என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![காயம் காரணமாக நியூசி. தொடரில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல் காயம் காரணமாக நியூசி. தொடரில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்](https://img.maalaimalar.com/Articles/2016/Dec/201612281558056670_Mushfiqur-Rahim-out-of-ODI-series-with-hamstring-injury_SECVPF.gif)
X
காயம் காரணமாக நியூசி. தொடரில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்
By
மாலை மலர்28 Dec 2016 10:28 AM GMT (Updated: 28 Dec 2016 10:28 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
காயம் காரணமாக நியூசிலாந்து தொடரின் எஞ்சிய போட்டியில் இருந்து வங்காள தேச அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான முஷ்பிகுர் ரஹிம் விலகியுள்ளார்.
வங்காள தேச கிரிக்கெட் அணி மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 26-ந்தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்காள தேசம் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது வங்காள தேச அணியின் பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பரும் ஆன முஸ்டாபிகுர் ரஹிமிற்கு தொடையில் காயம் ஏற்பட்டது. அப்போது அவர் 42 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாமல் ‘ரிட்டையர்டு ஹர்ட்’ மூலம் வெளியேறினார்.
இதனால் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் பங்கேற்கமாட்டார் என்று வங்காள தேச அணி தெரிவித்துள்ளது. மேலும், காயம் முழுமையாக குணமடையவில்லை என்றால் டி20 கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பர் பணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அனுபவ வீரரான ரஹிம் அணியில் இடம்பெறாதது பெரிய இழப்பு என்று அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது.

Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)