என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஷா சிங்"

    • இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
    • தாமதமாக விண்ணப்பித்து விசா கிடைக்காததால் 28 பேர் கொண்ட ஈரான் அணி கடைசி நேரத்தில் விலகியது.

    புதுடெல்லி:

    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதிகபட்சமாக இந்தியா சார்பில் 118 பேர் கலந்து கொண்டுள்ளனர். தாமதமாக விண்ணப்பித்து விசா கிடைக்காததால் 28 பேர் கொண்ட ஈரான் அணி கடைசி நேரத்தில் விலகியது.

    இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் அபாரமாக செயல்பட்ட இந்திய வீராங்கனை இஷா சிங் 239.8 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். சீன தைபேயின் செங் யென் சிங் (235.4 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், யூ அய் வென் (217.7 புள்ளி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். இந்தியாவின் சுருச்சி சிங் (197.7) 4-வது இடமும், பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரம் மானு பாக்கர் (135.3) 7-வது இடமும் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.

    10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் சுருச்சி சிங் (576), மானு பாக்கர் (575), இஷா சிங் (575) ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணி 1,726 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது. வியட்நாம் (1,713) வெள்ளிப்பதக்கத்தையும், சீன தைபே அணி (1,711) வெண்கலப்பதக்கத்தையும் பெற்றன.

    ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தின் தகுதி சுற்றில் 2-வது இடம் பிடித்து இறுதி சுற்றுக்குள் நுழைந்த உலக சாம்பியனான இந்திய வீரர் சம்ரத் ராணா இறுதிப்போட்டியில் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. அவர் 220.3 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றார். உஸ்பெகிஸ்தானின் விளாடிமிர் ஸ்வெச்னிகோவ் (242), கஜகஸ்தானின் வலேரி ரகிம்ஜான் (241) முறையே தங்கம், வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினர்.

    இதன் அணிகள் பிரிவில் சம்ரத் ராணா (581), ஷர்வன் குமார் (578), வருண் தோமர் (573) ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,732 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றது. உஸ்பெகிஸ்தான் அணி (1,732) தங்கப்பதக்கத்தையும், கஜகஸ்தான் அணி (1,731) வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றின.

    ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்தியாவின் கவின் அந்தோணி (240.9 புள்ளி) முதலிடமும், கஜகஸ்தானின் இமான்டோஸ் பெக்டெனோவ் (236.7) 2-வது இடமும், இந்தோனேசியாவின் மாருப் ஆலியா (215.6) 3-வது இடமும் பிடித்தனர். இதன் அணிகள் பிரிவில் இந்தியா (1735) தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.

    நேற்றைய பந்தயங்கள் முடிவில் இந்தியா 6 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.

    • புதுச்சேரியில் 5 ஆண்டில் 5.13 சதவீதமாக இருந்த குற்றங்களின் எண்ணிக்கை 2.18 சதவீதமாக குறைதுள்ளது.
    • எதிர்காலத்தில் பொது தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் உயரதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.

    டி.ஜி.பி. ஷாலினிசிங், ஐ.ஜி.அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுக்கள், எஸ்.பி.க்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    விஜய் பொதுக்கூட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கிய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங் உட்பட பல்வேறு வகையிலும் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளை அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி மாநில காவல்துறை 2 நிலைகளில் முதலிடம் பெற்றுள்ளது. மத்திய அரசு புதிதாக 3 சட்டங்களை உருவாக்கி கடைபிடிக்க வழிமுறைகள் வகுத்தது. புதுச்சேரி மாநிலம் 90 நாட்களுக்குள் 80 சதவீத குற்றபத்திரிகையை தாக்கல் செய்து இந்தியாவில் முதலிடத்தை பெற்றுள்ளது. 60 நாட்களில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யும் பிரிவில் கேரளா, புதுச்சேரி முதலிடத்தை பெற்றுள்ளது.

    இதற்காக மத்திய உள்துறை மந்திரி புதுச்சேரி அரசை பாராட்டியுள்ளார். அகில இந்திய அளவில் பாகூர் போலீஸ் நிலையம் 8-ம் இடம் பிடித்து மிகப்பெரும் சாதனை செய்துள்ளது.

    பாகூர் போலீஸ் நிலைய போலீசார் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். வாரந்தோறும் காவல் துறையினர் மக்கள்மன்றம் நடத்தி குறைகளை தீர்த்து வருகின்றனர்.

    இதுவரை 10 ஆயிரத்து 866 புகார் மனு பெற்று 98 சதவீத தீர்வு காணப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த டி.ஜி.பி., ஐ.ஜி. மாநாட்டில் புதுச்சேரியில் நடைபெறும் மக்கள் மன்றத்தை சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் இதை நடத்த அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் புதுச்சேரி மாநிலத்துக்கு கவுரவம் அளித்துள்ளார்.

    புதுச்சேரியில் 5 ஆண்டில் 5.13 சதவீதமாக இருந்த குற்றங்களின் எண்ணிக்கை 2.18 சதவீதமாக குறைதுள்ளது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்துவதில் புதுச்சேரி காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. எதிர்காலத்தில் பொது தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டிய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் போது த.வெ.க. நிர்வாகிகளிடம் எனது வேலையை ஒழுங்காக செய்ய விடுங்கள் என்று ஆவேசமாக பேசியவர் ஆவார். இவரது இந்த ஆவேசமான பேச்சு சமூக வலைதளங்களில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

    • தந்தை ஓய்வு பெற்ற உடனே ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்று இஷா சிங் விருப்பம் தெரிவித்தார்.
    • சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு குரல் கொடுப்பவராக திகழ்ந்தார்.

    விஜய் பொதுக்கூட்டத்தில் அதிரடி காட்டி அனைவராலும் ஈர்க்கப்பட்டவர் இஷா சிங். யார் இவர்? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கிய நிலையில் அவரை பற்றிய தகவல்கள் வருமாறு:-

    இஷா சிங் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுவை காவல்துறையில் சேர்ந்து கிழக்குபகுதி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். சுகாதாரத்துறையில் போலி மருந்து மோசடி வழக்கில் துணிச்சலுடன் செயல்பட்டு சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர்கள் 2 பேர் உள்பட 6 பேரை கடந்த மாதம் அதிரடியாக கைது செய்தார்.

    இஷா சிங்கின் தாத்தா, தந்தை ஒய்.பி. சிங் இவர்களும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆவர். தந்தை ஒய்.பி. சிங் கடந்த 2004-ம் ஆண்டு காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். அவரது தந்தை ஓய்வு பெற்ற உடனே ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்று இஷா சிங் விருப்பம் தெரிவித்தார். 'நேசனல் ஸ்கூல் ஆப் லா' கல்லூரியில் சட்டமும் படித்த இஷா சிங் மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார்.

    சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு குரல் கொடுப்பவராக திகழ்ந்தார். விஷவாயு தாக்கி உயிரிழந்த மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்காக மும்பை ஐகோர்ட்டில் வாதாடி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் பெற்றுக் கொடுத்தார். அதன்பின் இந்திய குடிமை பணிக்கான தேர்வு எழுதி தற்போது ஐ.பி.எஸ்.அதிகாரியாக உள்ளார். தற்போது அவர் ஐ.ஏ.எஸ். மற்றும் நீதிபதிக்கான தேர்வுகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

    • ஈஷாவின் முதல் உலகக் கோப்பை தங்கம் இதுவாகும்.
    • இந்த பதங்கத்தை வென்றதன் மூலம் இந்தியா, பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது.

    நிங்போவில் நடந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான தனிநபர் 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் இஷா சிங் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

    ஈஷா 242.6 புள்ளிகள் பெற்று, பரபரப்பான இறுதிப் போட்டியில் சீனாவின் யாவோவை 0.1 என்ற கணக்கில் வீழ்த்தினார். நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவின் ஓ யெஜின் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

    ஈஷாவின் முதல் உலகக் கோப்பை தங்கம் இதுவாகும். இந்த பதங்கத்தை வென்றதன் மூலம் இந்தியா, பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. தங்கப் பதக்கத்தை வென்ற மற்ற நான்கு நாடுகளுடன் இந்தியா இணைந்தது.

    ×