என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது.
    • நடப்பு சாம்பியனான இந்திய அணி மூன்றாவது முறை சாம்பியன் ஆக வாய்ப்பு உள்ளது.

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. நடப்பு சாம்பியனான இந்திய அணி மூன்றாவது முறை சாம்பியன் ஆக வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் இந்திய ஆடவர் அணிக்கு இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.

    அதில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் ஆகியோர் டி20 உலகக் கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

    • காலிறுதியில் மும்பை, கர்நாடகா உள்பட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளனர்.
    • அனைத்து காலிறுதி போட்டிகளும் பிப்ரவரி 6 முதல் 10, 2026 வரை (5 நாட்கள்) நடக்கவுள்ளது.

    இந்தியாவின் மிக முக்கியமான உள்நாட்டு கிரிக்கெட் தொடர் ரஞ்சி டிராபி. 2025-26 ரஞ்சி டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. (அக்டோபர் 15, 2025 முதல் பிப்ரவரி 28, 2026 வரை). குரூப் ஸ்டேஜ் போட்டிகள் முடிந்த நிலையில் காலிறுதி போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது.

    காலிறுதியில் ஜார்கண்ட், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், பெங்கால், ஆந்திரா, மும்பை, கர்நாடகா ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுள்ளனர். அனைத்து காலிறுதி போட்டிகளும் பிப்ரவரி 6 முதல் 10, 2026 வரை (5 நாட்கள்) நடக்கவுள்ளது.

    இந்நிலையில் மும்பை அணியின் முக்கிய பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கான் வைரல் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவர் காலிறுதி போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது.

    அவரது நிலைமை ஸ்டேபிள் என்றாலும், முழு ரெக்கவரி 3-4 நாட்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த போட்டியிலேயே டெல்லி அணிக்கு எதிராக ஃபீல்டிங் செய்யவில்லை.

    மும்பை அணி இப்போது ஷர்துல் தாகூர் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்றோருடன் வலுவாக உள்ளது. ஆனால் சர்ஃபராஸ் இல்லாமல் பேட்டிங் ஆர்டர் பாதிக்கப்படலாம்.

    • இந்திய அணி 6-வது தடவையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
    • இந்திய அணி 11-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    ஹராரே:

    16-வது 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    இதன் இறுதிப்போட்டி நாளை (6-ந்தேதி) நடைபெறுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.

    ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டி தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி இதுவரை தோல்வி எதையும் சந்திக்கவில்லை.

    இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 5 முறை 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்று இருந்தது.

    11-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணி 6-வது தடவையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இந்திய அணி லீக் ஆட்டங்களில் அமெரிக்கா (6 விக்கெட்), வங்கதேசம் (18 ரன்), நியூசிலாந்து (7 விக்கெட்), சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வே (204 ரன்), பாகிஸ்தான் (58 ரன்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. நேற்று நடந்த அரைஇறுதியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    இங்கிலாந்து அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் வேட் கையில் உள்ளது. அந்த அணி 1998-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. 3-வது தடவையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.

    இங்கிலாந்து அணியும் தோல்வி எதையும் சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அந்த அணி லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான் (36 ரன்), ஜிம்பாப்வே (8 விக்கெட்), ஸ்காட்லாந்து (252 ரன்), சூப்பர் சிக்ஸ் சுற்றில் வங்காள தேசம் (7விக்கெட்), நியூசிலாந்து (65 ரன்), ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவை 27 ரன் வித்தியாசத்தில் தோற்க டித்தது.

    • விளையாட்டில் அரசியல் இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
    • நாங்கள் வங்க தேசத்துக்கு முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும்.

    இஸ்லாமாபாத்:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியின் கொல்கத்தா அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதை தொடர்ந்து வங்கதேச அணி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகியது. தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நிராகரித்தது. வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து இடம்பெற்றது.

    இந்த விவகாரத்தில் வங்கதேசத்திற்கு ஏற்கனவே பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்து இருந்தது. அதே நேரத்தில் 20 ஓவர் உலகக் கோப்பையில் ஆடுவோம் என்றும் தெரிவித்தது.

    இதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்தது. கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், இதனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

    புறக்கணிப்பு முடிவை கைவிடாவிட்டால் ஒளிபரப்பு நிறுவனம் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று ஐ.சி.சி. மீண்டும் எச்சரித்தது.

    இந்தியாவுடன் விளையாட மறுப்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) இதுவரை அதிகாரப்பூர்வமாக தங்களிடம் தெரிவிக்கவில்லை என்றும் ஐ.சி.சி. தெரிவித்தது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான புறக்கணிப்பு முடிவில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் மந்திரி சபை கூட்டத்தில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-

    20 ஓவர் உலகக் கோப்பை தொடர்பாக நாங்கள் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இது விளையாட்டு களம் அரசியல் இருக்க கூடாது என்பதால் நாங்கள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம்.

    விளையாட்டில் அரசியல் இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் வங்க தேசத்துக்கு முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும். இது மிகவும் பொருத்தமான முடிவு என்று நான் நினைக்கிறேன். நாங்கள் நன்கு ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறினார்.

    ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோஷின் நக்வி வங்கதேச விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி. இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.

    உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 15-ந்தேதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தப்போட்டி நடக்காமல் போனால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகளிா் ஒற்றையா் பிரிவில் 4 வைல்டு காா்டு வாய்ப்புகளும் இந்திய வீராங்கனைகளுக்கே வழங்கப்பட்டுள்ளது.
    • இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.2.90 கோடியாகும்.

    சென்னை:

    சர்வதேச டேபிள் டென்னிஸ் அமைப்பு சார்பில் 2021 ஆண்டு முதல் 'ஸ்டார் கன்டெண்டர் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2023, 2024-ல் கோவாவில் நடந்த இந்த தொடர் கடந்த ஆண்டு முதல் முறையாக சென்னையில் நடந்தது.

    தற்போது 2-வது ஆண்டாக, 'ஸ்டார் கன்டெண்டர் டேபிள்டென்னிஸ் போட்டி சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் வருகிற 10-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அல்டிமேட் டேபிள் டென்னிஸ், சரத் கமல் அகாடமி, ஸ்டூபா ஸ்போா்ட்ஸ் ஏஐ ஆகியவை இணைந்து நடத்துகிறது.

    இந்தியாவின் அனுஷா குடும்பலே, பிரியானுஜ் பட்டாச்சாா்யா ஆகியோா் வைல்ட் காா்ட் பெற்றுள்ளனா். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக அனைத்து பிரிவிலும் 23 இந்திய வீரா், வீராங்கனைகள் முதன்மை சுற்றில் இடம் பெற்றுள்ளனர்.

    மகளிா் ஒற்றையா் பிரிவில் 4 வைல்டு காா்டு வாய்ப்புகளும் இந்திய வீராங்கனைகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. அனுஷா குடும்பலே, சாயலி வாணி, காவ்யா பட் மற்றும் தனிஷா கோடேச்சா ஆகியோரும். ஆண்கள் பிரிவில் அனிா்பன் கோஷ்திவ் யான்ஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோா் பிரியனுஜுடன் முதன்மை சுற்றுக்கு தகுதி பெற்றனா்.

    மானவ் தக்கா், மனுஷ் ஷா, அனுபவம் வாய்ந்த ஜி. சத்யன் , ஹா்மீத் தேசாய் ஆகியோரும் பிரதான சுற்றில் ஆடுகிறார்கள்.

    இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.2.90 கோடியாகும். கடந்த ஆண்டு இந்த தொடரின் போது ஓய்வு பெற்ற பிரபல இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் போட்டி இயக்குனராக பணியாற்றுகிறார்.

    • இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
    • தாமதமாக விண்ணப்பித்து விசா கிடைக்காததால் 28 பேர் கொண்ட ஈரான் அணி கடைசி நேரத்தில் விலகியது.

    புதுடெல்லி:

    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதிகபட்சமாக இந்தியா சார்பில் 118 பேர் கலந்து கொண்டுள்ளனர். தாமதமாக விண்ணப்பித்து விசா கிடைக்காததால் 28 பேர் கொண்ட ஈரான் அணி கடைசி நேரத்தில் விலகியது.

    இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் அபாரமாக செயல்பட்ட இந்திய வீராங்கனை இஷா சிங் 239.8 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். சீன தைபேயின் செங் யென் சிங் (235.4 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், யூ அய் வென் (217.7 புள்ளி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். இந்தியாவின் சுருச்சி சிங் (197.7) 4-வது இடமும், பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரம் மானு பாக்கர் (135.3) 7-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.

    10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் சுருச்சி சிங் (576), மானு பாக்கர் (575), இஷா சிங் (575) ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணி 1,726 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது. வியட்நாம் (1,713) வெள்ளிப்பதக்கத்தையும், சீன தைபே அணி (1,711) வெண்கலப்பதக்கத்தையும் பெற்றன.

    ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தின் தகுதி சுற்றில் 2-வது இடம் பிடித்து இறுதி சுற்றுக்குள் நுழைந்த உலக சாம்பியனான இந்திய வீரர் சம்ரத் ராணா இறுதிப்போட்டியில் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. அவர் 220.3 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றார். உஸ்பெகிஸ்தானின் விளாடிமிர் ஸ்வெச்னிகோவ் (242), கஜகஸ்தானின் வலேரி ரகிம்ஜான் (241) முறையே தங்கம், வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினர்.

    இதன் அணிகள் பிரிவில் சம்ரத் ராணா (581), ஷர்வன் குமார் (578), வருண் தோமர் (573) ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,732 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றது. உஸ்பெகிஸ்தான் அணி (1,732) தங்கப்பதக்கத்தையும், கஜகஸ்தான் அணி (1,731) வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றின.

    ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்தியாவின் கவின் அந்தோணி (240.9 புள்ளி) முதலிடமும், கஜகஸ்தானின் இமான்டோஸ் பெக்டெனோவ் (236.7) 2-வது இடமும், இந்தோனேசியாவின் மாருப் ஆலியா (215.6) 3-வது இடமும் பிடித்தனர். இதன் அணிகள் பிரிவில் இந்தியா (1735) தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.

    நேற்றைய பந்தயங்கள் முடிவில் இந்தியா 6 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.

    • பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டம் வதோதராவில் இன்று நடக்கிறது.
    • இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

    வதோதரா:

    4-வது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை விரட்டியடித்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இந்நிலையில் பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டம் குஜராத்தின் வதோதராவில் இன்று நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

    முன்னாள் சாம்பியனான பெங்களூரு அணி லீக் சுற்றில் முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்றது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா (290 ரன்), கிரேஸ் ஹாரிஸ் (228), ரிச்சா கோஷ் (183) எடுத்துள்ளனர்.

    பந்து வீச்சில் நடினே டி கிளார்க் (15 விக்கெட்), லாரென் பெல் (12), ஸ்ரேயங்கா பட்டீல் (11), சயாலி சத்கரே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இதேபோல், டெல்லி அணியின் பேட்டிங்கில் லிசெல் லீ (283 ரன்), லாரா வோல்வார்ட் (273), ஷபாலி வர்மா (239), கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (207) சூப்பர் பார்மில் உள்ளனர்.

    பந்து வீச்சில் நந்தினி ஷர்மா (16 விக்கெட்), ஸ்ரீசரனி (14), சினெலி ஹென்றி (12) மிரட்டுகிறார்கள்.

    நடப்பு சீசனில் இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதியதில் தலா ஒரு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. சம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

    பெங்களூரு அணி 2-வது முறையாக கோப்பையை கையில் ஏந்தும் முனைப்புடன் தயாராகிறது. டெல்லி அணியும் முதல் முறையாக கோப்பையை வெல்ல வரிந்து கட்டுகிறது.

    போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பெண்கள், ஆண்கள் பிரிவினர் 2வது சுற்றில் வென்றனர்.

    கிங்டாவோ:

    6-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கிங்டாவோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 ஆண்கள் அணிகளும், 11 பெண்கள் அணிகளும் தலா 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

    இதில் பெண்களுக்கான 'ஒய்' பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி, தனது தொடக்க லீக் ஆட்–டத்–தில் மியான்மரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

    இந்திய பெண்கள் அணி நேற்று தனது 2-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    இதேபோல், ஆண்களில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது. நேற்று நடந்த கடைசி லீக் சுற்றில் இந்திய அணி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    • டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன் குவிப்பவராக இருப்பார்.
    • இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மா முக்கியமானவர் என்றார்.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை வரும் 7-ம் தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் இந்தியா பிப்ரவரி 7-ம் தேதி மும்பையில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிக ரன்கள் குவிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார். ஐ.சி.சி. ரிவ்யூ நிகழ்ச்சியில் ரிக்கி பாண்டிங் பேசியதாவது:

    அபிஷேக்கின் முதல் ஐபிஎல் பயிற்சியாளர் நான்தான். 17 வயதில் அறிமுகமாகி முதல் பந்திலேயே நேராக பவுலர் தலைக்கு மேல் பவுண்டரி விளாசினார். அந்த கிளாசிக்கல் ஸ்ட்ரெயிட் பேட் ஷாட் இவர் சாதாரண வீரர் அல்ல என்பதை எனக்குக் காட்டியது.

    அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலேயே தக்கவைக்க வேண்டும் என உரிமையாளர்களிடம் கெஞ்சிக் கூத்தாடினேன். அவரை டிரேட் செய்ய வேண்டாம் என பலமுறை சொல்லிப் பார்த்தேன். இவர் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகப் போகிறார் என அப்போதே தெரிந்தது. இப்போது அதுதான் நடந்திருக்கிறது.

    அவர் இந்த 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன் குவிப்பவராக இருப்பார், தொடரிலேயே சிறந்த வீரராகவும் மாறக்கூடிய அளவுக்கு திறமை கொண்டவர். அவர் அப்படி விளையாடினால் இந்திய அணியை தோற்கடிப்பது இன்னும் கடினமாகும். இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் முக்கியமானவர் என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 240 ரன்கள் குவித்தது.

    நவி மும்பை:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 240 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 20 பந்தில் 53 ரன்னும், திலக் வர்மா 19 பந்தில் 45 ரன்னும், அக்சர் படேல் 23 பந்தில் 35 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. ரியான் ரிக்கல்டன் 21 பந்தில் 44 ரன்னும், மார்க்ரம் 19 பந்தில் 38 ரன்னும், ஜேசன் ஸ்மித் 35 ரன்னும், மார்கோ யான்சென் 31 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக ஆடி 21 பந்தில் 45 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    • லக்னோவில் தேசிய பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • கடந்த 3-ம் தொடங்கிய இந்தப் போட்டிகள் வரும் 14-ம் தேதி வரை நடக்கின்றன.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் லக்னோவில் தேசிய பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 3-ம் தொடங்கிய இந்தப் போட்டிகள் வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகின்றன.

    இந்நிலையில், மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு தேசிய பளு தூக்குதலில் 3 தேசிய சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.

    மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் மீரா பாய் சானு முதலில் ஸ்நாட்ச் பிரிவில் 86, 89 கிலோ எடையைத் தூக்கினார். 91 கிலோவை தூக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இருந்தும், இந்தப் பிரிவில் 89 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார்.

    அடுத்ததாக க்ளீன் & ஜெர்க் பிரிவில் 116 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார்.

    48 கிலோ மகளிருக்கான எடைப் பிரிவில் மொத்தமாக (89 + 116) 205 கிலோ எடையைத் தூக்கி மூன்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

    • இஷான் கிஷன் 20 பந்தில் 53 ரன்கள் அடித்தார்.
    • திலக் வர்மா 19 பந்தில் 45 ரன்கள் விளாசினார்.

    டி20 உலகக் கோப்பை வருகிற 7-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில் இன்று இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான பயிற்சி ஆட்டம் நவி மும்பையில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், அபிஷேக் சர்மா இறங்கினர். இஷான் கிஷன் 20 பந்தில் 53 ரன்களும், அபிஷேக் சர்மா 18 பந்தில் 24 ரன்களும் எடுத்து ரிட்டையர்டு அவுட் முறையில் வெளியேறினர்.

    அடுத்து வந்த திலக் வர்மா அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 19 பந்தில் 45 ரன்கள் விளாசி தனது உடற்தகுதியை நிரூபித்தார். இவர் காயம் காரணமாக சில தொடர்களை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேப்டன் சூர்யகுமார் யாதவ் 16 பந்தில் 30 ரன்களும், ரிங்கி சிங் 13 பந்தில் 16 ரன்களும் எடுத்து வெளியேறினர். ஹர்திக் பாண்ட்யா 10 பந்தில் 30 ரன்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 35 ரன்களும் அடிக்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்துள்ளது.

    ×