என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிய துப்பாக்கி சுடுதல்"
- ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கம் வென்றார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன.
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் போட்டியில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் நீரஜ் குமார் வெள்ளியும், அகில் ஷியரோன் வெண்கலப் பதக்கங்களும் பெற்றனர்.
இந்த 3 இந்திய வீரர்களும் குழு போட்டியில் 1769 புள்ளிகளுடன் தங்கம் வென்றனர்.
- இந்திய வீராங்கனை அனுஷ்கா வெண்கலப்பதக்கம் (341.1 புள்ளி) பெற்றார்.
- இந்த போட்டியில் இந்தியா 66 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
புதுடெல்லி:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் இந்தியர் கள் தொடர்ந்து பதக்க வேட்டை நடத்துகிறார் கள். நேற்று பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைப்பிரிவில் இந்தியாவின் ஆக்ரிதி தாஹியா வெள்ளிப்பதக்கமும் (354.2 புள்ளி), அஞ்சும் சோப்ரா வெண்கலப்பதக்கமும் (340.4 புள்ளி) வென்றனர்.
கஜகஸ்தான் வீராங்கனை சோபியா ஷூல்ஜென்கோ 358.2 புள்ளிகளுடன் புதிய உலக சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை தட் டிச் சென்றார். ஜூனியரில் பெண்களுக்கான 3. நிலை பந்தயத்தில் இந்தியாவின் பிராச்சி கெய்க் வாட் 353.3 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை முத்த மிட்டார். மற்றொரு இந்திய வீராங்கனை அனுஷ்கா வெண்கலப்பதக்கம் (341.1 புள்ளி) பெற்றார். கஜகஸ்தானின் தோமிரிஸ் அமனோவா 351.4 புள் ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார். இதன் அணிகள் பிரிவில் பிராச்சி, அனுஷ்கா, ஹாசல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,748 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.
இந்த போட்டியில் இந்தியா இதுவரை 39 தங்கம். 15 வெள்ளி, 12 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
- ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையரில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.
புதுடெல்லி:
ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 118 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தின் இறுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட
இளவேனில் வாலறிவன், அர்ஜுன் பாபுடா ஜோடி 505 புள்ளிகள் குவித்து தங்கம் வென்றது.
கொரியா ஜோடி வெள்ளியும், ஜப்பான் ஜோடி வெண்கலமும் வென்றன.
- ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.
புதுடெல்லி:
ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 118 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தின் இறுதிச்சுற்றில் அபாரமாக செயல்பட்ட தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றாா்.
ஜப்பானின் நோபடோ மிஸாகி, இந்தியாவின் மேக்னா சஜ்நாா் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா்.
- இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
- தாமதமாக விண்ணப்பித்து விசா கிடைக்காததால் 28 பேர் கொண்ட ஈரான் அணி கடைசி நேரத்தில் விலகியது.
புதுடெல்லி:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதிகபட்சமாக இந்தியா சார்பில் 118 பேர் கலந்து கொண்டுள்ளனர். தாமதமாக விண்ணப்பித்து விசா கிடைக்காததால் 28 பேர் கொண்ட ஈரான் அணி கடைசி நேரத்தில் விலகியது.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் அபாரமாக செயல்பட்ட இந்திய வீராங்கனை இஷா சிங் 239.8 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். சீன தைபேயின் செங் யென் சிங் (235.4 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், யூ அய் வென் (217.7 புள்ளி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். இந்தியாவின் சுருச்சி சிங் (197.7) 4-வது இடமும், பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரம் மானு பாக்கர் (135.3) 7-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் சுருச்சி சிங் (576), மானு பாக்கர் (575), இஷா சிங் (575) ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணி 1,726 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது. வியட்நாம் (1,713) வெள்ளிப்பதக்கத்தையும், சீன தைபே அணி (1,711) வெண்கலப்பதக்கத்தையும் பெற்றன.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தின் தகுதி சுற்றில் 2-வது இடம் பிடித்து இறுதி சுற்றுக்குள் நுழைந்த உலக சாம்பியனான இந்திய வீரர் சம்ரத் ராணா இறுதிப்போட்டியில் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. அவர் 220.3 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றார். உஸ்பெகிஸ்தானின் விளாடிமிர் ஸ்வெச்னிகோவ் (242), கஜகஸ்தானின் வலேரி ரகிம்ஜான் (241) முறையே தங்கம், வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினர்.
இதன் அணிகள் பிரிவில் சம்ரத் ராணா (581), ஷர்வன் குமார் (578), வருண் தோமர் (573) ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,732 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றது. உஸ்பெகிஸ்தான் அணி (1,732) தங்கப்பதக்கத்தையும், கஜகஸ்தான் அணி (1,731) வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றின.
ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்தியாவின் கவின் அந்தோணி (240.9 புள்ளி) முதலிடமும், கஜகஸ்தானின் இமான்டோஸ் பெக்டெனோவ் (236.7) 2-வது இடமும், இந்தோனேசியாவின் மாருப் ஆலியா (215.6) 3-வது இடமும் பிடித்தனர். இதன் அணிகள் பிரிவில் இந்தியா (1735) தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.
நேற்றைய பந்தயங்கள் முடிவில் இந்தியா 6 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.
- அடுத்த ஆண்டுக்கான ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்திய ரைபிள் சங்கத்துக்கு, ஆசிய துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் அளித்துள்ளது.
- இந்தியாவில் நடைபெறும் இந்த இரு போட்டியின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான 20 இடங்களை வசப்படுத்தலாம்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ரைபிள், பிஸ்டல், ஷாட்கன்) டெல்லியில் உள்ள கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் தளத்தில் அடுத்த ஆண்டு (2027) ஏப்ரல் 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது.
2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றான இந்த உலக கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான 12 ஒதுக்கீடு (கோட்டா) இடங்களை பெற முடியும்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் (ரைபிள், பிஸ்டல்) போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்திய ரைபிள் சங்கத்துக்கு, ஆசிய துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் அளித்துள்ளது. இந்த போட்டியும் லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றாகும். இந்த போட்டியில் நிர்ணயிக்கப்படும் இலக்கினை எட்டிப்பிடிப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கான 8 இடங்களை (கோட்டாவை) கைப்பற்றலாம். இந்தியாவில் நடைபெறும் இந்த இரு போட்டியின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான 20 இடங்களை வசப்படுத்தலாம்.
இது குறித்து இந்திய ரைபிள் சங்க பொதுச்செயலாளர் பவன்குமார் சிங் கூறுகையில், 'இரண்டு ஒலிம்பிக் கோட்டா போட்டிகளை இந்தியா நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதற்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியை அடுத்த ஆண்டு (ஏப்ரல் 21-30) டெல்லியில் நடத்துகிறோம். ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியும் அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெறும். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் முக்கிய போட்டிகளை நடத்துவதில் எங்களது திறமை மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் இந்தியாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதையும், சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் காட்டுகிறது. இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வார்கள். மேலும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் போது பிடித்த 22 இடங்களை மிஞ்சி, ஒருநாட்டுக்குரிய அதிகபட்சமான 24 இடங்களை பிடிப்பதே இலக்காக கொண்டு செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்' என்றார்.
இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் இன்று தொடங்குகிறது. 13-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
- ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
- இந்த போட்டியில் இந்தியா வென்ற 6-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
ஜகர்த்தா:
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று ரைபிள்/பிஸ்டல் போட்டியில் இந்தியா மேலும் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி மற்றும் வெண்கலத்தை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பட்டீல், மெகுலி கோஷ் இணை 16-10 என்ற புள்ளி கணக்கில் சென் யுபான்-ஜூ மிங்ஷூய் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.
இந்த போட்டியில் இந்தியா வென்ற 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் அர்ஜூன் சிங் சீமா-ரிதம் சங்வான் கூட்டணி 11-17 என்ற புள்ளி கணக்கில் வியட்நாமின் து வின் டிரின்க்-குயாங் ஹூய் பாம் இணையிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.
இரண்டாவது நாள் முடிவில், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் உள்ளது.






