என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம்: சாதனை படைத்த சாம்சன்
    X

    டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம்: சாதனை படைத்த சாம்சன்

    • சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
    • அதிரடியாக ஆடிய சாம்சன் 50 பந்தில் 107 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

    டர்பன்:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 202 ரன்கள் குவித்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடினார்.

    சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் 2வது சதம் இதுவாகும். அதிரடியாக ஆடிய சாம்சன் 50 பந்தில் 107 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சாம்சன் படைத்தார்.

    Next Story
    ×