என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கோச்சிங் கொடுக்க வந்தது குத்தமா..? ஸ்டோக்ஸ் முகத்தை பதம் பார்த்த இளம் வீரர்
    X

    கோச்சிங் கொடுக்க வந்தது குத்தமா..? ஸ்டோக்ஸ் முகத்தை பதம் பார்த்த இளம் வீரர்

    • டர்ஹாம் அகாடமியில் பென் ஸ்டோக்ஸ் இளைஞர்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருந்தார்.
    • பென் ஸ்டோக்ஸ்-க்கு கன்னத்தில் வெட்டுக்காயம் மற்றும் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.

    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இவர் நேற்றைய பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் முகத்தில் பலத்த காயமடைந்துள்ளார்.

    டர்ஹாம் அகாடமியில் இளைஞர்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வீரர் அடித்த பந்து எதிர்பாராதவிதமாக ஸ்டோக்ஸின் முகத்தில் தாக்கியது. இதில் அவரது வலது கண் பகுதியில் வீக்கம், கன்னத்தில் வெட்டுக்காயம் மற்றும் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து, தனது காயத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்டோக்ஸ், "அந்தக் கிரிக்கெட் பந்தின் நிலையை நீங்கள் பார்க்க வேண்டும்" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரின்போது ஏற்பட்ட தசைப் பிடிப்பு காயத்திலிருந்து மீண்டு வரும் நிலையில், இந்த புதிய விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

    பென் ஸ்டோக்ஸ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் முழுமையாக குணமடைவார் என அணித் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஜூன் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×