என் மலர்

  செய்திகள்

  சாம்பியன் பட்டம் பெற்ற சைலேந்திரா அணிக்கு பரிசை மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் வழங்கியபோது எடுத்தபடம்.
  X
  சாம்பியன் பட்டம் பெற்ற சைலேந்திரா அணிக்கு பரிசை மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் வழங்கியபோது எடுத்தபடம்.

  மாவட்ட கைப்பந்து போட்டி: ஒட்டன்சத்திரம் அணி சாம்பியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியின் முடிவில் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை ஒட்டன்சத்திரம் சைலேந்திரா அணி பெற்றது. இது குறித்த செய்தியை விரிவாக கீழே பார்க்கலாம்.
  திண்டுக்கல் :

  திண்டுக்கல் மாவட்ட கைப்பந்து சங்கம் மற்றும் அச்யுதா கல்விக்குழுமம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி அச்யுதா பள்ளி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆண்கள் பிரிவில் 16 அணியும், மகளிர் பிரிவில் 4 அணிகளும் கலந்து கொண்டன.

  இறுதிப்போட்டியின் முடிவில் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை ஒட்டன்சத்திரம் சைலேந்திரா அணியும், 2-வது இடத்தை காந்திகிராம பல்கலைக்கழக அணியும், 3-வது இடத்தை திண்டுக்கல் ஜி.டி.என். அணியும், 4-வது இடத்தை அச்யுதா பள்ளி அணியும் பெற்றன. அதேபோல மகளிர் பிரிவில் சின்னாளபட்டி தேவாங்கர் பள்ளி அணி சாம்பியன் பட்டத்தையும், 2-வது இடத்தை காந்திகிராம பல்கலைக்கழக அணியும், 3-வது இடத்தை பிரான்சிஸ் சேவியர் அணியும் பிடித்தன.

  பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு அச்யுதா கல்விக்குழும தாளாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் நாகராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் சந்திரசேகரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×