என் மலர்

  செய்திகள்

  ஆசிய பவர்லிப்ட் சாம்பியன்ஷிப்- தமிழக வனத்துறை ஊழியர் பதக்கம் வென்று அசத்தல்
  X

  ஆசிய பவர்லிப்ட் சாம்பியன்ஷிப்- தமிழக வனத்துறை ஊழியர் பதக்கம் வென்று அசத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆசிய பவர்லிப்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வனத்துறை ஊழியர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
  ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் ஆசிய பவர்லிப்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 1-ந்தேதி தொடங்கிய இந்த தொடர் நாளை வரை நடக்கிறது. ஆசியாவைச் சேர்ந்த சுமார் 14 நாடுகளைக் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு திறமைய வெளிப்படுத்தி வருகிறார்கள்.

  இதில் 74 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் வனத்துறையைச் சேர்ந்த டிரைவர் மணிமாறன் கலந்து கொண்டார். திருச்சியைச் சேர்ந்த இவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். விளையாட்டு பிரிவின் மூலமாக வனத்துறையில் கடந்த 2009-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தார். சர்வதேச அளவில் பெரும் முதல் பதக்கம் இதுவாகும்.
  Next Story
  ×