search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், பிராட்டில் யார் கேப்டன்?: இங்கிலாந்து நேர்காணல்
    X

    ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், பிராட்டில் யார் கேப்டன்?: இங்கிலாந்து நேர்காணல்

    டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்காக ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட்டிடம் நேர்காணல் நடத்தியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
    இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தவர் அலஸ்டைர் குக். இவர் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-4 என இழந்தது. வங்காள தேசத்திற்கு எதிரான தொடரை 1-1 சமன் செய்தது. இதனால் குக் கேப்டன் பதவி குறித்து விமர்சனம் எழுந்தது.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அலஸ்டைர் குக் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இங்கிலாந்து அணி மார்ச் மாதம் முதல் வாரத்தில் இங்கிலாந்து சென்று விளையாட இருக்கிறது. இதற்கு முன் கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு இருக்கிறது.

    துணை கேப்டனாக இருக்கும் ஜோ ரூட்தான் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவட் பிராட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள்.



    இதனால் மூவரிடமும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஸ்டாரஸ் மற்றும் இயக்குனர் உள்பட சீனியர் உறுப்பினர்கள் நேர்காணல் நடத்தியுள்ளனர்.



    30 வயதாகும் ஸ்டூவர்ட் பிராட் 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். வங்காள தேச தொடரில் பென் ஸ்டோக்ஸ் துணை கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×