என் மலர்
விளையாட்டு
- கோலி அமைதியுடனும், கவனத்துடனும் விளையாடுவது மிகவும் முக்கியம்.
- ஆஸ்திரேலிய தொடரில் கோலி தனது பார்மை மீண்டும் பெறுவார் என்று நம்புகிறேன்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா சொந்த மண்ணில் இழந்தது. இதனால் இந்திய அணி நெருக்கடியில் உள்ளது. இத்தொடரில் விராட் கோலியின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை.
இந்த நிலையில் கோலிக்கு முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கோலி தனது கோட்டையான ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். கிங் எனும் பட்டத்தை நீங்கள் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடி எதிரணியிடம் பெற்றுள்ளீர்கள். எனவே கோலி பேட்டிங் செய்ய செல்லும் போது அது எதிரணியின் மனதில் இருக்கும்.
இந்த தொடரின் முதல் 3 இன்னிங்சில் முதல் ஒரு மணி நேரம் கோலி அமைதியுடனும், கவனத்துடனும் விளையாடுவது மிகவும் முக்கியம். அந்த நேரங்களில் நீங்கள் வேகமாக இல்லாமல் பொறுமையுடன் நிதானமாக உங்களுடைய சொந்த வேகத்தில் விளையாடினால் அனைத்தும் சரியாகி விடும். ஆஸ்திரேலிய தொடரில் கோலி தனது பார்மை மீண்டும் பெறுவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறும் போது, ரோகித் சர்மாவின் இயல்பான தாக்குதல் பாணி, சக்திவாய்ந்ததாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக மிட்செல் ஸ்டார்க்கிற்கு எதிராக அவருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
போட்டியின் முதல் சில ஓவர்களில் ரோகித் சர்மாவின் கால் அசைவதில்லை. அதனால் அவர் சிக்கலில் சிக்குகிறார். அவர் ஷாட் தேர்வை சரியாக எடுக்க வேண்டும். இது ரோகித் சர்மாவுக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பேட்ஸ்மேன்களுக்கும் பொருந்தும்.
ரோகித் சர்மா தனது இன்னிங்சின் தொடக்கத்தில் மிகவும் நிதானமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் அவரால் இந்தியாவுக்குத் தேவையான ரன்களை எடுக்க முடியும் என்றார்.
- பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கியதால் டைசன் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கவில்லை.
- சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு டைசன் திரும்பி உள்ளார்.
இர்விங்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி இன்று நடக்கிறது. இதில், அமெரிக்காவின் மைக் டைசன், ஜேக் பால் மோதுகின்றனர்.
முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் (58 வயது), இதுவரை விளையாடிய 58 போட்டியில், 50-ல் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை 'நாக்-அவுட்' முறையில் வீழ்த்தினார். ஆறு போட்டியில் மட்டும் தோல்வியடைந்தார். எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கியதால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பி உள்ளார்.
இவரை அமெரிக்காவை சேர்ந்த 'யூடியூப்' பிரபலம் ஜேக் பால் (27) எதிர் கொள்கிறார். இவர் கடந்த 2013 முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார். இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10ல் வெற்றி பெற்றார். இதில் 7 முறை 'நாக்-அவுட்' முறையில் வெற்றி கண்டார்.
இருவருக்கு இந்திய நேரப்படி இன்று மாலை போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில் போட்டோசூட்டுக்காக இருவரும் ஒரே மேடையில் தோன்றினர். அப்போது மைக் டைசன் எதிரணி வீரரான ஜேக் பால் கன்னத்தில் பலார் என அறைந்தார். ஆனால் அவர் அறைந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தப்படி பால் இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
- இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது, ஆனால் அரசியல் பதற்றம் காரணமாக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துவிட்டது. பாகிஸ்தானுக்கு இந்தியா வரவில்லை என்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நாங்கள் நடத்தபோவதில்லை என பாகிஸ்தான் கூறி வருகிறது.
இதற்கிடையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் வெளியில் வீடியோ கேம் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் சென்றனர். இவர்களை பார்த்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், அவர்களிடம், தயவுசெய்து ஒரு விஷயம் சொல்லுங்கள், நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு சூர்யகுமார் யாதவ் அது நம் கையில் இல்லை என கூறினார். இதனை வீடியோ எடுத்த பாகிஸ்தான் ரசிகரை ரிங்கு சிங், வீடியோ எடுப்பதை நிறுத்துங்கள் என கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இது முழு குழுவையும் பாதித்தது என்று நினைக்கிறேன்.
- பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருந்தது.
2024 ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்தில் கேஎல் ராகுலுடன் கடுமையாக நடந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பொதுமக்களின் பார்வையில் சிக்கிய அந்த பேச்சுவார்த்தை குறித்து கேஎல் ராகுல் இறுதியாக தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் ஐந்து ஆட்டங்களில் மூன்று அல்லது கடைசி நான்கு ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். இது நடந்தபோது, எங்கள் அனைவருக்கும் இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது
விளையாட்டிற்குப் பிறகு மைதானத்தில் என்ன நடந்தாலும் அது ஒரு பகுதியாக இருப்பதற்கான மிகச் சிறந்த விஷயமாகவோ அல்லது கிரிக்கெட் மைதானத்தில் எவரும் பார்க்க விரும்பும் விஷயமாகவோ இல்லை. இது முழு குழுவையும் பாதித்தது என்று நினைக்கிறேன். பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருந்தது.
நாங்கள் ஒரு குழுவாக அரட்டை அடித்து, மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சித்தோம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, எங்களின் சிறந்த கால்களை முன்னோக்கி வைக்க முயற்சித்தோம். நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எங்களின் சிறந்தவை எப்போதும் போதுமானதாக இல்லை. நாங்கள் எதிர்பார்த்தது போல் எங்களால் பிளேஆஃப்களுக்குச் செல்லவோ அல்லது சீசனை வெல்லவோ முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது.
- வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது.
- 5 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
க்ரோஸ் ஐலெட்டில்:
வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் போட்டி க்ரோஸ் ஐலெட்டில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பாவெல் 54 ரன்களும், ஷெபார்ட் 30 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் சாகிப் மக்மூத், ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து 37 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது. அதன்பின் வில் ஜாக்ஸ்(32 ரன்)-சாம் கர்ரன்(41 ரன்) ஜோடி சிறப்பாக விளையாடியது. லிவிங்ஸ்டன் 39 ரன்கள் எடுத்து வெற்றிக்கு பங்களித்தார்.
இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை பெற்றது. அந்த அணி முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
5 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 4-வது போட்டி 17-ந்தேதி நடக்கிறது.
- நியூசிலாந்து அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் அவர் ஓய்வு பெற உள்ளார்.
நியூசிலாந்து டெஸ்ட் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தும் சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் இடம்பிடித்துள்ள அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தனது ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் சிறு வயதில் இருந்தே நியூசிலாந்துக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் தான் வளர்ந்தேன்.அந்தவகையில் 18 ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவம் மற்றும் பாக்கியம். ஆனால் தற்சமயம் இந்த விளையாட்டில் இருந்து விலகுவதற்கான நேரம் சரியானது.
டெஸ்ட் கிரிக்கெட் என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் தற்சமயம் அதிலிருந்து நான் விலகும் நேரமும் வந்துவிட்டது. பல ஆண்டுகளாக எனக்கும் எனது வாழ்க்கைக்கும் உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினர், நண்பர்கள், பயிற்சியாளர்கள், எங்கள் ரசிகர்கள் மற்றும் விளையாட்டில் ஈடுபட்ட அனைவருக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இது எனக்கு ஒரு அற்புதமான சவாரியாக இருந்தது. அதனால் நான் எதனையும் மாற்ற விரும்பவில்லை.
என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக 2008-ம் ஆண்டு அறிமுகமான அவர் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 385 விக்கெட்டுகளையும், 2185 ரன்களையும் சேர்த்துள்ளார். மேற்கொண்டு 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளையும், 126 டி20 போட்டிகளில் விளையாடி 164 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 6 சுற்றுகள் முடிவில் கோரியச்கினா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார்.
- வைஷாலி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கொல்கத்தா:
6-வது டாட்டா ஸ்டீல் இந்தியா ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கொல்கத்தாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி உள்பட 10 வீரர்களும், பெண்கள் பிரிவில் 10 வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
இதில் முதலில் அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய ரேபிட் வடிவிலான போட்டி நடந்து வருகிறது. 9 சுற்று கொண்ட இந்த போட்டியில் 4-வது, 5-வது, 6-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. முதல்நிலை வீரர் கார்ல்சென் நேற்றைய தினம் எரிகைசி, நாராயணன், வெஸ்லி சோ (பிலிப்பைன்ஸ்) ஆகிய 3 பேரையும் வரிசையாக தோற்கடித்து அமர்க்களப்படுத்தினார்.
தமிழகத்தின் பிரக்ஞானந்தா, 103-வது நகர்த்தலில் நிஹல் சரினை போராடி வீழ்த்தினார். வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), விதித் குஜராத்தி ஆகியோருக்கு எதிரான ஆட்டங்களில் 'டிரா' கண்டார்.
6 சுற்று முடிவில் கார்ல்சென் 5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அப்துசட்டோரோவ் (உஸ்பெகிஸ்தான்) 4½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வெஸ்லி சோ 3½ புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோரியச்கினா தன்னை எதிர்த்து ஆடிய வந்திகா அகர்வால் (இந்தியா), தமிழக வீராங்கனை வைஷாலி, கேத்ரினா லாக்னோ (ரஷியா) ஆகியோருக்கு 'செக்' வைத்து வெற்றிக்கனியை பறித்தார். கோரியச்கினாவிடம் தோல்வியை தழுவிய வைஷாலிக்கு மற்ற இரு ஆட்டங்களிலும் ஏமாற்றமே மிஞ்சியது.
6 சுற்றுகள் முடிவில் கோரியச்கினா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். நானா ஜாக்னிட்ஸ் (ஜார்ஜியா) 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். வைஷாலி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இரு பிரிவிலும் இன்று கடைசி 3 சுற்றுகள் நடைபெறும்.
- 2-வது டெஸ்டுக்கு முன்பாக நிறைய நாட்கள் உள்ளது.
- அத்துடன் இப்போது அணியில் ஆலோசகரை சேர்ப்பது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக (0-3) இழந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. அங்கு 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
இந்த தொடருக்கு இந்திய அணிக்கு ஆலோசகராக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ.வி.ராமன் வலியுறுத்தியுள்ளார். அவர் தனது சமூக வலைதள பதிவில், 'ஆஸ்திரேலியாவில் நடக்கும் பார்டர்- கவாஸ்கர் கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணிக்கு பேட்டிங் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் இருந்தால் அது அணிக்கு பெரிய அளவில் பலன் தரலாம். 2-வது டெஸ்டுக்கு முன்பாக நிறைய நாட்கள் உள்ளது. அத்துடன் இப்போது அணியில் ஆலோசகரை சேர்ப்பது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது' என்று கூறியுள்ளார்.
- தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
- மழையால் ஆட்டம் பாதிக்கப்பட சிறிய அளவில் வாய்ப்புள்ளது.
ஜோகன்னஸ்பர்க்:
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இந்திய அணியில் முதல் ஆட்டத்தில் சதம் அடித்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அடுத்த இரு ஆட்டங்களில் 'டக்-அவுட்' ஆனார். முந்தைய மோதலில் திலக் வர்மாவின் சதமும், அபிஷேக் ஷர்மாவின் அரைசதமும் வெற்றிக்கு உதவின. கேப்டன் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் தான் பெரிய அளவில் இல்லை. அவரும் ரன்குவித்தால் அணி மேலும் வலுவடையும். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் கைகொடுக்கிறார்கள். இதே உத்வேகத்துடன் ஆடி தொடரை கைப்பற்ற நமது வீரர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த ஆண்டில் இந்திய அணி ஆடும் கடைசி சர்வதேச 20 ஓவர் போட்டி இது என்பதால் வெற்றியோடு முடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தென்ஆப்பிரிக்க அணி உள்நாட்டில் தொடரை இழக்காமல் இருக்க கடுமையாக போராடும். கடந்த ஆட்டத்தில் 220 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா நெருங்கி வந்து 11 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியில் தொடக்க ஜோடியின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. மிடில் வரிசையில் மில்லரும் ஜொலிக்கவில்லை. எனவே ஒருங்கிணைந்து ஆடினால் சரிவில் இருந்து எழுச்சி பெறலாம்.
போட்டி நடக்கும் ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் இங்கு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி சூர்யகுமாரின் சதத்துடன் 201 ரன்கள் குவித்து, தென்ஆப்பிரிக்காவை 95 ரன்னில் மடக்கியது நினைவிருக்கலாம்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ரமன்தீப்சிங், அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய்.
தென்ஆப்பிரிக்கா: ரையான் ரிக்கெல்டன், ரீஜா ஹென்ரிக்ஸ், மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜீ அல்லது இன்கபா பீட்டர், அன்டில் சிம்லேன், கேஷவ் மகராஜ், லுதோ சிபம்லா.
இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட சிறிய அளவில் வாய்ப்புள்ளது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 145 ரன்கள் எடுத்தது.
செயிண்ட் லூசியா:
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
அடுத்து நடந்த டி20 தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத்தில் இங்கிலாந்து துல்லியமாக பந்து வீசி அசத்தியது. இதனால் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ஒரு கட்டத்தில் 37 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
6வது விக்கெட்டுக்கு கேப்டன் ரோவ்மென் பாவெலுடன், ரொமாரியோ ஷெப்பர்ட் இணைந்தார். இந்த ஜோடி 73 ரன்கள் சேர்த்த நிலையில் ஷெப்பர்ட் 30 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பாவெல் அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமுது 3 விக்கெட்டும், ஜேமி ஓவர்டோன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 146 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.
- குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தார்.
குமாமோட்டோ:
குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல் லீயுடன் மோதினார்.
இதில் பி.வி.சிந்து 21-17, 16-21, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி 15 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் இந்தத் தொடரில் இருந்து இந்திய அணி முற்றிலும் வெளியேறியது.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 1 வீரரான சின்னர் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது லீக் போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் சின்னர், நம்பர் 4 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் மோதினார்.
இதில் சின்னர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் சின்னர் அரையிறுதிக்குள் நுழைந்தார்.






