என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3வது டி20 போட்டி: இங்கிலாந்து வெற்றிபெற 146 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்
    X

    3வது டி20 போட்டி: இங்கிலாந்து வெற்றிபெற 146 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 145 ரன்கள் எடுத்தது.

    செயிண்ட் லூசியா:

    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

    அடுத்து நடந்த டி20 தொடரில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத்தில் இங்கிலாந்து துல்லியமாக பந்து வீசி அசத்தியது. இதனால் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ஒரு கட்டத்தில் 37 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    6வது விக்கெட்டுக்கு கேப்டன் ரோவ்மென் பாவெலுடன், ரொமாரியோ ஷெப்பர்ட் இணைந்தார். இந்த ஜோடி 73 ரன்கள் சேர்த்த நிலையில் ஷெப்பர்ட் 30 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பாவெல் அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்களை எடுத்துள்ளது.

    இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமுது 3 விக்கெட்டும், ஜேமி ஓவர்டோன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 146 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

    Next Story
    ×