search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை டெஸ்ட்: இங்கிலாந்தின் அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் சதம்
    X

    மும்பை டெஸ்ட்: இங்கிலாந்தின் அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் சதம்

    மும்பை வான்கடே டெஸ்டில் இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் சதம் அடித்து அசத்தினார். அறிமுக போட்டியில் சதம் அடித்த 19-வது வீரர் இவராவார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இங்கிலாந்து அணியி்ல் இரண்டு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பேட்டி, ஹமீத் ஆகியோர் நீக்கப்பட்டு ஜேக் பால், ஜென்னிங்ஸ் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர். தொடக்க பேட்ஸ்மேன் ஜென்னிசுக்கு இது அறிமுக போட்டியாகும். இந்திய அணியில் ரகானே, முகமது சமி ஆகியோர் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல், புவனவேஸ்வர் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் 89 பந்தில் 50 ரன்கள் அடித்து தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இந்த அரைசதத்தை சதமாக்கும் முயற்சியில் விளையாடினார்.

    மறுமுனையில் குக் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 46 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 1 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களாக இருந்தது. அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். இங்கிலாந்து அணி முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 31 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது. ஜென்னிங்ஸ் 65 ரன்னுடனும்,  ஜோ ரூட் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஜோ ரூட் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஜென்னிங்ஸ் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மதிய தேனீர் இடைவேளைக்கு சற்று முன் ஜென்னிங்ஸ் சதம் அடித்தார். இதனால் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 19-வது வீரர் என்ற பெருமையை ஜென்னிங்ஸ் பெற்றார்.

    மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. ஜென்னிங்ஸ் 103 ரன்னுடனும், மொயீன் அலி 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்தபின்பு இருவரும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
    Next Story
    ×