search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    u19 கூச் பெஹார் தொடர்: ம.பி-யை வீழ்த்தி விதர்பா சாம்பியன்
    X

    u19 கூச் பெஹார் தொடர்: ம.பி-யை வீழ்த்தி விதர்பா சாம்பியன்

    19 கூச் பெஹார் கிரிக்கெட் தொடரில் வித்ர்பா அணி மத்திய பிரதேசத்திற்கு எதிராக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது. #CoochBeharTrophy #Vidarbha
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் விதர்பா - மத்திய பிரதேசம் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் 289 ரன்னில் ஆல்அவுட் ஆனது. சுராஜ் வசிஸ்ட் 75 ரன்னும், யாஷ் டுபெ 55 ரன்னும் எடுத்தனர். விதர்பா அணி சார்பில் டிஜி நல்கண்டே 4 விக்கெட்டும், பிஆர் ரெகாட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்க்ள.

    ஷபின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா 614 ரன்கள் குவித்தது. அதர்வா தைடே 320 ரன்னும், என்ஆர் சவான் 107 ரன்னும் எடுத்தனர். மத்திய பிரதேசம் அணி சார்பில் ரிஷப் சவுகான் 4 விக்கெட்டும், மொகமது சாத் பக்கத் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய மத்திய பிரதேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் விதர்பா சாம்பியன் பட்டம் வென்றது.

    கடந்த ஜனவரி 1-ந்தேதி விதர்பா அணி முதன்முறையாக ரஞ்சி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×