என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டர்ஹாம் அகாடமியில் பென் ஸ்டோக்ஸ் இளைஞர்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருந்தார்.
    • பென் ஸ்டோக்ஸ்-க்கு கன்னத்தில் வெட்டுக்காயம் மற்றும் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.

    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இவர் நேற்றைய பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் முகத்தில் பலத்த காயமடைந்துள்ளார்.

    டர்ஹாம் அகாடமியில் இளைஞர்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வீரர் அடித்த பந்து எதிர்பாராதவிதமாக ஸ்டோக்ஸின் முகத்தில் தாக்கியது. இதில் அவரது வலது கண் பகுதியில் வீக்கம், கன்னத்தில் வெட்டுக்காயம் மற்றும் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து, தனது காயத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்டோக்ஸ், "அந்தக் கிரிக்கெட் பந்தின் நிலையை நீங்கள் பார்க்க வேண்டும்" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரின்போது ஏற்பட்ட தசைப் பிடிப்பு காயத்திலிருந்து மீண்டு வரும் நிலையில், இந்த புதிய விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

    பென் ஸ்டோக்ஸ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் முழுமையாக குணமடைவார் என அணித் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஜூன் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய மகள்ரி அணி 2-3 என்ற கணக்கில் தாய்லாந்திடம் போராடி வீழ்ந்தது.

    6-வது ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 ஆண்கள் அணிகளும், 11 பெண்கள் அணிகளும் தலா 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

    இதில் பெண்களுக்கான 'ஒய்' பிரிவில் இடம் பெற்ற நடப்பு சாம்பியன் இந் திய அணி நேற்று நடந்த தனது 2-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் கடந்த முறை 2-வது இடம் பெற்ற தாய்லாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தாய்லாந்திடம் போராடி வீழ்ந்தது.

    ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா 21-14, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் 16-ம் நிலை வீராங்கனை பூசனன் ஓங்பாம்ருங்பானை வீழ்த்தினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-திரிஷா ஜாலி இணை வெற்றி பெற்றது. முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணியினர் வெற்றி பெற்று முன்னிலை பெற்றாலும், அதன் பிறகு தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவி ஏமாற்றம் அளித்தனர்.

    அதாவது ரஷிதா ராம்ராஜ், தனிஷா கிரஸ்டா-சுருதி மிஸ்ரா, மாள்விகா பான்சோத் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வரிசையாக தோற்ற னர். லீக் முடிவில் தொடர்ந்து 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற தாய்லாந்து தனது பிரிவில் முதலிடம் பிடித்தும், முதலாவது ஆட்டத்தில் மியான்மரை 5-0 என்ற கணக்கில் வென்று இருந்த இந்திய அணி (ஒரு வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடம் பெற்றும் கால்இறுதிக்கு முன்னேறின. கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட மியான்மர் வெளியேறியது.

    இதேபோல் ஆண்களில் 'சி' பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 2-3 என்ற கணக்கில் ஜப்பானிடம் பணிந்தது. இந்திய அணியில் ஆயுஷ் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். எச்.எஸ்.பிரனாய், ஹரிகரன் அம்சகருணன்- பிருத்வி கிருஷ்ணமூர்த்தி. தருண் மன்னேபள்ளி ஆகியோர் தோல்வி கண்டனர். லீக் முடிவில் ஜப் பான் (2 வெற்றி) முதலிடமும், இந்தியா (ஒரு வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து கால்இறுதிக்குள் நுழைந்தன. சிங்கப்பூர் (2 தோல்வி) கால்இறுதி வாய்ப்பை இழந்தது.

    • காலிறுதி போட்டிகள் இன்று நடைபெற உள்ளன.
    • அரையிறுதி பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    ரஞ்சி கோப்பை தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் லீக் போட்டிகள் சமீபத்தில் முடிந்தன.

    இந்நிலையில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.

    காலிறுதிக்கு முன்னேறிய அணிகள்:

    ஏ பிரிவில் இருந்து ஜார்க்கண்ட், ஆந்திரா

    பி பிரிவில் இருந்து கர்நாடகா, மத்திய பிரதேசம்

    சி பிரிவில் இருந்து பெங்கால், உத்தரகாண்ட்

    டி பிரிவில் இருந்து மும்பை, ஜம்மு காஷ்மீர்

    முதல் காலிறுதியில் ஜார்க்கண்ட், உத்தரகாண்ட்டும், 2வது காலிறுதியில் மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீரும், 3வது காலிறுதியில் பெங்கால், ஆந்திராவும், 4வது காலிறுதியில் மும்பை, கர்நாடகாவும் மோதுகின்றன.

    காலிறுதி போட்டிகள் முடிந்து அரையிறுதி பிப்ரவரி 15ம் தேதியும், இறுதிப்போட்டி பிப்ரவரி 24-ம் தேதியும் நடைபெறுகின்றன.

    • கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடக்கிறது.
    • இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    தோஹா:

    கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் இன்று தொடங்குகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற அரினா சபலென்கா, கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    • இந்தியா 5 முறை 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்றது.
    • 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது.

    ஹராரே:

    19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இப்போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில், நடப்பு தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.

    ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டி தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி இதுவரை தோல்வி எதையும் சந்திக்கவில்லை. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்திய அணி 5 முறை 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது.

    இங்கிலாந்து அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 1998-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது. இங்கிலாந்து அணியும் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

    இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளன. ஆனாலும் போட்டி உள்ளூரில் நடப்பதால் இந்தியா மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • ஐபிஎல் தொடரில் அதிக ரன் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கு அளிக்கப்பட்டது.
    • அதிக விக்கெட் எடுத்த சோபியா டிவைனுக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்பட்டது.

    வதோதரா:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வதோதராவில் நடந்தது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 203 ரன் குவித்தது. கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன் எடுத்தார்.

    அடுத்து, களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    அத்துடன் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 87 ரன்னிலும், ஜார்ஜியா வோல் 79 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இந்நிலையில், ஆட்ட நாயகி விருது ஸ்மிருதி மந்தனாவுக்கும், தொடர் நாயகி விருது சோபி டிவைனுக்கும் அளிக்கப்பட்டது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கும், அதிக விக்கெட் எடுத்த சோபியா டிவைனுக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருது நந்தினி ஷர்மாவுக்கு அளிக்கப்பட்டது.

    • முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 203 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய பெங்களூரு அணி 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    வதோதரா:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வதோதராவில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.

    கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன்னும், லாரா வோல்வார்ட் 44 ரன்னும், லிஸ்ஸி லீ 37 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய சினேலி ஹென்றி 15 பந்தில் 37 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது. கிரேஸ் ஹாரிஸ் 9 ரன்னில் அவுட்டானார்.

    கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் ஜார்ஜியா வோல் இணைந்தார். இந்த ஜோடி அதிரடியில் மிரட்டியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

    2வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்த நிலையில் ஜார்ஜியா வோல் 79 ரன்னில் அவுட்டானார். ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 87 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • ஜெமிமா ரோட்ரிக்ஸின் மூன்றாவது அரைசதம்
    • மும்பை அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது

    மகளிர் ப்ரீமியர் லீக் 2026 தொடர் ஜன.9ஆம் தேதி தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ், மற்றும் உ.பி.வாரியர்ஸ் என ஐந்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் 22 லீக் சுற்றுகள் நடைபெற்றது.

    சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் டெல்லி மற்றும் குஜராத் மோதியது. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி டெல்லி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.  

    இந்நிலையில் இன்று (பிப். 5 ) வதோதராவில் உள்ள பி.சி.ஏ மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. லிசெல் லீ, சஃபாலி வர்மா 37, 20 ரன்கள் முறையே ஆட்டமிழக்க நான்காவதாக களமிறங்கிய அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பவுண்டரிகளாக அடித்து அரைசதம் கடந்து அணியின் ஸ்கோருக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன்களில் ஆட்டமிழக்க அணி 16 ஓவரில் 148 ரன்களில் இருந்தது. இது இறுதிப்போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸின் மூன்றாவது அரைசதமாகும். அதனைத்தொடர்ந்து லாரா களமிறங்கினார். முதல் இரண்டு ஓவர்களில் பெரிதாக ஆடவில்லையென்றாலும், அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸ்ர் என அதிரடி காட்டினார். கடைசி ஓவரில், கடைசிப் பந்தில் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    பெங்களூரு தரப்பில் சயாலி சத்காரே, அருந்ததி ரெட்டி, நதின் டெ கிளெர்க் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். தொடர்ந்து 204 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பெங்களூரு பேட்டிங்கை தொடரும். இப்போட்டியில் ஒருவேளை டெல்லி வெற்றிப் பெற்றால் முதல்முறையாக தொடரை கைப்பற்றி, கோப்பையை வெல்லும். பெங்களூரு வெற்றிப் பெற்றால் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றும். மும்பை அணி இரண்டு முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
    • இந்திய மதிப்பில் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

    2026 இந்தியன் பிரிமீயர் லீக் தொடருக்கான வீரர்கள் தேர்வு ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார். அப்போது வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தநிலையில், கேகேஆர் அணியின் உரிமையாளரான ஷாருக்கானை இந்து தலைவர்கள் பலரும் தேசத்துரோகி என விமர்சித்தனர்.

    இதனைத்தொடர்ந்து பிசிசிஐ தலையீடு காரணமாகவும் முஸ்தபிசுர் ரஹ்மான் கேகேஆர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது கண்டனத்தை தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவில் விளையாடமாட்டோம் எனவும் தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்றவேண்டும் எனவும் தெரிவித்தது.

    ஆனால் ஐசிசி அதன் கோரிக்கையை ஏற்காததால், வங்கதேசம் தொடரில் இருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. வங்கதேசம் நீக்கப்படுவதற்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொசின் நக்வி, வங்கதேசம் நீக்கப்பட்டால், பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் பங்கேற்காது எனத் தெரிவித்து, தங்கள் அணியின் முடிவை அரசுதான் எடுக்கும் என்றும், இது இரட்டை நிலைப்பாடு என்றும் கூறியிருந்தார். 

    இதற்கு பதிலளித்த ஐசிசி பாகிஸ்தான் விலக முடிவு செய்தால், வரலாறு காணாத தடையை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 உலக கோப்பை தொடருக்கான தங்கள் அணியை அறிவித்தது. தொடர்ந்து அணி போட்டிகளில் விளையாடியும் வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி கொழும்புவில் பிப்ரவரி 15, 2026 அன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 11-வது சீசனில் விளையாடுவதற்காக வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், லாகூர் குவாலண்டர்ஸ் அணியால் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்திய மதிப்பில் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் லாகூர் குவாலண்டர்ஸ் அணியின் ஒரு பகுதியாக முஸ்தபிசுர் இருந்துள்ளார். 

    • நவி மும்பை மற்றும் வதோதரா ஆகிய இரண்டு நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன.
    • லீக் சுற்றில் முதலிடம் பிடித்த பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

    4-வது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் உபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. மொத்தம் 22 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை விரட்டியடித்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டம் குஜராத்தின் வதோதராவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி முதலில் பேட்டிங் செய்கிறது.

     

    • பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடமாட்டோம் என நாங்கள் கூறவில்லை.
    • பிப்ரவரி 15 அன்று கொழும்பில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி நடைபெறுகிறது

    2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவில் விளையாட பாதுகாப்பு காரணங்களால் மறுப்பு தெரிவித்த வங்கதேச அணிக்கு ஆதரவாகவும், அந்த அணியை நீக்கிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முடிவுக்கு எதிராகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

    இது வாரியத்தின் முடிவு என்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும்,அரசின் உத்தரவை ஏற்போம் என்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாட தயாராக இருப்பதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,

    "பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடமாட்டோம் என நாங்கள் கூறவில்லை. அவர்கள்தான் கூறினார்கள். ஐசிசி அட்டவணையை உருவாக்கியது. நாங்கள் விளையாட தயாராக இருக்கிறோம். நாங்கள் கொழும்பிவிற்கு செல்வதற்காக பயணச்சீட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. டெல்லிக்குப் பிறகு நாங்கள் கொழும்பு செல்கிறோம்." என தெரிவித்துள்ளார். 

    பிப்ரவரி 15 அன்று கொழும்பில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் பங்கேற்குமா என தெரியவில்லை. ஆனால் மற்ற நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது.
    • நடப்பு சாம்பியனான இந்திய அணி மூன்றாவது முறை சாம்பியன் ஆக வாய்ப்பு உள்ளது.

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. நடப்பு சாம்பியனான இந்திய அணி மூன்றாவது முறை சாம்பியன் ஆக வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் இந்திய ஆடவர் அணிக்கு இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.

    அதில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் ஆகியோர் டி20 உலகக் கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

    ×