search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்
    X

    மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்

    மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியாவின் முன்னணி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.
    மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் 3 முறை சாம்பியனும், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார்.

    நாளை நடைபெறும் தனது முதல் சுற்று ஆட்டத்தில் சிந்து, சீனாவின் யு ஹானை எதிர்கொள்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தோனேஷியாவின் ஹன்னா ரமாடினை சந்திக்கிறார்.

    இந்தியாவின் முன்னணி வீரர்களான சமீர் வர்மா, காஷ்யப், ஸ்ரீகாந்த், சாய்பிரனீத் ஆகியோரும் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.
    Next Story
    ×