என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shooting match"

    • இந்திய இளைஞர் அணி,16வது ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி கசகஸ்தானில் நடைபெற்றது.
    • இந்த நான்கு ஷூட்டர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெருமைக்குரியது.

    இந்திய இளைஞர் அணி, கசகஸ்தானில் நடைபெற்ற 16வது ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அபார வெற்றி பெற்று, பல்வேறு பதக்கங்களை கைப்பற்றியது.

    டிராப் யூத் மகளிர் தனிநபர் பிரிவு

    தனிஷ்கா – தங்கப் பதக்கம்

    நிலா ராஜா பாலு – வெள்ளிப் பதக்கம்

    அந்த்ரா ராஜ்சேகர் – வெண்கலப் பதக்கம்

    டிராப் யூத் மகளிர் அணி – தங்கப் பதக்கம்

    டிராப் யூத் ஆண்கள் தனிநபர் பிரிவு

    யுகன் S M – தங்கப் பதக்கம்

    டிராப் யூத் ஆண்கள் அணி – தங்கப் பதக்கம்

    இந்த வெற்றியின் சிறப்பம்சம், இந்த நான்கு ஷூட்டர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெருமைக்குரியது.

    மேலும், நிலா, தமிழ்நாடு மாநில அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பி. ராஜா அவர்களின் மகள்.

    அந்த்ரா ராஜ்சேகர், பிரபல தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் அவர்களின் மகள்.

    இளம் வீரர்கள் பெற்ற இந்த அற்புத சாதனை, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது.

    • பரிசு வழங்கும் விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழக்கினார்.

    சென்னை:

    காவலர் துப்பாக்கிச்சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.  போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    23-வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி, தமிழ்நாடு காவல்துறை நடத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப் படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் 09.01.2023 முதல் 13.01.2023 வரை நடைபெற்றது. 

    ×