என் மலர்
விளையாட்டு
- நாங்கள் விளையாட்டு மைதானத்திற்கு வெளியில் இருந்து வரும் கருத்துகளை புறந்தள்ளி விடுவோம்.
- இது தொடர்பாக நாங்கள் உண்மையிலேயே பேசுவது இல்லை.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு ஏதிரான குரூப் லீக் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அணி தெரிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நாளை தொடங்கும் நிலையில், பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, இந்திய போட்டியை புறக்கணித்தது தொடர்பாக பாகிஸ்தான் அணியை நோக்கி விமர்சனம் வருவதை எப்படி சமாளிப்பீர்கள்? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு சல்மான ஆகா அளித்த பதில் பின் வருமாறு:-
நாங்கள் விளையாட்டு மைதானத்திற்கு வெளியில் இருந்து வரும் கருத்துகளை புறந்தள்ளி விடுவோம். இது தொடர்பாக நாங்கள் உண்மையிலேயே பேசுவது இல்லை. எங்கள் அணிக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை உண்மையிலேயே நாங்கள் பார்க்க விரும்பவில்லை. எங்களால செய்யக்கூடிய சிறந்த விசயம் இதுதான் என நினைக்கிறேன்.
ஆசிய கோப்பை தொடரின்போது இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுத்ததால் நாங்கள் உண்மையிலேயே வருத்தம் அல்லது அதுபோன்ற ஒன்றை உணர்ந்தது இல்லை. எனினும், விளையாட்டிற்கு இது நல்லது அல்ல. இதுபோன்ற விசயங்கள் நடைபெறக்கூடாது.
சிறுவயதில் வளர்ந்து வரும்போது, ஆட்டத்தை மேம்படுத்துவதற்குத் தேவையானதை மக்கள் செய்வதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன். ஓரளவிற்கு, நாங்கள் முன்மாதிரிகளாக இருக்கிறோம். நீங்கள் அப்படிச் செய்தால், குழந்தைகளும் இதைக் கற்றுக்கொள்வார்கள், நாளை அவர்களும் அதே காரியங்களைச் செய்வார்கள்.
ஆகவே, இதுபோன்ற விஷயங்கள் நடக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், நீங்கள் முன்மாதிரிகளைப் பற்றி யோசித்தால், முன்மாதிரிகள் இதுபோன்ற செயல்களைச் செய்வதில்லை என்று நான் கருதுகிறேன்.
இவ்வாறு சல்மான் ஆகா தெரிவித்தார்.
- வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும்.
- திகாரத்துடன் பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
பாகிஸ்தான், 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவோம் என்றும் ஆனால் பிப்.15-ல் கொழும்பில் நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
மறுபக்கம் இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாட தயாராக இருக்கிறது என அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டிற்கு, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான நாசர் ஹுசைனின் கருத்துகள் கவனம் ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் பல வசைபாடல்களுக்கும் உள்ளாகி வருகிறது.
பாகிஸ்தான் நிலைப்பாடு தொடர்பாக பேசியுள்ள நாசர் ஹுசைன்,
"இதுவே இந்தியா, தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, 'எங்கள் அரசு இந்த நாட்டில் விளையாட அனுமதிக்கவில்லை' என்று கூறியிருந்தால், ஐசிசி அதே உறுதியோடு, 'விதிகள் உங்களுக்கு தெரியும். மீறினால் தொடரில் இருந்து நீக்குவோம்' என சொல்லியிருக்குமா?. அனைத்து தரப்பினரும் கேட்பது நிலைத்தன்மைதான். வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும்.
இந்திய ரசிகர்கள் கூறலாம், 'இன்னும் நல்லா அழுங்க, எங்களிடம் பணம் இருக்கிறது' என்று. ஆனால் அதிகாரத்துடன் பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை தொடர்ந்து குறைமதிப்பீடு செய்வது அவர்களின் கிரிக்கெட்டை பாதிக்கிறது. அதனால்தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அல்லது இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான சிறந்த போட்டிகள் காலப்போக்கில் ஒருதலைப்பட்சமானவையாக மாறிவிட்டன." என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும், இது கிரிக்கெட்டின் தரத்தைக் குறைத்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இவரின் இந்த கருத்துக்கு இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து, இவரை ட்ரோல் செய்துவருகின்றனர்.
- ஹெர்வாத்கர் 60 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
- ஜெய்ஸ்வால் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
ரஞ்சி டிராபியின் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. 4-வது காலிறுதியில் மும்பை- கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் கர்நாடகாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 120 ரன்னில் சுருண்டது.
தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஹெர்வாத்கர் கடைசி வரை போராடி 60 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். சித்தேஷ் லாட் 12 ரன்களும், கேப்டன் ஷர்துல் தாகூர் 16 ரன்களும் அடித்தனர்.
கர்நாடக அணி சார்பில் வித்வாத் கவேரப்பா, பிரசித் கிருஷ்ணா, ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
- 32 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம்
- 55 பந்தில் தலா 8 பவுண்டரி மற்றும் சிக்சர்களுடன் சதம் அடித்தார்.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஆரோன் ஜார்ஜ், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் இறங்கினர். ஜார்ஜ் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.
அடுத்து வைபவ் சூர்யவன்ஷி உடன் ஆயுஷ் மாத்ரே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சூர்யவன்ஷி 32 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். ஆயுஷ் மாத்ரே 50 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சூர்யவன்ஷியுடன் வேதாந்த் திரிவேதி ஜோடி சேர்ந்தார்.
வைபவ் சூர்யவன்ஷி அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 55 பந்தில் தலா 8 பவுண்டரி மற்றும் சிக்சர்களுடன் சதம் அடித்தார்.
சதம் அடித்த அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்தியா 22.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
- இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா உள்ளார்.
- இவர் அடிக்கடி தனது ஹேர் ஸ்டைலை மாற்றி ரசிகர்களால் ஈர்க்கப்படுவார்.
டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நாளையில் இருந்து குரூப் லீக் போட்டிகள் நடைபெற இருக்கிறன. 20 அணி வீரர்களும் போட்டிக்கு தயாராகியுள்ளனர். ஒவ்வொரு வீரர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்த விரும்புவார்கள். அதேவேளையில் முக்கியமான தொடர் மற்றும் உலகம் முழுவதும் போட்டியை பார்க்க இருப்பதால், வீரர்கள் தங்களை வித்தியாசமான தோற்றத்தில் வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்க்க விரும்புவார்கள்.

அந்த வகையில் ஹர்திக் பாண்ட்யா தலை முடி முழுவதும் வெள்ளையாக தோற்றமளிக்கும் வகையில் ஹேர் கட் செய்து, புது தோற்றத்துடன் களம் இறங்க இருக்கிறார். ஹர்திக் பாண்ட்யா எப்போதும் தன்னை ஸ்டைலாக வெளிப்படுத்த விரும்பக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பேட்டிங் வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்த இந்திய திட்டமிட்டிருந்தது.
- தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு தயார்படுத்திய நிலையில் காயத்தால் விலகியுள்ளார்.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்திய அணி உலகக் கோப்பை தொடருக்காக நன்றாக தயாராகி உள்ளது. உலகக் கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி அதை 4-1 எனக் கைப்பற்றியிருந்தது.
உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 30 ரன்களில் வீழ்த்தியிருந்தது. இந்த நிலையில் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வந்த ஹர்ஷித் ராணா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதமாக இவரை இந்திய அணி ஆல்-ரவுண்டர் பந்து வீச்சாளராக தொடர்ந்து பயன்படுத்தி வந்தது. இவருடம் பேட்டிங்கில் தனது பங்களிப்பை கொடுத்து வந்தார். இந்த நிலையில் ஹர்ஷித் ராணா விலகியுள்ளது இந்திய அணிக்கு இழப்பாக பார்க்கப்படுகிறது.
- இந்திய அணியுடனான லீக் ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளது.
- பாகிஸ்தான் அணியின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணியுடனான லீக் ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. அதில், பிப்ரவரி 15-ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறவில்லை என்றால் நிதி இழப்பு, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இழப்புகளை இலங்கை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த இழப்புகள் இலங்கைக்கு மட்டுமல்லாது தொடரில் பங்கேற்றுள்ள பலருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த தொடரை வெற்றிகரமாக நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. மேலும், 2009-ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயங்கிய போது, தங்கள் அணி பல்வேறு முறை அங்கு பயணித்து கிரிக்கெட் விளையாடியதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
இலங்கையின் இந்த கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
- ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 87 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை வென்றார்.
- நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கு வழங்கப்பட்டது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வதோதராவில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 87 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை வென்றார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முந்தைய இரவு, ஸ்மிருதிக்கு 103 டிகிரி ஃபாரன்ஹீட் காய்ச்சல் இருந்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் மாலோலன் ரங்கராஜன் தெரிவித்தார்.
கடுமையான காய்ச்சல் மற்றும் "ஃப்ளூ" (flu) பாதிப்பு இருந்தபோதிலும், அணியின் வெற்றிக்காக அவர் ஓய்வெடுக்காமல் விளையாடத் தீர்மானித்தார்.
உடல்நலக் குறைவையும் மீறி களமிறங்கிய அவர், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து தனது அணியை சாம்பியன் பட்டத்தை நோக்கி அழைத்துச் சென்றார்.
இவரது இந்த அசாத்தியமான பங்களிப்பிற்காக இறுதிப்போட்டியின் "ஆட்ட நாயகி" (Player of the Match) விருது வழங்கப்பட்டது. அவருக்கு ரசிகர்கள் உள்பட விளையாட்டு வீரர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி தொடங்குகிறது.
- இந்த தொடருக்கான வர்ணனையாளர் குழு பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து அணி வீரர்களும் இந்தியா மற்றும் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு பயிற்சி போட்டிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான வர்ணனையாளர் குழு பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. வர்ணனையாளர் (Commentator) குழுவில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தற்போதைய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டனான டெம்பா பவுமா இணைந்துள்ளார்.
டி20 தொடருக்கான வர்ணனையாளர் குழு பட்டியல்:-
ரவி சாஸ்திரி, நாசர் ஹுசைன், இயன் ஸ்மித், இயன் பிஷப், ஃபின்ச், கார்த்திக், சங்கக்கார, பத்ரீ, உத்தப்பா, பிராத்வைட், மோர்கன், வசிம் அக்ரம், கவாஸ்கர், ஹைடன், ரமீஸ் ராஜா, ஸ்டெய்ன், அதர்டன், வக்கார், சைமன் டவுல், பொல்லாக், கேட்டி மார்ட்டின், ஹர்ஷா, மும்பெலோ மபாங்வா, நடாலி ஜெர்மானோஸ், டேனி மோரிசன், ஆலன் வில்கின்ஸ், இயன் வார்டு, மார்க் ஹோவர்ட், நிக் நைட், அதர் அலி கான், காஸ் நைடூ, பாசித் கான், ரவுனக் கபூர், நயால் ஓ'பிரையன், பிரஸ்டன் மாம்சென், ஆண்ட்ரூ லியோனார்ட், ரஸ்ஸல் அர்னால்ட், ரோஷன் அபேசிங்க, ஏஞ்சலோ மேத்யூஸ், பவுமா.
- ஏற்கனவே கம்மின்ஸ் காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
- ஹேசில்வுட் டி20 உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டிகளைத் தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.
20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இதனிடையே டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த கம்மின்ஸ் காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
மேலும், மேட் ஷார்ட்டும் தொடரில் இருந்து விலகினார். இதனால் மாற்று வீரர்களாக பென் ட்வார்ஷியஸ், மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் டி20 உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டிகளைத் தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் அவர் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். இது ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- டபிள்யூ.பி.எல் வரலாற்றிலேயே மிக உயர்ந்த ரன் சேஸை ஆர்சிபி பதிவு செய்தது.
- ஒரே நேரத்தில் IPL மற்றும் WPL கோப்பைகளை வைத்திருக்கும் முதல் அணியாக ஆர்சிபி புதிய சாதனையை படைத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வதோதராவில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி, டபிள்யூ.பி.எல் வரலாற்றிலேயே மிக உயர்ந்த ரன் சேஸை பதிவு செய்ததுடன், 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. மேலும், ஒரே நேரத்தில் ஐபிஎல் மற்றும் டபிள்யூ.பி.எல் கோப்பைகளை வைத்திருக்கும் முதல் அணியாக பெங்களூரு புதிய சாதனையை படைத்துள்ளது. தற்போது ஐபிஎல் கோப்பையும் பெங்களூரு அணியிடம் உள்ளது.
இந்நிலையில் 2-வது முறையாக WPL தொடரை வென்ற RCB மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், நீங்கள் ஒவ்வொருவரும் பெருமைபடக்கூடிய மிகப்பெரிய வெற்றி இது. ஆர்சிபி அணியின் வெற்றிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் அணியினர் இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியானவர்கள் என கூறினார்.
- டர்ஹாம் அகாடமியில் பென் ஸ்டோக்ஸ் இளைஞர்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருந்தார்.
- பென் ஸ்டோக்ஸ்-க்கு கன்னத்தில் வெட்டுக்காயம் மற்றும் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இவர் நேற்றைய பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் முகத்தில் பலத்த காயமடைந்துள்ளார்.
டர்ஹாம் அகாடமியில் இளைஞர்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வீரர் அடித்த பந்து எதிர்பாராதவிதமாக ஸ்டோக்ஸின் முகத்தில் தாக்கியது. இதில் அவரது வலது கண் பகுதியில் வீக்கம், கன்னத்தில் வெட்டுக்காயம் மற்றும் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, தனது காயத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்டோக்ஸ், "அந்தக் கிரிக்கெட் பந்தின் நிலையை நீங்கள் பார்க்க வேண்டும்" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரின்போது ஏற்பட்ட தசைப் பிடிப்பு காயத்திலிருந்து மீண்டு வரும் நிலையில், இந்த புதிய விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
பென் ஸ்டோக்ஸ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் முழுமையாக குணமடைவார் என அணித் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூன் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






