என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாக்னஸ் கார்ல்சென்"

    • 14-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மாக்னஸ் கார்ல்சென், ஹேக் மார்ட்டிரோசியனுடன் மோதினார்.
    • பதற்றத்தில் இருந்த கார்ல்சென் கட்டத்தில் இருந்த மற்ற காய்களை தள்ளிவிட்டு விட்டார்.

    உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. முதலில் நடந்த ரேபிட் வடிவிலான போட்டியில் ஓபன் பிரிவில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனும், பெண்கள் பிரிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

    அடுத்து அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய உலக பிளிட்ஸ் போட்டி நடந்தது. இதில் ஓபன் பிரிவில் 19 சுற்றுகளும், பெண்கள் பிரிவில் 15 சுற்றுகளும் நடந்தன.

    இந்த பிளிட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை கார்ல்சென் கைப்பற்றினார். உலக பிளிட்ஸ் போட்டியில் கார்ல்சென் 9-வது முறையாக பட்டத்தை வென்றார்.

    முன்னதாக இந்த போட்டியின் 14-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென், அர்மேனியா கிராண்ட்மாஸ்டர் ஹேக் மார்ட்டிரோசியனுடன் மோதினார். 69-வது நகர்த்தலின் போது, 2 வினாடி மட்டுமே எஞ்சி இருந்ததால் கார்ல்சென் வேகமாக காயை நகர்த்தினார்.

    அப்போது பதற்றத்தில் கட்டத்தில் இருந்த மற்ற காய்களை தள்ளிவிட்டு விட்டார். பிளிட்ஸ் விதிப்படி, நேரம் கணக்கீட்டை நிறுத்துவதற்குள் காய்களை மீண்டும் சரியான இடத்தில் வைக்க வேண்டும். டென்ஷனில் இருந்த கார்ல்செனால் அதை செய்ய முடியவில்லை.

    பிறகு நடுவர் தலையிட்டு இது விதிமீறல் என்று கார்ல்செனுக்கு எடுத்துரைத்தார். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இந்த சுற்றில் மார்ட்டிரோசியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கார்ல்சென் அடுத்த 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றை எட்டி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 6 சுற்றுகள் முடிவில் கோரியச்கினா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார்.
    • வைஷாலி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    கொல்கத்தா:

    6-வது டாட்டா ஸ்டீல் இந்தியா ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கொல்கத்தாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி உள்பட 10 வீரர்களும், பெண்கள் பிரிவில் 10 வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.

    இதில் முதலில் அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய ரேபிட் வடிவிலான போட்டி நடந்து வருகிறது. 9 சுற்று கொண்ட இந்த போட்டியில் 4-வது, 5-வது, 6-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. முதல்நிலை வீரர் கார்ல்சென் நேற்றைய தினம் எரிகைசி, நாராயணன், வெஸ்லி சோ (பிலிப்பைன்ஸ்) ஆகிய 3 பேரையும் வரிசையாக தோற்கடித்து அமர்க்களப்படுத்தினார்.

    தமிழகத்தின் பிரக்ஞானந்தா, 103-வது நகர்த்தலில் நிஹல் சரினை போராடி வீழ்த்தினார். வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), விதித் குஜராத்தி ஆகியோருக்கு எதிரான ஆட்டங்களில் 'டிரா' கண்டார்.

    6 சுற்று முடிவில் கார்ல்சென் 5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அப்துசட்டோரோவ் (உஸ்பெகிஸ்தான்) 4½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வெஸ்லி சோ 3½ புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோரியச்கினா தன்னை எதிர்த்து ஆடிய வந்திகா அகர்வால் (இந்தியா), தமிழக வீராங்கனை வைஷாலி, கேத்ரினா லாக்னோ (ரஷியா) ஆகியோருக்கு 'செக்' வைத்து வெற்றிக்கனியை பறித்தார். கோரியச்கினாவிடம் தோல்வியை தழுவிய வைஷாலிக்கு மற்ற இரு ஆட்டங்களிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

    6 சுற்றுகள் முடிவில் கோரியச்கினா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். நானா ஜாக்னிட்ஸ் (ஜார்ஜியா) 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். வைஷாலி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    இரு பிரிவிலும் இன்று கடைசி 3 சுற்றுகள் நடைபெறும்.

    • இறுதிச்சுற்றில் நார்வேயின் கார்ல்சென் , ரஷியாவின் இயன் நெபோம்னியச்சி ஆகியோர் மோதினர்.
    • இந்த ஆட்டம் சமனில் முடிந்தது.

    நியூயார்க்:

    நியூயார்க்கில் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இறுதிச்சுற்றில் நார்வேயின் கார்ல்சென் , ரஷியாவின் இயன் நெபோம்னியச்சி ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர் .

    இருவரும் 3.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் சமனில் முடித்து சாம்பியன் பட்டத்தை பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டனர். வரலாற்றில் முதல்முறையாக இருவர் சிங்கிள் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×