என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.

    ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடர் அடுத்த மாதம் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.

    இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன.

    இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் யார் என்பது குறித்து அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    36-வது வயதான ரகானே கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளார்.
    • ஷார்ட்க்கு பதிலாக கூப்பர் கோனாலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    துபாய்:

    8 நாடுகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது.

    இன்று ஓய்வு நாளாகும். முதல் அரை இறுதி ஆட்டம் துபாயில் நாளை (4-ந் தேதி) நடக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 2-வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இறுதிப்போட்டி 4 நாட்கள் ஓய்வுக்கு பிறகு 9-ந் தேதி நடக்கிறது.

     

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி உள்ளார். இவருக்கு பதிலாக கூப்பர் கோனாலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • ரோகித் சர்மா தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறினார்.
    • இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்தை எதிர்கொண்டு விளையாடியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. நாளை நடைபெறும் அரையிறுதி சுற்று போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது கடுமையாக விமர்சனம் செய்தார். அதில், "ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரரது கருத்துக்கு பாஜக முதல் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது, ரோகித் சர்மா குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

    இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

    அதில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். விளையாட்டு வீரர்கள் குறித்த தனிப்பட்ட நபர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கத்தேவையில்லை. இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

    • அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள அல்புகெர்க்கியில் தடகள போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் சென்னையை சேர்ந்த கிருஷ்ணா ஜெய்சங்கர் கலந்து கொண்டு குண்டு எறிதலில் வெண்கலம் வென்றார்.

    சென்னை:

    அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள அல்புகெர்க்கியில் தடகள போட்டிகள் உள்ளரங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இதில் சென்னையை சேர்ந்த கிருஷ்ணா ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அமெரிக்காவில் படித்து வரும் அவர் நேவடா பல்கலைக் கழக அணிக்காக பங்கேற்றார்.

    குண்டு எறியும் வீராங்கனையான கிருஷ்ணா புதிய சாதனை படைத்தார். 22 வயதான அவர் 16.03 மீட்டர் தூரம் எறிந்தார். உள்ளரங்க போட்டிகளில் இது புதிய தேசிய சாதனையாகும். அவர் தனது கடைசி முயற்சியில் இந்த அளவை தொட்டார். 16.03 மீட்டர் எறிந்ததன் மூலம் கிருஷ்ணாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

    சாதனை படைத்த கிருஷ்ணா இந்திய கூடைப்பந்து நட்சத்திரங்களான ஜெய்சங்கர் மேனன்-பிரசன்னா தம்பதியின் மகள் ஆவார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரோகித் சர்மா உடல் பருமன் கொண்டுள்ளார்.
    • அவர் உடல் எடையை குறைக்க வேண்டும்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. நாளை நடைபெறும் அரையிறுதி சுற்று போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடுகிறது.

    இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாக்டர் ஷமா முகமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இவரது கருத்துக்கு சமூக வலைதளத்தில் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரோகித் சர்மா குறித்த காங்கிரஸ் விமர்சனத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறும் போது, "காங்கிரசுக்கு அவமானம். தற்போது அவர்கள் இந்திய கிரிக்கெட் கேப்டனை நோக்கி செல்கிறார்கள்."

    "இந்திய அரசியலில் தோல்வியடைந்த பிறகு ராகுல் காந்தி இப்போது கிரிக்கெட் விளையாடுவார் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? காங்கிரஸ் செய்தி தொடர்பாளரின் கருத்து கட்சியின் அவசரகால மன நிலையை பிரதிபலிக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியை எல்லா வழியிலும் ஆதரிக்கும் ஒவ்வொரு தேச பக்தரையும் அவமதிப்பதாகும். காங்கிரஸ் விமர்சனத்தை நான் கேள்வி கேட்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது, ரோகித் சர்மா குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

    • 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன.

    ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.

    இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன. கொல்கத்தா அணியின் கேப்டனாக சீனியர் வீரரான அஜிங்யா ரகானா அல்லது இளம் அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விடியோவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    மேலும், இந்த புதிய ஜெர்சியை விலை கொடுத்து வாங்குவதற்கான இணையதளத்தின் லிங்கின் அந்த அணி பகிர்ந்துள்ளது.

    • இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களை எடுத்தது.
    • வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களை எடுத்தது.

    எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி பந்துவீசிய விதத்தை முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், முகமது ஷமியின் பந்துவீச்சு பல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் பாடமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "பல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக இருக்கக்கூடிய மாஸ்டர் கிளாஸ் தர சீரமைப்பு.

    முதல் படம் ஷமி ஒரு கோணத்தில் இருந்து கிரீசை எவ்வாறு தாக்குகிறார் என்பதைக் காட்டுகிறது. இரண்டாவது படம் ஆங்குலர் ரன் அப் காரணமாக அவர் எவ்வாறு வசதியாக ஒரு சைட் ஆன் பொசிஷனுக்கு நகர்ந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது.

    மேலும் மூன்றாவது படம் அவரது மணிக்கட்டு எப்படி சரியான தலைகீழாக சுழல்கிறது என்பதைக் காட்டுகிறது. இதன் வெளிப்பாடு கடைசி படத்தில் அந்த இன்வெர்ஷன் எவ்வளவு கச்சிதமாக வந்துள்ளது என்பதை காட்டுகிறது. அவர் பந்து வீசுவதை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது," என குறிப்பிட்டுள்ளார்.

    நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதி சுற்றில் களமிறங்க உள்ளது. அரையிறுதி சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இந்தப் போட்டி நாளை (மார்ச் 4) துபாயில் நடைபெறுகிறது.



    • நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.
    • கேன் வில்லியம்சன் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

    நேற்றைய போட்டியில் இரு அணிகளின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை மட்டுமே எடுத்தது. மறுப்பக்கம் எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

    எனினும், அந்த அணியின் வீரர்கள் அவுட் ஆகி வந்தனர். அந்த அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டை கொடுக்காமல், நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார். இந்த நிலையில், போட்டியின் இக்கட்டான சூழலில், இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் கேன் வில்லியம்சன் விக்கெட்டை எடுத்தார்.

    உடனே இந்திய வீரர்கள் அக்சர் படேலை வாழ்த்த அவரை நோக்கி ஓடி வந்தனர். அப்போது, அக்சர் படேலிடம் ஓடி வந்த விராட் கோலி அவரது காலை தொட்டு வணங்க முற்பட்டார். எனினும், இதனை சுதாரித்து கொண்ட அக்சர் படேல் சட்டென கீழே உட்கார்ந்து கொண்டு விராட் கோலி கைகளை பற்றிக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.



    • பெங்களூரு அணி உள்ளூரில் 4 ஆட்டங்களிலும் வரிசையாக தோற்று இருக்கிறது.
    • போட்டிகளைக் காண வந்த ரசிகர்கள் தோல்வியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    பெங்களூரு:

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

    வதோதராவில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்ட பெங்களூரு அணி, அதன்பிறகு உள்ளூரில் 4 ஆட்டங்களிலும் வரிசையாக தோற்று இருக்கிறது.

    இந்நிலையில், தொடர் தோல்வி எதிரொலியாக பெங்களூரு ரசிகர்களிடம் பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, ஸ்மிருதி மந்தனா கூறுகையில், இந்தப் போட்டியை காண ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து ஆதரவு அளித்தனர். தோல்வியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள். பெங்களூரு மைதானத்தில் அவர்களுக்காக ஒரு போட்டியிலும் எங்களால் வெற்றிபெற முடியவில்லை. அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெறுவோமென நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • பிரக்ஞானந்தா ஜெர்மனி வீரர் கெய்மரை வீழ்த்தினார்.
    • பிரக்ஞானந்தா தனது முதல் இரு ஆட்டங்களில் டிரா செய்திருந்தார்.

    புதுடெல்லி:

    பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதன் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரைச் சந்தித்தார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

    பிரக்ஞானந்தா இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 டிரா செய்துள்ளார். இதன்மூலம் மற்றொரு இந்திய வீரரான அரவிந்த் சிதம்பரத்துடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார்.

    • ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து வெஸ்ட் இண்டீஸ் கற்றுக்கொள்ள வேண்டும்.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எங்கள் அணி பங்கேற்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.

    ஆன்டிகுவா:

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இதில் முன்னாள் உலக சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகள் தகுதி பெறவில்லை.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்காதது குறித்து அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    இந்த வீரர்களின் பட்டியலில் இருந்து எனது மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு சிறிய பகுதியையாவது எடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

    ஏனென்றால் ஆப்கானியர்கள் விளையாட்டின் மீது கொண்டு வந்த ஆர்வமும் ஆற்றலும் இதில் உள்ளன.

    உலகெங்கிலும் உள்ள வேறு சில அணிகளைப் போல அவர்கள் கிரிக்கெட் உலகில் நீண்ட காலமாக இல்லை. ஆனால் அவர்களின் சண்டை மனப்பான்மை மட்டுமே எனக்கு பிடித்துள்ளது.

    ஆண்டுகள் செல்லச் செல்ல கற்றுக்கொள்ளும் திறன், அவர்கள் இருக்கும் இடத்தில் இருக்கத் தேவையான அனுபவத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்கும்.

    சாம்பியன்ஸ் லீக்கில் ஆப்கானிஸ்தானை நீங்கள் பார்க்கும்போது அந்த அணி ஏதாவது சரியாகச் செய்கிறது என்று அர்த்தம்.

    மேற்கிந்திய தீவுகளுடன் ஒப்பிடும்போது, ஐசிசி போட்டிகளில் சில நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், ஆப்கானிஸ்தான் இப்போது ஆசிய பிராந்தியத்தில் ஒரு நல்ல சக்தியாக மாறியுள்ளது.

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்தை வீழ்த்தியது. 2024 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கும் முன்னேறியுள்ளது.

    பெரிய பாரம்பரியத்தைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன்ஸ் டிராபியில் இல்லாதது எனக்கு மிகவும் எரிச்சலூட்டுகிறது, அது வலிக்கிறது. இது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என தெரிவித்தார்.

    • மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் கொலம்பிய வீராங்கனை வெற்றி பெற்றார்.

    மெக்சிகோ:

    மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் கொலம்பியாவின் எமிலியானா அரங்கோ, ஆஸ்திரேலியாவின் டாரியா சவேலி உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-3 என வென்ற எமிலியானா 2வது செட்டை 4-6 என இழந்தார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-2 என கைப்பற்றிய எமிலியானா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதியில் பிரிட்டனின் எம்மா நவாரோ உடன் மோதுகிறார்.

    ×