ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவின் ஆக்ரிதி, சோப்ராவுக்கு பதக்கம்

இந்திய வீராங்கனை அனுஷ்கா வெண்கலப்பதக்கம் (341.1 புள்ளி) பெற்றார். இந்த போட்டியில் இந்தியா 66 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவின் ஆக்ரிதி, சோப்ராவுக்கு பதக்கம்
Published on

புதுடெல்லி:

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் இந்தியர் கள் தொடர்ந்து பதக்க வேட்டை நடத்துகிறார் கள். நேற்று பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைப்பிரிவில் இந்தியாவின் ஆக்ரிதி தாஹியா வெள்ளிப்பதக்கமும் (354.2 புள்ளி), அஞ்சும் சோப்ரா வெண்கலப்பதக்கமும் (340.4 புள்ளி) வென்றனர்.

கஜகஸ்தான் வீராங்கனை சோபியா ஷூல்ஜென்கோ 358.2 புள்ளிகளுடன் புதிய உலக சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை தட் டிச் சென்றார். ஜூனியரில் பெண்களுக்கான 3. நிலை பந்தயத்தில் இந்தியாவின் பிராச்சி கெய்க் வாட் 353.3 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை முத்த மிட்டார். மற்றொரு இந்திய வீராங்கனை அனுஷ்கா வெண்கலப்பதக்கம் (341.1 புள்ளி) பெற்றார். கஜகஸ்தானின் தோமிரிஸ் அமனோவா 351.4 புள் ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார். இதன் அணிகள் பிரிவில் பிராச்சி, அனுஷ்கா, ஹாசல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,748 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.

இந்த போட்டியில் இந்தியா இதுவரை 39 தங்கம். 15 வெள்ளி, 12 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com