என் மலர்
விளையாட்டு
- பயிற்சியின் போது ஸ்லிப்பில் நின்று பீல்டிங் செய்த சுப்மல் கில்லுக்கு இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டு வெளியேறினார்.
- அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
பெர்த்:
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய வீரர்கள் தங்களுக்குள் இரு அணியாக பிரிந்து பெர்த்தில் உள்ள வாகா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய பயிற்சியின் போது ஸ்லிப்பில் நின்று பீல்டிங் செய்த சுப்மல் கில்லுக்கு இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். அதன் பிறகு அவர் பயிற்சிக்கு திரும்பவில்லை. அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அவர் முதல் டெஸ்ட்டில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் நாள் பயிற்சியின் போது பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சை எதிர்கொள்கையில் லோகேஷ் ராகுலுக்கு வலது முழங்கையில் பந்து தாக்கியதில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 218 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 221 ரன்கள் எடுத்து வென்றது.
செயிண்ட் லூசியா:
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த டி20 தொடரில் இங்கிலாந்து 3-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 218 ரன்களை எடுத்தது. ஜேக்கப் பெதெல் 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பிலிப் சால்ட் அரை சதம் கடந்து 55 ரன்னில்அவுட்டானார். வில் ஜாக்ஸ் 25 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 219 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான எவின் லெவிஸ், ஷாய் ஹோப் அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்த நிலையில் லெவிஸ் 68 ரன்னில் அவுட்டானார். அடுத்த பந்தில் ஷாய் ஹோப் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் பாவெல் 38 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் 3-1 என பின்தங்கியுள்ளது.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 218 ரன்கள் எடுத்தது.
செயிண்ட் லூசியா:
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
அடுத்து நடந்த டி20 தொடரில் இங்கிலாந்து 3-0 என கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 55 ரன்னில் வெளியேறினார்.
முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில் வில் ஜாக்ஸ் 25 ரன்னில் அவுட்டானார். ஜோஸ் பட்லர் 38 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஜேக்கப் பெதெல் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 218 ரன்களை எடுத்துள்ளது. ஜேக்கப் பெதெல் 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 219 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 6 வீரரான காஸ்பர் ரூட் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், 6-வது நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.
இதில் சின்னர் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் சின்னர், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதுகிறார்.
- தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்தன.
- ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 229 ரன்கள் எடுத்தன.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'டி' பிரிவு லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகம், ரயில்வேஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழகம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 229 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தமிழகம் முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்தன.
209 ரன்கள் பின்தங்கிய நிலையில், ரயில்வேஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. அந்த அணி 184 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதன்மூலம் தமிழகம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது தமிழகத்தின் முகமது அலிக்கு அளிக்கப்பட்ட்டது.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 2 வீரரான ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி நாளையுடன் முடிவடைகிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நம்பர் 2 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.
இதில் பிரிட்ஸ் 6-3, 3-6, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரிட்ஸ், சின்னர் அல்லது ரூட் இவர்களில் ஒருவருடன் மோத உள்ளார்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியைப் பதிவு செய்தது.
நொய்டா:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர்.
இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 46-31 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. இது தமிழ் தலைவாஸ் அணி பெற்ற 4-வது வெற்றி ஆகும்.
- நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம்.
- சீனா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது.
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சீனாவை 3-0 என வீழ்த்திய இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் சீனாவை வீழ்த்தியதன் மூலம் இந்தத் தொடரில் இந்தியா தொடர்ந்து 4-வது வெற்றியை பெற்றுள்ளது.
32-வது நிமிடத்தில் சங்கீதா குமார் முதல் கோல் அடித்தார். 37-வது நிமிடத்தில் கேப்டன் சலிமா டேடே மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. கடைசி நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்ப பயன்படுத்தி தீபிகா கோல் அடித்தார்.
4 வெற்றிகள் மூலம் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. சீனா நான்கு போட்டிகளில முடிவில் 3 வெற்றிகளுடன் 2-வது இடம் பிடித்துள்ளது. ராபின் ரவுண்டு சுற்றில் இந்தியா தனது கடைசி லீக்கில் ஜப்பானை எதிர்கொள்கிறது.
ஆறு அணிகள் விளையாடும் இந்த தொடரில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
- முதல் இன்னிங்சில் 19 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
- 2-வது இன்னிங்சில் முகமது ஷமி 24.2 ஓவரில் 102 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
ரஞ்சி கோப்பைக்கான லீக் ஆட்டம் ஒன்றிலா் மத்திய பிரதேசம்- பெங்கால் அணிகள் மோதின. காயம் காரணமாக நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த முகமது ஷமி பெங்கால் அணிக்காக களம் இறங்கினார்.
முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி 228 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அதன்பின் மத்திய பிரதேசம் 167 ரன்னில் சுருண்டது. முகமது ஷமி சிறப்பாக பந்து வீசி 19 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் 2-வது இன்னிங்சில் பெங்கால் 276 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் மத்திய பிரதேசம் அணிக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்க வீரர்கள் சேனாதிபதி (50), ஹிமான்சு மந்த்ரி (44), ரஜத் படிதார் (32) நல்ல தொடக்கம் அமைத்தனர்.
5-வது வீரரான களம் இறங்கிய சுப்மம் சர்மா 61 ரன்களும், 7-வது வீரராக களம் இறங்கிய வெங்கடேஷ் அய்யர் 53 ரன்களும் அடிக்க மத்திய பிரதேசம் வெற்றியை நோக்கி சென்றது. இறுதியில் அணி 326 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பெங்கால் அணி 11 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. முகமது ஷமி 24.2 ஓவரில் 102 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
இரண்டு இன்னிங்சிலும் 7 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
- முதல் பாதி நேர ஆட்டத்தில் ஒடிசா 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
- 2-வது பாதி நேரத்தில மேலும் 4 கோல் அடிக்க, அரியானா ஒரு கோல் மட்டுமே அடித்தது.
தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் ஹாக்கி இந்தியாவின் 14-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் அரியானா- ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் கால்பகுதி ஆட்ட நேர முடிவில் ஒடிசா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது காலிறுதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி நேரம் ஆட்ட முடிவில் ஒடிசா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
2-வது பாதி நேர ஆட்டத்திலும் ஒடிசாவின் கையே ஓங்கியது. மேலும் 3-வது காலிறுதி நேரத்தில் ஒரு கோல் அடித்தது 2-0 என முன்னிலைப் பெற்றது. கடைசி காலிறுதி ஆட்டத்தில் ஒடிசா 3 கோல் அடிக்க, அரியானா ஒரு கோல் அடித்தது. இதனால் ஒடிசா 5-1 என அரியானாவை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் அடித்தது.
- பாகிஸ்தான் 19.4 ஓவரில் 134 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா அணியில் ஆரோன் ஹர்டில் 28 ரன்களும், மேத்ய ஷார்ட் 32 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஷ் ராஃப் 4 விக்கெட்டும், அப்பாஸ் அப்ரிடி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இர்பான் கான் 28 பந்தில் 37 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 19.4 ஓவரில் 134 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. 3-வது மற்றும் கடைசி போட்டி 18-ந்தேதி நடக்கிறது.
- பீல்டிங் செய்யும்போது இடது கை பெருவிரலில் காயம்.
- காயம் முழுமையாக குணமடைய 14 நாட்கள் ஆகும் எனத் தகவல்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பெர்த் மைதானத்தில் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இன்று இந்திய அணிக்குள் வீரர்கள் பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.
அப்போது பீடில்ங் செய்த சுப்மன் கில்லுக்கு இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் வெளியேறினார். பின்னர் ஸ்கேன் செய்து பார்த்தபோது விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
விரல் முறிவு சரியாகி வழக்கமான வலைப்பயிற்சி மேற்கொள்ள 14 நாட்கள் ஆகும். முதல் போட்டிக்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் சுப்மன் கில் களம் இறங்குவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ரோகித் சர்மா முதல் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 3-வது இடத்தில் களம் இறங்கும் சுப்மன் கில் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காயம் ஏற்பட்டு விளையாட முடியாத நிலையில் உள்ளார்.
ஏற்கனவே கே.எல். ராகுலுக்கு பயிற்சி ஆட்டத்தின்போது காயம் பந்து எதிர்கொண்டபோது மூட்டில் காயம் ஏறு்பட்டது. தற்போது சுப்மன் கில்லும் காயத்தால் அவதிப்படுவது இந்திய அணிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.






