search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mirabai Chanu"

    • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இன்று 3 பதக்கங்களை வென்றுள்ளது.
    • பளு தூக்குதலில் மீராபாய் சானு தங்கம் வென்றார்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளில் பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.

    பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய் சானு. காமன்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானுவுக்கு இது 3வது பதக்கமாகும்.

    இந்நிலையில் பளு தூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதேபோல், விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார்.
    • காமன்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு முதல் தங்கமாகும்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.

    இந்நிலையில், பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய் சானு. காமன்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானுவுக்கு இது 3வது (2014 - வெள்ளி, 2018 - தங்கம், 2022 - தங்கம்) பதக்கமாகும்.

    இதன்மூலம் காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரே நாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்றுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு முதல் தங்கமாகும்.

    ஆசிய பளுதூக்குதல் போட்டியில் இந்திய முன்னணி வீராங்கனை மீராபாய் சானு மயிரிழையில் வெண்கலப்பதக்கத்தை நழுவ விட்டார். #AsianWeightliftingChampionships #MirabaiChanu
    நிங்போ:

    ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் சீனாவின் ஹோ ஸிஹூய் தங்கப்பதக்கமும் (208 கிலோ), தென்கொரியாவின் ரி சாங்-கம் (200 கிலோ) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

    இதே பந்தயத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடியெடுத்து வைத்த முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் மீராபாய் சானு மயிரிழையில் பதக்கத்தை நழுவ விட்டார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் 86 கிலோ, கிளன் அண்ட் ஜெர்க் பிரிவில் 113 கிலோ என்று மொத்தமாக 199 கிலோ எடையை தூக்கினார். சீனாவின் ஜாங் ரோங்கும் இதே போல் 199 கிலோ (ஸ்னாட்ச் 88 கிலோ மற்றும் கிளன் அண்ட் ஜெர்க்கில் 111 கிலோ) தூக்கி சமநிலை வகித்தார்.

    புதிய விதிமுறைப்படி இவ்வாறு இரு வீராங்கனைகள் சமநிலையில் இருக்கும்போது கிளன்அண்ட் ஜெர்க் பிரிவில் யார் குறைவாக எடை தூக்குகிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அந்த வகையில் சீனாவின் ஜாங் ரோங் வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மீராபாய் சானு 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    ஆனாலும் கிளன் அண்ட் ஜெர்க் பிரிவில் தனிப்பட்ட முறையில் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தது மீராபாய் சானுக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது. இந்த பிரிவில் அவர் 113 கிலோ தூக்கினார். முன்பு 111 கிலோ வரை எடை தூக்கியதே சிறந்ததாக இருந்தது. மணிப்பூரைச் சேர்ந்த 24 வயதான மீராபாய் ஒரு முறை 115 கிலோ எடையை தூக்குவதற்கு முயற்சித்தார். அது வெற்றிகரமாக அமைந்திருந்தால் அவருக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்திருக்கும்.

    ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவில் வீரர்கள், ஏ, பி என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். இதில் பி பிரிவில் அங்கம் வகித்த இளையோர் ஒலிம்பிக் சாம்பியனான இந்திய வீரர் ஜெரிமி லால்ரின்னுங்கா மொத்தம் 297 கிலோ (ஸ்னாட்ச் 134 கிலோ மற்றும் கிளன் அண்ட் ஜெர்க் 163 கிலோ) தூக்கி பிரமாதப்படுத்தினார். ஜெரிமி பி பிரிவில் 2-வது இடத்தை பிடித்தார். பாகிஸ்தானின் தல்ஹா தலிப் 304 கிலோவுடன் முதலிடம் பெற்றார். இன்று ‘ஏ’ பிரிவில் உள்ள வீரர்களுக்கு போட்டி நடக்கும். அதன் பிறகே பதக்கம் வெல்வது யார்? என்பது தெரிய வரும்.

    மிசோரத்தை சேர்ந்த 16 வயதான ஜெரிமி தனது அசத்தலான செயல்பாட்டின் மூலம் ஜூனியர் மட்டத்தில் 15 சாதனைகளை நிகழ்த்தினார். அதாவது உலக இளையோர், ஆசிய இளையோர், தேசிய இளையோர், தேசிய ஜூனியர், தேசிய சீனியர் ஆகிய பிரிவில் தலா 3 சாதனைகள் வீதம் படைத்தார். இதில் குறிப்பிட்டு ஒன்றை சொல்ல வேண்டும் என்றால் ஸ்னாட்ச் பிரிவில் இளையோர் உலக சாதனை 131 கிலோ தூக்கியது ஆகும். அதுவும் அவரது சாதனை தான். அதை தற்போது 134 கிலோவாக மாற்றி அமைத்துள்ளார்.

    முன்னதாக பெண்களுக்கான 45 கிலோ பிரிவில் ஜிலி தலபெஹெரா 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தி (மொத்தம் 167 கிலோ) இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கி வைத்தார். ஜிலி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். ஆனால் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் 45 கிலோ பிரிவு இடம் பெறவில்லை. இதனால் இந்த பிரிவு பந்தயம் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. #AsianWeightliftingChampionships
    #MirabaiChanu
    இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு காயத்திலிருந்து மீண்டு தாய்லாந்தில் நடந்த போட்டி ஒன்றில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். #EGATCup #MirabaiChanu
    இந்திய பளுதூக்கும் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு (24). மணிப்பூரை சேர்ந்த இவர் கடந்த 2017ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர். கோல்டு கோஸ்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு 196 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார்.

    காயத்தினால் அவதிப்பட்ட அவர் கடந்த 9 மாதமாக எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. தொடர் சிகிச்சைக்கு பின் அவர் காயத்திலிருந்து மீண்டார்.

    இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் நடந்த ஈ.ஜி.ஏ.டி. கோப்பைக்கான பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு கலந்து கொண்டார்.

    இதில், 49 கிலோ எடை பிரிவில் சானு மொத்தம் 192 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். ஜப்பானின் மியாகே ஹிரோமி (183 கிலோ) வெள்ளிப்பதக்கமும், பப்புவா நியூ கினியாவின் லாவோ டிக்கா தவுவா (179 கிலோ) வெண்கலப் பதக்கமும் வென்றனர். #EGATCup #MirabaiChanu
    விராட் கோலி மற்றும் மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. #ViratKohli #MirabaiChanu #RajivGandhiKhelRatna
    புதுடெல்லி:

    மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத்துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு இந்த துறையின் மிக உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கும்.

    இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து அந்த அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதனடிப்படையில் விராட் கோலி, மீராபாய் சானு உள்பட பல வீரர்களின் பெயர்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.



    இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படும்.

    இந்த விருதுகள் செப்டம்பர் 25-ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #ViratKohli #MirabaiChanu #RajivGandhiKhelRatna
    ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு திடீரென விலகி இருக்கிறார். #WeightLifter #MirabaiChanu
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் போட்டியில் 48 கிலோ உடல் எடைப் பிரிவில் மொத்தம் 194 கிலோ எடை தூக்கி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

    மணிப்பூரை சேர்ந்த 23 வயதான மீராபாய் சானு, இந்தோனேஷியாவில் வருகிற 18-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடைபெறும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய பளுதூக்குதல் அணியில் இடம் பிடித்து இருந்தார். இந்த போட்டிக்காக அவர் பயிற்சியில் ஈடுபட்ட போது முதுகுவலி பிரச்சினை ஏற்பட்டது. இந்த காயத்துக்காக அவர் பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றாலும், காயத்தின் தன்மை குறித்து துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் மீராபாய் சானு இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘காயத்தில் இருந்து மீண்டு வரவும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு தயாராகவும் தனக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுவதால், ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விலக முடிவு செய்து இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய பளுதூக்குதல் அணியின் தலைமை பயிற்சியாளர் விஜய் சர்மாவும், மீராபாய் சானுவின் காயம் குறித்து இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு அறிக்கை அளித்துள்ளார்.

    அதில் முக்கியமான ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கு முன்பாக காயத்தில் இருந்து மீண்டு வர மீராபாய் சானுவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

    இது குறித்து இந்திய பளுதூக்குதல் சம்மேளன பொதுச்செயலாளர் செக்தேவ் யாதவிடம் கேட்ட போது, ‘ஆசிய விளையாட்டு போட்டியில் மீராபாய் கலந்து கொள்ளப்போவதில்லை என்பது உண்மை தான். இது குறித்து மத்திய விளையாட்டு துறைக்கு அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்படும்’ என்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட மீராபாய் சானு போட்டியில் இருந்து விலகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி துர்க்மெனிஸ்தானில் வருகிற நவம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த (2020) ஒலிம்பிக் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  #WeightLifter #MirabaiChanu #tamilnews

    ×