search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாங்காங் ஓபன்: பி.வி. சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    X

    ஹாங்காங் ஓபன்: பி.வி. சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

    ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
    ஹாங்காங்கில் உள்ள கவ்லூனில் ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதி போட்டியொன்றில் இந்தியாவின் பி.வி. சிந்து உள்ளூர் வீராங்கனையான சியூங் கானை எதிர்கொண்டார்.

    ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி. சிந்து ஆட்டத்திற்கு உள்ளூர் வீராங்கனையான சியூங் கானால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் சிந்து 21-14, 21-16 என நேர்செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    கடந்த வாரம் சீனாவில் நடைபெற்ற சீன ஓபனில் பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் பி.வி. சிந்து சீன தைபேயின் டாய் சூ யிங்கை எதிர்கொள்கிறார்.
    Next Story
    ×