என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு டைசன் திரும்பி உள்ளார்.
    • குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசன் உடன் ஜேக் பால் மோதினார்.

    முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் (58 வயது), இதுவரை விளையாடிய 58 குத்துச்சண்டை போட்டியில், 50-ல் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை 'நாக்-அவுட்' முறையில் வீழ்த்தினார். ஆறு போட்டியில் மட்டும் தோல்வியடைந்தார். எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கியதால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பி உள்ளார்.

    இவரை அமெரிக்காவை சேர்ந்த 'யூடியூப்' பிரபலம் ஜேக் பால் (27) எதிர் கொள்கிறார். இவர் கடந்த 2013 முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார். இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10ல் வெற்றி பெற்றார். இதில் 7 முறை 'நாக்-அவுட்' முறையில் வெற்றி கண்டார்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசன் உடன் ஜேக் பால் மோதினார். இப்போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசனை ஜேக் பால் தோற்கடித்தார்.

    8 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் ஜேக்பால் 79-73 என்ற புள்ளிக் கணக்கில் மைக் டைசனை வீழ்த்தினார். தொடக்கத்தில் டைசன், வேகமாக 2 குத்துக்களை விட்டார். நேரம் செல்ல செல்ல ஜேக்பால் விட்ட சரமாரியான குத்துச்சண்டில் டைசன் நிலைகுலைந்தார். 3 நடுவர்களும் ஜேக் பாலுக்கு சாதகமாக புள்ளிகளை கொடுத்தனர். ஒருவர் 80-72 எனவும், மற்ற இருவர் 79-73 என்றும் புள்ளிகளை வழங்கி இருந்தனர்.

    டைசன் கடைசியாக 2020-ம் ஆண்டு ராய் ஜோன்சுடன் கடைசி போட்டியில் விளை யாடினார். 2005-ம் ஆண் டுக்கு பிறகு அவர் பங்கேற்ற முதல் அதிகாரப்பூர்வ போட்டி இதுவாகும்.ஜேக்பால் 4 ஆண்டுகளுக்கு முன்புதான் குத்து சண்டையில் பங்கேற்க தொடங்கினார்.

    58 வயதான டைசன் இளம் வீரருடன் போட்டி போடுவது தவறு என பலரும் போட்டிக்கு முன்பே கூறி வந்த நிலையில் போட்டியை பார்த்து ரசிகர்கள் வெறுத்துப் போனார்கள். வயது மூப்பின் காரணமாக டைசன் கால்களை வேகமாக நகர்த்த முடியாமல் திணறினார்.

    மைக் டைசனுக்கு ரூ.170 கோடி கிடைக்கும் என்பதால் தான் அவர் இந்தப் போட்டிக்கு ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கு முன்னதாக போட்டோசூட்டுக்காக இருவரும் ஒரே மேடையில் தோன்றினர். அப்போது மைக் டைசன் எதிரணி வீரரான ஜேக் பால் கன்னத்தில் பலார் என அறைந்தார். ஆனால் டைசன் அறைந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தப்படி பால் இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும்.
    • 3-வது இடத்துக்கான போட்டியில் மணிப்பூர்-உத்தரபிரதேசம் அணிகள் மோதுகின்றன.

    தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 14-வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    30 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அரியானா-ஒடிசா அணிகள் மோதுகின்றன.

    அரியானா அணி லீக் ஆட்டங்களில் இமாச்சல பிரதேசம் (12-1), தெலுங்கானா (5-1), மிசோரம் (8-0) ஆகியவற்றையும், கால் இறுதியில் 5-1 என்ற கணக்கில் மராட்டியத்தையும், அரைஇறுதியில் உத்தர பிரதேசத்தை 3-2 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.

    ஒடிசா அணி 'லீக்' ஆட்டங்களில் ராஜஸ்தான் (11-1), புதுச்சேரி (6-2), அருணாச்சல பிரதேசம் (9-0) ஆகியவற்றையும், கால் இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டில் 3-1 என்ற கணக்கில் கர்நாடகாவையும், அரை இறுதியில் 4-2 என்ற கணக்கில் மணிப்பூரையும் தோற்கடித்தது.

    இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதில் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக பிற்பகல் நடைபெறும் 3-வது இடத்துக்கான போட்டியில் மணிப்பூர்-உத்தரபிரதேசம் அணிகள் மோதுகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரோகித் - ரித்திகா தம்பதி 2015 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
    • இந்த தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தை பிறந்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2015 ஆண்டு ரித்திகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில், ரோகித் - ரித்திகா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ரோகித்திற்கு ஆண் குழந்தை பிறந்ததை ஒட்டி இணையத்தில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

    ரித்திகா கர்ப்பமாக இருந்ததால் பார்டர்-கவாஸ்கர் கோப்பை பயிற்சிக்காக ரோகித் ஆஸ்திரேலியா செல்லாமல் தனது மனைவியுடன் இருந்தார். இந்நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததை ஒட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் பங்கேற்கமாட்டார் என்று சொல்லப்படுகிறது.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 6 வீரரான காஸ்பர் ரூட் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது லீக் போட்டியில் 6-வது நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட், 8வது நிலை வீரரான ரஷியாவின் ஆண்ட்ரூ ரூப்லெவ் உடன் மோதினார்.

    இதில் காஸ்பர் ரூட் 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்தியா வென்றது.
    • இதன்மூலம் இந்திய அணி 3-1 என டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

    ஜோகனஸ்பெர்க்:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 4வது டி20 போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெற்றது.

    முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 283 ரன்களைக் குவித்தது. சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 3 சதமடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.

    • முதலில் ஆடிய இந்தியா 283 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஜோகனஸ்பெர்க்:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 4வது டி20 போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 283 ரன்களைக் குவித்தது. சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். அபிஷேக் சர்மா 36 ரன்னில் அவுட்டானார்.

    திலக் வர்மா சஞ்சு சாம்சனுடன் இணைந்து கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    இதையடுத்து, 284 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் 10 ரன்களுக்குள் அந்த அணி 4 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

    ஸ்டபஸ், மில்லர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தது. மில்லர் 36 ரன்னும், ஸ்டப்ஸ் 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் பாட்னா அணி 6-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே பாட்னா வீரர்கள் சிறப்பாக ஆடினர்.

    இறுதியில், பாட்னா அணி 52-31 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. இது பாட்னா அணி பெற்ற 6-வது வெற்றி ஆகும்.

    மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் 32-24 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வீழ்த்தி 5வது வெற்றியைப் பதிவு செய்தது.

    • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • இதில் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பெல்கிரேட்:

    ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி நாளை மறுதினம் வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொனடனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது லீக் போட்டியில் நம்பர் 2 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நம்பர் 3 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதுகிறார்.

    • டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 283 ரன்களைக் குவித்தது.
    • திலக் வர்மா, சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி சதமடித்தனர்.

    ஜோகனஸ்பெர்க்:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 4வது டி20 போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா 36 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய திலக் வர்மா சஞ்சு சாம்சனுடன் இணைந்து தூள் கிளப்பினார். பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    சஞ்சு சாம்சன் 51 பந்தில் சதமடித்தார். அவரை தொடர்ந்து திலக் வர்மா 41 பந்தில் சதமடித்தார்.

    இறுதியில், இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 283 ரன்களைக் குவித்தது. சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 284 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    • ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது .
    • முதற்கட்டமாக 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.

    இந்திய கிரிக்கெட்டுக்கே உரிய தனித்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் வருடந்தோறும் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. 2024 ஐபிஎல் போட்டியில் கவுதம் கம்பீர் பயிற்சி அளித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது. இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் இறுதிப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

    ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன

    ஏலத்திற்கு முதற்கட்டமாக 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் ஆவர்.

    இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட 1574 வீரர்களின் எண்ணிக்கை தற்போது 574 ஆக குறைக்கப்பட்டு இறுதி கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 10 அணிகள் மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 70 வெளிநாட்டு வீரர்களுக்கானது.

    இறுதி கட்ட பட்டியல் விவரம், 

    கேப்டு இந்திய வீரர்கள் - 48

    கேப்டு வெளிநாட்டு வீரர்கள் - 193

    இணை நாட்டு வீரர்கள் - 3

    அன்கேப்டு இந்திய வீரர்கள் -318

    • இரு அணிகள் இடையே நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
    • இந்திய அணி இரண்டு போட்டிகளில் வென்று முன்னிலை பெற்றுள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மூன்று போட்டிகள் ஏற்கனவே நடைபெற்று விட்டது. இதில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் நான்காவது டி20 போட்டி தொடங்கியுள்ளது. இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

    இந்திய அணியின் பிளேயிங் XI:

    சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரமன்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் மற்றும் வருண் சக்கரவர்த்தி

    • கேரளா மற்றும் அரியானா அணிகள் இடையேயான போட்டியில் இந்த சாதனை படைக்கப்பட்டது.
    • மோகன் சட்டர்ஜி மற்றும் பிரதீப் சுந்தரம் ஆகியோர் முதலில் இந்த சாதனையை படைத்திருந்தனர்.

    ரஞ்சிக் கோப்பை தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கேரளா மற்றும் அரியானா அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் வரலாற்று சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

    அரியானா அணிக்காக விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் இந்த சாதனையைப் படைத்துள்ளார். கேரளாவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் ஒரே ஆளாக வீழ்த்தி அன்ஷூல் கம்போஜ் சாதனை படைத்துள்ளார்.

    எனவே ரஞ்சி டிராபி தொடர் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை அன்ஷுல் கம்போஜ் தனதாக்கியுள்ளார். இந்த போட்டியில் மொத்தம் 30.1 ஓவர்கள் பந்துவீசி 49 ரன்கள் விட்டுக் கொடுத்து 10 விக்கெட்களை அன்ஷுல் வீழ்த்தினார். இந்த போட்டியில் மொத்தமாக 9 மெய்டன் 9 மெய்டன் ஓவர்களையும் அவர் வீசியுள்ளார்.

    இதற்கு முன் மோகன் சட்டர்ஜி மற்றும் பிரதீப் சுந்தரம் ஆகிய இருவரும் ரஞ்சி டிராபி தொடரில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.  

    ×