களே முன்னதாக கொண்டு சொல்ல வேண்டும் என அணியில் பேசிக்கொண்டோம். அந்த எண்ணத்துடன் விளையாடினேன்.

    மூன்று நான்கு பந்துகளை சந்தித்தபின், பவுண்டரி அடிக்க வேண்டும் எனத் தோன்றும். நான் அதை பற்றி அதிகமாக சிந்திக்கவில்லை. சில நேரம் இது சாத்தியமாகும். சில நேரம் சறுக்கல் ஏற்படும். இன்று எனக்கு சரியாக வேலை செய்தது மகிழ்ச்சியாக விசயம். இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது மிக முக்கியமானது. சிறந்த அணியான தென்ஆப்பிரிக்காவுக்கு சொந்த மண் கூடுதல் சாதகமாக இருக்கும்.

    இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

    டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.

    • முதல் இன்னிங்சில் ஜூரெல் 80 ரன்கள் அடித்தார்.
    • 2-வது இன்னிங்சில் 68 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா 'ஏ' அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே முடிவடைந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் 2-வது போட்டி கடந்த 7-ந்தேதி மெல்போர்னில் தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 'ஏ' பந்து வீச்சை தேர்தவு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா 'ஏ' 161 ரன்னில் சுருண்டது, அபிமன்யூ ஈஸ்வரன், சாய் சுதர்சன் ஆகியோர் டக்அவுட் ஆகினர். கே.எல். ராகுல் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தலா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பரான துருவ் ஜுரெல் தாக்குப்பிடித்து அதிகபட்சமாக 80 ரன்கள் அடித்தார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 'ஏ' 223 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பிரசித் 4 விக்கெட்டும், முகேஷ் குமார் 3 விக்கெட்டும், கலீல் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 'ஏ' அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜுரேல் 19 ரன்களுடனும், நிதிஷ் குமார் ரெட்டி 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நிதிஷ் குமார் ரெட்டி 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தனுஷ் கோட்டியன் 44 ரன்கள் அடித்தார். மறுமுனையில் துருவ் ஜுரேல் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்தியா 'ஏ' 2-வது இன்னிங்சில் 229 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதனால் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா 'ஏ'. தற்போது ஆஸ்திரேலியா 'ஏ' 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    • பாகிஸ்தான் பேட்ஸ்மேன் கம்ரான் குலாம் மெல்போர்ன் டெஸ்டில் களம் இறங்கினார்.
    • கடந்த வருடம் வீரர் ஒருவர் காயம் அடைந்ததால் மாற்று வீரராக களம் இறக்கப்பட்டார்.

    பாகிஸ்தான் பேட்ஸ்மேன் கம்ரான் குலாம். ஆல்-ரவுண்டரான இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் அசாமிற்குப் பதிலாக களம் இறங்கினார். அறிமுக போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் விளாசி அசத்தினார்.

    தற்போது பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. புகழ்வாய்ந்த மெல்போர்ன் மைதானத்தில் கம்ரான் குலாம் அறிமுகம் ஆனார்.

    ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இடையில் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான தொப்பியை அணிய இருப்பது குறித்து சந்தோசம் அடைந்தார். பொதுவாக ஒரு கிரிக்கெட் வடிவில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) அறிமுகம் ஆகும்போது அந்த அணியின் தொப்பி வழங்கப்பட்டு வீரர் கவுரவிக்கப்படுவார்.

    அப்படி தனக்கு கவுரவம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் கம்ரான் குலாமிடம் உங்களுக்கு தொப்பி வழங்க இயலாது. நீங்கள் ஏற்கனவே ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    இது கம்ரான் குலாமிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹாரிஸ் சோஹைல் களம் இறங்கினார். ஹாரிஸ் சோஹைலை பந்து தாக்க Conscussion என்ற அடிப்படையில் வெளியேற, கம்ரான் குலாம் Conscussion மாற்று வீரரான களம் இறங்கினார்.

    ஆனால் பேட்டிங்கும் செய்யவில்லை, பந்தும் வீசவில்லை. பீல்டிங் மட்டுமே செய்தார். இருந்தபோதிலும் ஒரு வீரருக்கு மாற்றாக பேட்டிங் மற்றும் பந்து வீசும் தகுதியுடன் களம் இறங்கியதால் அந்த போட்டியிதான் அறிமுகம் போட்டி என ஒருநாள் போட்டிக்கான தொப்பி வழங்க மறுக்கப்பட்டது.

    • சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
    • அதிரடியாக ஆடிய சாம்சன் 50 பந்தில் 107 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

    டர்பன்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 202 ரன்கள் குவித்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடினார்.

    சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் 2வது சதம் இதுவாகும். அதிரடியாக ஆடிய சாம்சன் 50 பந்தில் 107 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சாம்சன் படைத்தார்.

    • கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் நடைபெறுகிறது.
    • இதில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    சியோல்:

    தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதினார்.

    இதில் கிரண் ஜார்ஜ் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார்.

    இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்த கிரண் ஜார்ஜ் தாய்லாந்து வீரருடன் மோதுகிறார்.

    • அல்ஜாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தடைவிதித்தது.
    • இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றி அசத்தியது.

    லண்டன்:

    இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.

    இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 263 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது மட்டுமின்றி, தொடரையும் கைப்பற்றியது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 10 ஓவர் பந்துவீசி ஒரு மெய்டனுடன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    முதலாவது இன்னிங்சில் 4-வது ஓவரின்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோர்டன் காக்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அல்ஜாரி ஜோசப் பவுலிங் செய்யவந்தபோது 2 பேர் ஸ்லிப்பில் இருந்தனர். அல்ஜாரி ஜோசப் முதல் பந்தை வெளியே வீசினார். பேட்டர் அதை அடிக்கவில்லை.

    அடுத்த பந்தின்போது ஸ்லிப்பில் இருந்த வீரரை பாய்ண்ட் திசையில் நிற்க வைத்துள்ளார் கேப்டன் ஹோப். இதனால் கேப்டனுக்கும், அல்ஜாரி ஜோசப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த ஓவரை ஜோசப் மெய்டன் ஓவராக வீசினார்.

    பீல்டிங் செட் செய்வது குறித்து கேப்டன் ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப்பிடம் எதுவும் தெரிவிக்காததால் அந்த ஓவர் முடிந்தபின் ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறினார். பயிற்சியாளர் டேரன் ஷமி பவுண்டரி எல்லையில் இருந்து குரல் கொடுத்த போதும், அல்ஜாரி ஜோசப் கண்டுகொள்ளாமல் வெளியே சென்றார்.

    அல்ஜாரி ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறியதால், மாற்று வீரர் யாரும் களமிறங்க முடியாத சூழலால் அடுத்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் விளையாடினர். இதனால் பார்வையாளர்கள், நடுவர்கள் மத்தியில் குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    இந்நிலையில், கேப்டனுடன் வாக்குவாதம் செய்துவிட்டு காரணம் சொல்லாமல் மைதானத்தை விட்டு வெளியேறிய அல்ஜாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.

    • பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனை சபலென்கா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    ரியாத்:

    உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.

    ஒற்றையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற முதல் அரையிறுதியில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங் உடன் செக் வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா மோதினார்.

    இதில் குயின்வென் ஜெங் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இரவு 9.45 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவுடன், அமெரிக்காவின் கோகோ காப் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டியில் நுழைந்தார்.

    இறுதிப்போட்டியில் கோகோ காப், குயின்வென் ஜெங்கை எதிர்கொள்கிறார்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • தபாங் டெல்லி அணி நான்காவது வெற்றி பெற்றது.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர்.

    விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பாட்னா அணி 43-41 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இது பாட்னா பைரேட்ஸ் அணி பெறும் 4வது வெற்றி ஆகும்.

    மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. இதில் அதிரடியாக ஆடிய தபாங் டெல்லி 39-26 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

    தபாங் டெல்லி அணி பெற்ற 4வது வெற்றி இதுவாகும்.

    ×