என் மலர்

  செய்திகள்

  பஞ்சாப்: 6 இந்திய ஹாக்கி வீரர்கள் உள்பட 9 வீரர்களுக்கு டிஎஸ்பி பதவி
  X

  பஞ்சாப்: 6 இந்திய ஹாக்கி வீரர்கள் உள்பட 9 வீரர்களுக்கு டிஎஸ்பி பதவி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  6 இந்திய ஹாக்கி வீரர்கள் உள்பட 9 விளையாட்டு வீரர்களுக்கு டிஎஸ்பி பதவி நியமனம் செய்து பஞ்சாப் அரசு கவுரப்படுத்தியுள்ளது.
  இந்திய நாட்டிற்காக விளையாட்டில் சாதிக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அரசு பதவி கொடுத்து கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில் பஞ்சாப் அரசு விளையாட்டிற்கான ஒதுக்கீட்டில் 9 வீரர்களுக்கு டிஎஸ்பி பதவி வழங்கி கவுரவித்துள்ளது.

  2014-ம் ஆண்டு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஆசிய போட்டியில் தங்கம் வென்றது. இதனால் மான்ப்ரீத் சிங், ஆகாஷ்தீப் சிங், சர்வான்ஜித் சிங், ராமன்தீப் சிங், புர்விந்தர் சிங் சண்டி மற்றும் தரம்வீர் சிங் ஆகியோருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

  மூன்று முறை ஆசிய போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் பதக்கம் வென்ற மந்தீப் கவுர், ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற தடகள வீரர் குஸ்பிர் கவுர் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற அமன்தீப் கவுர் ஆகியோருக்கும் டி.எஸ்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.

  சண்டிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் அவர்கள் பதவிக்கான நியமனக்கடிதத்தை வழங்கினார்.
  Next Story
  ×