என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
- மேக்ஸ்வெல் 10,000 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
பிரிஸ்பேன்:
பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
இதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் 10,000 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தச் சாதனையை படைத்த 3-வது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தத்தில் 16-வது வீரர் என்ற பெருமையை மேக்ஸ்வெல் பெற்றுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 19 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து இந்த சாதனையை அவர் ஏற்படுத்தி இருக்கிறார்.
இதுவரை 448 போட்டிகளில் பங்கேற்று 421 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் மொத்தம் 10,031 ரன்களை எடுத்து பேட்டிங் சராசரி 27.70 வைத்திருக்கிறார். இவற்றில் 7 சதங்களும், 54 அரை சதங்களும் அடங்கும். ஆட்டமிழக்காமல் 154 ரன்கள் என்பதே இவருடைய அதிகபட்ச ரன் குவிப்பு ஆகும்.
இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் (12,411 ரன்), ஆரோன் பின்ச் (11,458 ரன்கள்) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது லீக் போட்டியில் 2ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், 6-வது நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ்7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வென்றார்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் யு மும்பா அணி 6-வது வெற்றியைப் பதிவு செய்தது.
நொய்டா:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் யு மும்பா, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடினர்.
இறுதியில், யு மும்பா அணி 40-34 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது. இது யு மும்பா அணி பெற்ற 6-வது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் யு மும்பா அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.
மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை 35-32 என்ற புள்ளிக்கணக்கில் யுபி யோதாஸ் அணி வீழ்த்தி 4வது வெற்றியைப் பதிவு செய்தது.
- முதல் போட்டியில் மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது
- பிரீத்தி தூபே, லால்ரெம் சியாமி, மனிஷா சவுகான் ஆகியோர் தலா 2 கோல் அடித்தனர்.
மகளிர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகின்றன. முதல் போட்டியில் மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது. தென் கொரியாவுடன் நடந்த இரண்டாவது போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.
இந்நிலையில் இன்று பீகார் மாநிலம் ராஜ்கிர் மைதானத்தில் வைத்து மாலை 4.45 மணிக்குத் தொடங்கிய போட்டியில் இந்திய அணி தாய்லாந்து அணியுடன் பலப்பரீட்சை செய்தது. இந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்டுத்திய இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தைத் தோற்கடித்துள்ளது.
குறிப்பாக இளம் இந்திய வீராங்கனை தீபிகா அதிகபட்சமாக ஐந்து கோல்களை விளாசினார். ஆட்டத்தில் 3வது, ,19வது, 43வது, 45வது, 45வது நிமிடங்களில் தீபிகா கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார்.
மேலும் பிரீத்தி தூபே, லால்ரெம் சியாமி, மனிஷா சவுகான் ஆகியோர் தலா 2 கோல்களும் பியூட்டி டங் டங், நவ்நீத் கவுர் தலா 1 கோலும் அடித்தனர். அடுத்ததாக வரும் சனிக்கிழமை நவம்பர் 16 ஆம் தேதி சீனாவுடன் இந்தியா மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரிங்கு சிங் இந்திய டி20 அணியில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடினார்.
- கொல்கத்தா அணிக்காக 13 கோடி ரூபாய் கொடுத்து ரிங்கு சிங் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ரிங்கு சிங் குஜராத் வீரர் யஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டி தான் ரிங்கு சிங்கின் வாழ்க்கையையே மாற்றியது.
இதன் பின் இந்திய டி20 அணியில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடினார். தற்போது ஐபிஎல் 2025 தொடரில் கொல்கத்தா அணிக்காக 13 கோடி ரூபாய் கொடுத்து ரிங்கு சிங் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் ரூ.3.5 கோடி மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீச்சல் குளம், 6 படுக்கையறை கொண்ட இந்த பிரம்மாண்ட வீட்டில் தொடர்ந்து 5 சிக்ஸர்கள் அடித்த கிரிக்கெட் பேட்டை வைத்துள்ளார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது திறமையால் முன்னுக்கு வந்து பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ள ரிங்கு சிங்கிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் ஷிகர் தவான் அடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். 38 வயதாகும் இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார்.
இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.
இதனையடுத்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் தொடரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், நேபாளம் நாட்டில் நடைபெறும் நேபாள பிரீமியர் லீக் தொடரில் கர்னாலி யாக்ஸ் அணியில் விளையாடுவதற்காக ஷிகர் தவான் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
- முதல் டி20 போட்டி கப்பா மைதானத்தில் நடைபெற்றது.
- மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
அதில், முதல் டி20 போட்டி கப்பா மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால இப்போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 7 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 43 ரன்களை குவித்தார்.
இதனையடுத்து, 94 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 7 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடர் முதல்முறையாக பாகிஸ்தானில் நடைபெற்றவுள்ளது.
- பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மாட்டோம் என்று இந்திய அணி அறிவித்துவிட்டது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தான் நடத்துகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டவட்டமாக தெரிவித்தது.
பி.சி.சி.ஐ. தனது நிலைப்பாட்டை ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தெரிவித்து இருந்தது. இந்திய அணி வர மறுப்பதால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துவதை பாகிஸ்தான் கைவிட முடிவு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட செல்ல மறுப்பது தொடர்பாக இந்தியாவிடம் விளக்கம் கேட்குமாறு ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டு இருந்தது. இந்தியா மோதும் ஆட்டங்களை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி மோதும் போட்டிகளை துபாயில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடன்படவில்லையென்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியானது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டாலோ அல்லது ஒத்திவைக்கப்பட்டாலோ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.548 கோடி இழப்பு ஏற்படும் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தான் நடைபெறும் என்பதை குறிக்கும் விதமாக ஐசிசி புதிய விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது.
கடைசியாக 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- நீண்ட நாட்களுக்கு பிறகு ரஞ்சி போட்டியில் முகமது சமி களமிறங்கினார்.
- பெங்கால் அணி சார்பாக முகமது சமி விளையாடினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அந்த உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமாதப்படுத்திய சமி, கடந்த நவம்பருக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் முகமது சமி இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த முகமது சமி, குணமடைந்து பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு ரஞ்சி போட்டியில் முகமது சமி களமிறங்கினார். மத்திய பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதிய போட்டியில் பெங்கால் அணி சார்பாக முகமது சமி விளையாடினார்.
இப்போட்டியில் 19 ஓவர்கள் பந்துவீசிய சமி 4 மெய்டன் ஓவர்களை வீசி 54 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ரஞ்சி கோப்பையில் முகமது சமி சிறப்பாக விளையாடினால் ஐபிஎல் ஏலத்தில் அவரை ஏலம் எடுக்க ஒவ்வொரு அணிகளும் போட்டி போடும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
- இவர்கள் மட்டும் இப்போது வரவில்லையென்றால், முன்பை போலவே சஞ்சுவை நீக்கியிருப்பார்கள்.
செஞ்சுரியன்:
இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறாது. முதல் போட்டியில் இந்திய அணியும் 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயேன 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் புதிய தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் டோனி, ரோகித், விராட் கோலி ஆகியோர் என் மகனின் 10 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக சஞ்சு சாம்சனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
என் மகனின் 10 ஆண்டுகால வாழ்க்கையை 3 கேப்டன்களான டோனி, கோலி, ரோகித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் சீரழித்தனர். இந்த நெருக்கடியிலும் சஞ்சு வலுவாக வெளிவந்துள்ளது மகிழ்ச்சி. கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இவர்கள் மட்டும் இப்போது வரவில்லையென்றால், முன்பை போலவே சஞ்சுவை நீக்கியிருப்பார்கள்.
இவ்வாறு சஞ்சு சாம்சனின் தந்தை கூறினார்.
- சாம்பியன்ஸ் டிராபி நடைபெறாமல் போனால் பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய நிதி கணிசமாக குறைக்கப்படும்.
- இதனால் பாகிஸ்தான் தனது முடிவை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
துபாய்:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தான் நடத்துகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டவட்டமாக தெரிவித்தது.
பி.சி.சி.ஐ. தனது நிலைப்பாட்டை ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தெரிவித்து இருந்தது. இந்திய அணி வர மறுப்பதால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துவதை பாகிஸ்தான் கைவிட முடிவு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட செல்ல மறுப்பது தொடர்பாக இந்தியாவிடம் விளக்கம் கேட்குமாறு ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டு இருந்தது. இந்தியா மோதும் ஆட்டங்களை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த முடியாமல் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டாலோ அல்லது ஒத்திவைக்கப்பட்டாலோ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.548 கோடி இழப்பு ஏற்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் தனது நிலையில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால் ஐ.சி.சி.யால் பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அந்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நிதி கணிசமாக குறைக்கப்படும். இதனால் பாகிஸ்தான் தனது முடிவை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா மோதும் ஆட்டங்களை துபாயில் நடத்துவதே அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் சரியான முடிவாக இருக்கும். ஆனால் இது குறித்து ஐ.சி.சி. எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
- திலக் வர்மா என்னிடம் வந்து நான் 3-வரிசையில் பேட்டிங் செய்யவா? என்று கேட்டார்.
- அவருடைய குடும்பத்தினருக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
செஞ்சுரியன்:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. செஞ்சுரியனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் குவித்தது.
திலக் வர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 56 பந்தில் 107 ரன்னும் (8 பவுண்டரி, 7 சிக்சர்), அபிஷேக் சர்மா 25 பந்தில் 50 ரன்னும் ( 3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். கேசவ் மகாராஜ், ஷிமிலேன் தலா 2 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மார்கோ ஜான்சன் 17 பந்தில் 54 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) கிளாசன் 22 பந்தில் 41 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கவர்த்தி 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா , அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-
இந்த போட்டியின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. பயம் இல்லாமல் ஆடுங்கள் என்பதை தான் நாங்கள் அணியின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்துகிறோம். நாங்கள் எந்த மாதிரியான கிரிக்கெட்டை விளையாட நினைத்தோமோ அதை செயல்படுத்தினோம். பயிற்சியின் போது அதிரடியாக ஆடுவதற்கு முயற்சி செய்கிறோம்.
வீரர்கள் சில போட்டிகளில் எளிதில் ஆட்டம் இழந்தாலும் அதிரடியாக ஆட வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறார்கள். ஆக்ரோஷமும், உத்வேகமும் இருந்தால் மட்டுமே 20 ஓவரில் கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியும்.
முதல் 20 ஓவர் போட்டி முடிந்த பிறகு திலக் வர்மா என்னிடம் வந்து நான் 3-வரிசையில் பேட்டிங் செய்யவா? என்று கேட்டார். இதனால் இந்த ஆட்டத்தில் 3-வரிசையில் அனுப்பி வைத்தேன். அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். அவருடைய குடும்பத்தினருக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.
இந்த வெற்றி மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்ஸ்பர்கில் நாளை நடக்கிறது.






